Wednesday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாடகை வீடு குறித்து சட்டம் சொல்வதென்ன!?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கும் விதை2விருட்சம்

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
நான் கடந்த 1993-ல் அம்பத்தூர் அயப்பாக்கத்தில் வீடு கட்டி, வாடகைக்கு விட்டேன். தற் போ து, குழந்தைகளின் படிப்பு காரண மாக வீடு எனக்குத் தேவைப் படுவதால், வாடகைக்கு இருப்ப வரிடம் வீட்டை காலி செய்ய சொன்னேன். அவரும் சம்மதி த்து, வெள்ளை அடித்த செல வா க 20,000 ரூபாயையும், நாங்கள் முன்பணமாக பெற்ற தொகை 15,000 ரூபாயையும் பெற்றுக் கொண் டார். அவர் வீட்டைக் காலி செய்வார் என்று நான் காத்திருக்க, என் வீடு தேடி வந்தது ‘ஸ்டே இன்ஜெங்ஷன் ஆர்டர்’! போன் செய்து கேட்ட போது, ‘2 லட்சம் ரூபாய் தந்தால்தான் வீட்டை காலி செய் வேன். அப்படியில்லையெ ன்றால் உச்சநீதிமன்றம் வரையிலும் செல்வேன்’ என்று மிரட் டுகிறார்.

என்னிடம் எதுவும் விசாரிக்காமல் இப்படி ஒரு ஸ்டே ஆர்டரை கோர்ட்டால் தர முடியுமா?

வழக்கு என்று போனால் நியாயம் கிடைக்க வருடங்களாகும் என்கி றார்களே.. இப்போது என் அவசரத்துக்கு பணத்தைக் கொடுத்துத் தான் வீட்டை காலி செய்ய இயலுமா?

வீட்டுக் கடனைக் கட்டிக் கொண்டிருக்கும் என் போன்ற எளி யோருக்குசட்டத்தில் நீதிக்கு இடம் இருக்கிறதா?”

சங்கரராமன் வழக்கறிஞர் கடலூர்,

”பொதுவாக வீட்டை வாடகைக்கு விடும்போது எழுத்துப்பூர்வ ஒப்ப ந்தம் செய்து கொள்வது நல்லது. இதற்கு வீட்டு வாடகை, முன்பணம் (பத்து மாத வாடகையை முன் பண மாகப் பெறலாம்) வாடகைக்கு விடு ம் தேதி உள்ளிட்ட விவரங் களை எழுதி, 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் ‘அக்ரிமென்ட்’ போட்டு, வீட்டு உரிமை யாளரும் வாடகை தாரரும் கையெ ழுத்திட்டு ஆளுக்கு ஒரு ‘காப்பி’ வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் செய்வதால் இருதரப்பினரும் நேரடி யாக நீதிமன்றத்தை அணுகுவதற்கும், கேஸ் போடும் பட்சத்தில் விரைவில் வழக்கை முடிக்கவும் வழிவகுக்கும்.

ஆனால், பெரும்பாலானவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வாய்மொழி உத்தரவில்தான் வீட்டை வாடகைக்கு விடுகின்றனர். இப்போது சட்டப்படி நீங்கள் என்ன செய்யலாம் என்று சொல்கி றேன்..

ஒரு வாடகைதாரரை வெளியேற்ற வேண்டும் என்றால், அதற்கு தகுந்த காரணங்களை தெரிவிக்க வேண்டும். உதாரணத்துக்கு: தொடர்ந்து 3 மாதங்களாக ஒருவர் வாடகை கட்டத் தவறும் பட்சத் தில் ‘வேண்டுமென்றே வாடகை கட்டத் தவறுகிறார்’ – என்று கார ணம் காட்டி, ‘அவர் குடியிருக்கும் இடத்தை காலி செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம்.

வாடகைக்கு விட்டிருக்கும் இந்த வீட் டைத் தவிர வேறு எந்த சொத்தும் உங் களுக்கு இல்லை என்றால், ‘நான் குடியேற வேண்டிய நிர்பந்தம் ஏற் பட்டு ள்ளது’ என்பதைக் காரணம் காட்டி வாடகை தாரரை வெளியேறச் செய்ய லாம். வீட்டை இடித்துக் கட்டுதல், வீட்டுக் கடனை அடைக்க சிரமப்படுதல் போன்ற மேலும் சில வலுவான காரணங் களை சொல்லியும் வெளியேறச் செய்ய முடி யும்.

மற்றபடி, சட்டத்துக்குப் புறம்பாக வாடகைதாரரை குடியிருக்கும் இடத்திலிருந்து வெளியேற்ற முடியாது. அவ்வாறு வெளியேற்றும் முயற்சியை வீட்டின் உரிமையாளர் மேற்கொண்டால், வாடகை தாரர் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு கோரலாம். ‘வீட்டின் உரிமையாளர் சட்டத்துக்குப் புறம்பாகத் தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கிறார்’ என்பதற்கான ஆதாரங்களை வாட கைதாரர் சமர்ப்பிக்கும் பட்சத்தில், நோட்டீஸ் இல்லாமலேயே உரிமையாளருக்கு ‘இடைக்கால உறுத்துக் கட்டளை’ எனப்படுகிற ‘இன்ஜெங்ஷன் ஆர்டர்’ (மிஸீழீuஸீநீtவீஷீஸீ ஷீக்ஷீபீமீக்ஷீ) வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. இதைத்தான் வெகு ஜன மொழியில் தடை உத்தரவு (அ) ஸ்டே என புரிந்து கொள்கிறோம்.

ஆனால், இன்ஜெங்ஷன் ஆர்டர் வேறு. ஸ்டே வேறு! ‘இன்ஜெங்ஷன் ஆர்டர்’ என்பது நடக்கப் போகிற ஒரு விஷயத்தை நிறுத்துவது.. நடந்து கொண்டிருக்கிற ஒரு விஷயம் தொடராமல் நிறுத்தி வைப்பது ‘ஸ்டே’.

தாங்கள் ‘இன்ஜெங்ஷன் ஆர்டர்’ பெற்றிருக்கும் பட்சத்தில் நீதி மன்றத்துக்குச் சென்று வாடகைதாரர் போட்டிருக்கும் வழக்கின் மீது தகுந்த பதிலைக் கொடுத்து, வழங்கப்பட்ட ‘இன்ஜெங்ஷன் ஆர்டரை’ இடைக்காலமாக நீக்க முடியும். பிறகு, அவரை வெளியேறச் சொல்லி நீங்கள் வீட்டில் குடியேறலாம்.

பொதுவாக, நீதிமன்றங்களுக்கு வழக்குகள் வருகிறபோது ‘இரு தரப்புக்கும் தகுந்த வாய்ப்பளிக்க வேண்டும்’ என்ற நோக்கத்தினால் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதற்காக, ‘உச்சநீதிமன்றம் வ ரை செல்வேன்’ என்கிற அச்சுறு த்தலுக்கெல்லாம் நீங்கள் பயப் பட வேண்டியதில்லை.

‘பணம் கொடுத்துதான் வாடகை தாரரை காலி செய்யவேண்டும்’ என்பது சட்டத்துக்கு விரோத மானது. ஒரு வழக்கறிஞரை சந்தித்து சமாதான முறையில் தீர்வு கண்டால் கால தாமதத் தையும் மன உளைச்சலையும் தவிர்க்கலாம். சமாதானமாக வழக் குகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் தற்போதைய நீதி மன்ற ங்களின் மனோநிலையும்கூட. பிரச்னைகளைக் கண்டு பயப்பட வேண்டாம். அவற்றை நேரடியாக சந்தித்து, சுமுகத்தீர்வு காண முயலுங்கள்.”
—————————————————————————————————-

வரலட்சுமி அம்மாளிடம் வீடு வாடகைக்கு வேண்டுமென்று வந்து கேட்ட சேகருக்கு, மாத வாடகை பேசி, வீட்டில் உள்ள போர்ஷனை வாடகைக்கு விட்டார்கள். அக்ரிமெண்ட் பற்றிய விவரம் தெரியாததால், சேகரின் வாய்வழி உறுதி மொழியை அப்படியே நம்பிவிட்டார் வரலட்சுமி அம்மாள். ஆனால், இரண்டே மாதத்தில் சேகர், அந்தப் போர்ஷனில் ஜெராக்ஸ் கடை வைத்து வியா பாரத்திற்குப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டான்.

வீட்டு உபயோகத்திற்காக என்று மின்சார கனெக்ஷனை வாங்கி வியா பாரத்திற்குப் பயன்படுத்தி யதால் வரலட்சுமி அம்மாளுக்கு எச்சரி க்கையுடன் அபராதமும் விதித்து விட்டது மின்சார வாரியம்!

வாடகைக்கு வீடு கேட்டு வரும் சேக  ரைப் போன்ற ஆட்களை எப்படிச் சமாளிப்பது?

இதற்காகத்தான் சென்ற இதழில் சொ ன்னது போல், அக்ரிமெண்ட் அவசி யம். அக்ரிமெண்டில் சட்டத்திற் குட்பட்ட ஷரத்துகளைப் போட வேண் டும். அதில் ‘குடியிருக்க’, ‘வியா பாரத்துக்கு’ போன்ற விஷ யங்கள் இடம்பெற்று பெற்று விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடு க்க வசதியாக இருக்கும். அக்ரிமெண்ட் இல்லாவிட்டால்கூட சட்டப் படி நடவடிக்கை எடுக்க லாம்.

வீட்டுச் சொந்தக்காரர்கள் திரும்ப தங்களுக்கே வீடு வேண்டும் என்று கீழ்வரும் காரணங்களுக்காக, கோர்ட்டில் கேஸ் போடலாம்.

தன்னுடைய சொந்த உபயோகத்திற்காக வேண்டும்.

வாடகை சரியாக வரவில்லை.

கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், வீட்டை ரிப்பேர் செய்ய வேண்டும்.

வீட்டை சட்டத்திற்குப் புறம்பான காரியங்களுக்காகப் பயன் படுத் துகிறார்கள்.

ஓரிடத்துக்குப் பல வருடங்களாக, ஒரே வாடகையைத்தான் கொடு த்துக் கொண்டிருப்பார்கள். (குறிப்பாக தனியாரிடமிருந்து லீஸ§க்கு எடுத்து அரசு குத்தகைக்கு விட்டிருக்கும் பெட்ரோல் பங்குகள்) தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி, வாடகையை நிர்ணயம் செய்யச் சொல்லியும் மனுதாக்கல் செய்யலாம்.

இன்னுமொரு முக்கியமான விஷயம், சட்டத்திற்குப் புறம்பான காரியங்களில், தற்போது தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருவது, பரவலாக நடக்கிறது. நான்கைந்து வாலிபர்கள் அல்லது பெண்கள் (உயிரே படத்தில் வரும் மனிஷா கொய்ராலா போல) வேலைக்குப் போவதாகவோ, காலேஜில் படிப் பதாகவோ சொல்லி வீடு எடுத்துத் தங்கி விடுவார்கள். அங்கே இருந்து கொண்டு, தங்களது அமைப்புக ளுக்கு உதவியாக வேலை செய்வா ர்கள். இதைத் தடுக்க அவர்கள் படிக்கும் காலேஜ், வேலை செய்யும் இடங்களிலிருந்து ஃபோட்டோ ஐடெ ன்டியுடன் கடிதம் கொண்டு வந்தால் தான் வீடு வாடகைக்கு என்று தீர்மானமாகச் சொல்லிவிடலாம். இல்லையெனில், இவர்கள் தீவிரவாதிகள்தான் என்று, பிறகு காவல் துறை கண்டுபிடித்துவிட்டால், அவர்களை மட்டுமல்ல… வீட்டுச் சொந்தக்காரரையும், கைது செய்வதுடன், வீட்டையும் சீல் வைத்து விடுவார்கள். பிறகு வீட்டை மீட்க கோர்ட்டில் கேஸ் போட்டு பல வருடங்கள் போராடித்தான் வீட்டைத் திரும்பப் பெற வேண்டும். அதனால் வீட்டை வாடகைக்கு விடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பலருக்கும் பலகாலமாக ஒரு சந்தேம் உண்டு.

பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து ஒரு வீட்டில் குடியிருந்தால் அந்த வீடு நமக்கு சொந்தமாகிவிடுமா?’ என்பதுதான் அது. இது சாதாரண மக்கள் நடுவில் இருக்கும் ஒரு கருத்து. இதற்கு எப்படி சட்டப்படி விளக்கம் கொடுக்கலாம்?

‘‘ஒருவர் மற்றொருவருக்குச் சொந்தமான இடத்தில், அவருக்குத் தெரிந்தே, வாடகையோ, குத்தகைத் தொகையோ கொடுக்காமல், 12 வருடங்கள் தொடர்ந்து இருந்தால் அந்த இடம் குடியிருப்பவருக்கு சொந்தம்’’ என்கிறது சட்டம். இதை ‘அட்வர்ஸ் பொசஷன்’’ (Adverse Possession)’’ என்பார்கள். நடைமுறையில் இது நடக்கிறதா? ஏமாந்த வாயில்லாப் பூச்சிகளாக இருக்கும், சில நிலச் சொந்தக்காரர் களிடம் இது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மற்ற படி, பன்னிரண்டு வருடம் ஒருவர், ஒரே இடத்தில் தொடர்ந்து இருந்தால், அவருக்கு அந்த இடம் சொந்தமாகி விடாது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

5 Comments

  • வெளியூரிலிருந்து வந்து சென்னையில் வேலை செய்யும் ஒருவர் வீட்டு உரிமையாளரிடம் 58 நாட்களுக்கு முன்னர் வீடு காலி செய்யப் போகும் தகவலை தெரிவித்த பிறகும் முன்பணம் வாடகை போக 16,800 மீதி – ஐ வாங்க ஏற்பட்ட நிலை :

    செப்டம்பர் – 5 முதல்

    முதல் பதில் : நீங்க இருந்த வீட்டுல வேற யாராச்சும் வந்து அட்வான்ஸ் தந்தா அத அப்படியே உங்களுக்குக் கொடுக்கிறேன்.

    செப்டம்பர் – 25 முதல் :

    நீங்களே .. தெரிந்தவங்கள யாரயாச்சும் கூட்டி வந்து விடுங்க . அப்படியே பணத்த வாங்கி தந்திடுறேன்.

    தொலைபேசியில் கேட்டபோது …

    அக்டோபர் – 2-ல்

    உங்க பணத்த நான் வாங்கி அப்படியே பாக்கெட்டுல வச்சுகிட்டு இல்ல..வேற யாராச்சும் வந்து அட்வான்ஸ் தந்தா அத அப்படியே உங்களுக்குக் கொடுக்கிறேன்.

    தொலைபேசியில் கேட்டபோது …

    அக்டோபர் – 8-ல் – நீங்க என்ன .. திடீர் திப்புன்னு காலி பண்ணுறேன்னு சொல்லிட்டு வேற வீட்டுக்கு போயிட்டு ..கேக்கிறீங்க. மூணு மாசத்துக்க முன்னாடியே சொல்லணுங்க.. நீங்க..

    கட்.

    தெரிந்தவர்களை அனுப்பிய பிறகு…..

    நேரில்..அலுவலகத்தில்…

    நான் இப்ப அவசரமா போயிட்டு இருக்கேன்.. சாயங்காலம் 5 மணிக்கு வாங்க.

    5 மணிக்கு … தொலைபேசியில் ,

    நான் வெளியே இருக்கேன் வந்திடுறேன்..

    7 மணிக்கு ..

    வெயிட் பண்றீங்களா.. சரி … காலையில ஆபீஸ்லதான் இருப்பேன் ,, வாங்க..

    மறு நாள் காலை :

    என்ன 8 மணிக்கே வந்துட்டீங்க.. பேங்க் எல்லாம் திறக்கவேணாமா..!

    ஆபீஸ் போகணும்னா போயிட்டு 10 மணிக்கா வாங்க.

    10 மணிக்கு .. வெயிட் பண்ணுங்க..

    12.47 – க்கு வாங்க.. இந்தா 12,000 , மீதி தாறேன்.. அடுத்தவாரம் வாங்க

    நவம்பர் 23 – அலைபேசியில் :
    ஊருக்குப் போக வேண்டும் என கேட்ட போது…

    பதில் : எங்கிட்ட சுத்தமா காசு இல்ல…சொன்னா கேளுங்க . அடுத்த மாசம் 1 -ம் தேதிக்கு பிறகு வாங்க , வாடகைப் பணம் பத்து வீட்டுக் காரங்களும் தந்திடுவாங்க. கொடுக்கிறென்.

    அவசரமாக பணம் தேவை யென கேட்டபோது..

    நீங்க அக்கவுண்ட் நம்பர் கொடுத்துட்டு போங்க. அதில நாள போட்டுடுறேன். ATM – ல் எடுத்துக்குங்க

    ATM இல்லை என சொல்ல..

    பதில் : சரி நாளை வாங்க .. ஏதாச்சும் பண்ணலாம்

    நாளை 6 மணிக்கு train sir நு சொல்ல

    பதில் : சரி முன்னாடி கொடுத்துடுறேன்.

    நவம்பர் 24 – 4.15 மணி அலைபேசியில் :
    ஊருக்குப் போக வேண்டும் என கேட்ட போது…

    ஆபிஸ் ல ஒரு தம்பி இருக்கானா அவங்கிட்ட கொடுங்க..

    யாருமே இல்லை..என சொல்ல

    சரி வெயிட் பண்ணுங்க நான் தம்பிகிட்ட தர சொல்லுறேன். நான் வெளியில இருக்கேன்.

    மாலை 6.40 ,,, சார் உங்ககிட்ட கொடுக்கச்சொல்லி கொடுத்தாரு.

    என்ன செக்கா…என்ன 4000 ரூபாய்தான் போட்டிருக்கு, மீதி..

    சாக்கடை clean செய்ய -500 ரூ கறண்ட் பில் – 300 ரூ பேலன்ஸ் .

    நவம்பர் 28 . அலைபேசியில்..

    செக் திரும்பி வந்திருக்கு . பேலன்ஸ் இல்லையாம்.

    சரி நாள 9 மணிக்கா ஆபீஸ் க்கு அந்த செக்க கொண்டு வாங்க.

    நவம்பர் 29 அலைபேசியில்;

    ஆபீஸ் -ல் இருக்கிறீர்களா.. ஆபீஸ் லிருந்து பெர்மிசன் போட்டு வர வேண்டும் என கேட்க போன் போட
    லாங் றிங்க் ஆகி கட் ஆக…

    1327 முறை முயற்சி…

    4.50 க்கு அவர் வீடு தேடி போக…

    அவர் மனைவி பதில் : அவர் வெளியே போயிருக்காரு … 8 மணிக்கா வாங்க

    8.00 மணி :

    அவர் தாயார் பதில் : ரொம்ப சிக்குல கிடக்கான்..இப்ப பேசமாட்டான். நாள காலையில 6.00 மணிக்கா வாங்க

    நவம்பர் 30 : காலை 6.00 மணி :

    அவர் தாயார் பதில் : அவன் தூங்குறான்,

    சில நிமிட காத்திருப்புக்குப் பின்,

    6.18 : சார்.. என்ன பிராபிளம் .

    செக்க தாங்க .. 9.00 மணிக்கா ஆபீஸ் வாங்க தந்திடுறேன்..

    7.4 மணி சந்திப்பில் ,,,,

    சார் உங்களுக்கு கறண்ட் பில் 405 ரூபாய். பஸ்ட் 300 ரூபான்னு சொல்லிட்டேன்.. 9 மணிக்க அப்புறமா வாங்க .. இன்னு தந்திடுறென்.

    காலை 9.30 மணி

    வாங்க சார்.. உள்ள போய் வாங்கிங்க…

    3900 சரியா இருக்கா.. ஓ.கே

    ( இடம் : கன்னடபாளையம் , சக்சஸ் இல்லம், ஆவடி, சென்னை- 62.)

    ————- இப்படிப்பட்ட தொல்லைகளின்றி மக்கள் வாழ அரசு உதவுமா…?

  • abdul

    வண்க்கம்

    என் தப்பனார் தன் நண்பருக்கு வீட்டை வாடகைக்கு எந்தவித ஒப்பந்த்ம் இல்லாமல் கொடுத்தார். அவர் 3 வருடம் வாடகை நல்ல விதமாக கொடுத்து வந்தார். ஆனால் தற்போது 1 வருடம் காலம் வாடகை கொடுக்கவில்லை , என் தப்பனாரும் நட்பின் அடிப்படையில் அதை பெரிது படுத்தவில்லை
    திடிரென என் தப்பனாரும் இறந்த்து விட்டார். நான் எங்க்களிடம் வாடகைக்கு இருக்கும் என் அப்பாவின் நண்பரிட்த்தில் வீடு வேண்டும் காலி செய்யுங்கள் என்று கேட்டால் அவர் 80 ஆயிரம் ருபாய்க்கு வீட்டில் பராமரிப்பு செலவு செய்துள்ளதாகவும் அதை கொடுத்தால் காலி செய்வதாக கூருகிறார்
    ஆனால் எங்களிடம் வீடு பராமரிப்புக்கு எந்தவித அனுமதியும் பெறவில்லை. அவர் அனுமதியின்றி செலவு செய்த்தற்க்கு நாங்கள் எப்படி பொருப்பாக முடியும். ஆனால் அவர் 20 ஆயிரம் மதிப்புக்கு தான் உண்மையில் செலவு செய்யதிருக்கிறார். 80 ஆயிரம் அநியாயமாய் கேட்கிறார்.
    வீட்டை எப்படி காலி செய்ய ? நல்ல விபரம் கொடுங்கள் சார்
    40 ஆயிரம் வரை பேரம் பேசியாச்சி அவர் ஒத்து கொள்ளவில்லை
    1. வீட்டுக்கு வாடகை ஒப்பந்த பத்திரம் எதுவும் கிடையாது
    2. கரண்டு பில், தண்ணீர் பில் அவர் தான் கட்டி வருகிறார்
    3. வீட்டு பராமரிப்புக்கு எந்தவித ஒப்பந்தமும் போடவில்லை
    4. 5 வருடமாக குடியிருக்கிறார்
    5. வீட்டு தீர்வை நாங்கள் தான் கட்டுகிறோம்
    6. வாடகை ரசிது எதுவும் மாதம் மாதம் நாங்கள் கொடுக்கவில்லை

  • G.Nagarajan

    வணக்கம் ,,நான் ஒரு அரசு ஊழியர்.நான் கோவை மாவட்டம் வடவள்ளியில் சொந்த வீட்டில் வசித்து வருகிறேன்.முதல் தளத்தை வாடகைக்கு விட்டும் இருக்கிறேன்.அது மட்டுமில்லாமல் பக்கத்து தெருவில் ஒரு அபார்ட்மெண்ட் கட்டி அதில் உள்ள பத்து வீடுகளையும் வாடகைக்கு விட்டுள்ளேன்.தற்போது என் வீட்டில் குடியிருக்கும் ஒரு பொதுநலவாதி …நீங்கள் பத்து வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும் விஷயத்தை கார்ப்பரேசனில் தெரிவித்து விடுங்கள்,இல்லையென்றால் உங்கள்மீது வருமானவரி மற்றும் நிறைய பிரச்னைகள் வரும் என்று பயப்படுத்துகிறார்.வீட்டை குறைந்த வாடகைக்குவிட்டிருப்பது போல அக்ரிமென்ட் போட்டு ..அதேபோல குறைந்த வாடகை ரசீது கொடுத்தால் இந்த பிரச்னை வராது என்கிறார்.அப்படி செய்யலாமா.. நான் வங்கியில் கடன் வாங்கித்தான் வீடு கட்டினேன்.எனக்கு இதைத்தவிர வேறு சொத்துக்கள் எதுவும் இல்லை.எனக்கு எப்படி வருமானவரி பிரச்சனைவரும்.அப்படி வராமல் இருக்க நான் என்ன செய்யவேண்டும்.

  • K.Balachndar

    ஐயா ,,நான் சேலம் மாவட்டத்தில் வசித்துவருகிறேன் என்னுடைய சொந்த வீட்டில் எலக்ட்ரிகல் கடை வைத்து பிழைத்து வருகிறேன்.தற்போது நான் குடியிருந்து வரும் வீடு.எனக்கு தாய் வழியில் வந்தது..எனக்கு 2400 சதுர அடியில் .காலி நிலம் இருக்கிறது.அதில் வீடுகட்டி வாடகைக்கு விட இருக்கிறேன்.வங்கியில் லோன் ஏற்பாடு செய்து செய்து கொண்டு இருக்கிறேன்.வீடு கட்டி வாடகைக்கு விட்டால் இன்கம்டாக்ஸ் பிரச்னை வருமா…வீட்டை வாடகைக்கு விடுவது பற்றி முனிசிபாலிட்டிக்கு தெரிவிக்க வேண்டுமா…வருமானவரி வராமல் இருக்க என்ன வழி.

  • சீனிவாசன்

    சாா் வணக்கம். என் பெயர் சீனிவாசன். நான் ஒரு வீட்டிற்கு பாேகியம் ரூ :550000 தாெகைக்கு மூன்று வருட காலத்திற்கு ரூ :20 பத்திரத்தில் ஓப்பந்தம் எழுதி இருக்கிறேன்.
    தற்ச்சமயம் வீட்டுக்காரா் எனக்கு தெரியாமல் வீட்டை விற்று விட்டார்.வீட்டை வாங்கியரும் குடியிருக்கும் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை.
    வீட்டை வாங்கியவர் வீட்டை காலி செய்ய சாெல்கிறார் என்னுடைய பணத்திற்கு இப்பாெழுது யாா் பதில் தருவது? தயவு செய்து விளக்கம் தாருங்கள்

Leave a Reply