Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ந‌லம், நலமறிய ஆவல்

அறிவீரோ! அறிவீரோ!

வேண்டாமே “டங்க் கிளீனர்’. பல் தேய்ப்பது சரிதானா!? என்று என்றாவது நீங்கள் யோசித்ததா வது உண்டா? காலை எழுந்தவு டன், பிரஷ் ஷில் பற்பசையை வைத்து, “சர்ர்… சர்ர்’ என்று, “விட்டேனா பார்’ என்பது போல, பற்களுடன் சண்டை போடுபவ ரா நீங்கள்?

பல் தேய்க்கும் போது, அழுத்தித் தேய்ப் பது சரியே அல்ல; அதிலும், சிலர், ரத் தம் வந்தால், சுத்தமாகி விட்டது என்று நினைத்துக் கொள்கின்றனர், அது மகா தவறான எண்ணம்.

* பிரஷ்ஷை முதலில் வெளிப்புற மேல் பற்களில் வைத்து தேயு ங்கள். அப்புறம் கீழ்ப்பக்க வெளிப்புற பற்கள்.

* இது முடிந்ததா…? அ டுத்து, உள் பக்க மேல் புற பற்கள், அடுத்து கீழ் ப்புற பற்களில் தேய்க்க வேண்டும்.

* உணவுகளை கடிக்கும் பற் களின் மேற்பரப்பை சுத்தம் செய்ய வேண் டும்.

* அழுக்கு சேர்ந்தால், வாய் நாற்ற மடிக்கும். அதனால், நாக் கில் சேரும் படிமத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதற்காக “டங்க் கிளீனர்’ பயன்படுத்தவே கூடாது.

* பற்களுடன் உள்ள ஈறுகள் தான், ரத்த ஓட்டத்துக்கு முக்கி யம். அதை கடைசியாக இதமாக மசாஜ் செய்ய வேண்டும்.

சுற்றி சுற்றி பிரஷ்ஷை தேய்ப்பதுடன், மேலிருந்து கீழ் தேய்த்து, உள், வெளி ப்புற பற்களில் உள்ள துகள்களை நீக்கலாம்.

கண்ட கண்ட ஐஸ்கிரீமா?

குழந்தைகளுக்கு பிடித்ததே ஐஸ்கிரீம் தான். அதிலும், நல் ல சத்து க்கள் இல்லாமல் இல் லை. ஆனால், கண்ட கண்ட ஐஸ்கிரீம் வாங்கி தந்தால், அதை சாப்பிடும் குழந்தை களுக்கு தான் பிரச்னை.

அதெப்படி கண்டுபிடிப் பது? கடையை பார்த்தாலே, பிரா ண்டை பார்த்தாலே தெரியும். அப்படியில்லாவிட்டால், குழந் தைக்கு தொண்டை கட்டி விட்டது தெரிந்தாலே, கலப்பட ஐஸ்கிரீம் என்ப தை தெரிந்து கொள்ளலாம்.

போதுமான சுகாதார பாதுகாப் புடன் இல்லாத ஐஸ்கிரீம் என் றால், தொண்டை காட்டிக் கொடுத்துவிடும். வயிற்று பிரச்னை வரும். சிறுநீர் கோ ளாறு வரும். மற்ற உணவு களை விட, ஐஸ்கிரீமில் தான் உயிருள்ள பாக்டீரியா க்கள், அப்ப டியே உடலுக்குள் போய்விடும். அது பிஞ்சு உடலில் போக அனுமதிக்கலாமா?

உடல் குண்டாக இருக்கணுமா?

நீங்கள் இளம் வயது தானா? உடல் பரு மனா? அப்படியா னால், சிறிய சிறிய உட ற் பயிற்சிகள் இதோ:

* தூக்கம் வராமல் படுக்கையில் சும்மா வாவது படுக்கா தீர்கள்.

* எதற்கெடுத்தாலும் உட்காருவது, சாய் ந்து கொள்வதை தவிரு ங்கள்.

* நின்றபடி செய்யும் வேலையை உட் கார் ந்து செய்யாதீர்கள்.

* நடந்தபடியே சிறிய வேலையை செய்ய முடியும் என்றால், அதற்காக நிற்காதீர்கள்.

* வேகமாக நடக்க முடியும் என்றால், மிதமா நடக்காதீர்கள்.

* சாப்பிட்ட காபி டம்ளரை நீங்களே, சமையல் அறையில் கொண்டு போய் வையுங்கள்.

* உங்கள் சிறிய வேலைகளையும் கவுரவம் பார்க்காமல் செய் யுங்கள்.

* மார்க்கெட் போகவும் கார், ஸ்கூட்டர் பயணம் வேண்டாம்.

* ஆபீசில் “சீட்’டில் உட்கார்ந்து விட்டால், எழாமல் இருக் காதீர்கள்.

* மாடிப்படியில் ஏற முடியும் என்றால், “லிப்ட்’ பயன் படுத்தாதீர்கள்.

* தண்ணீர் வேண்டுமானால், வ யதான தாயிடம் “ஆர்டர்’ செய் யாதீர்கள்.

* ஸ்கூட்டரை துடைப்பது, தோ ட்டவேலை செய்யுங்கள்.

* மனைவியின் வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படி எல்லாம் செய்தால், அப்புறம் எதற்கு தனி உடற் பயிற்சி? இதிலேயே உடல் பருமன் குறைந்துவிடுமே!

முப்பதிலாவது விழிச்சிக்குங்க

சிறிய வயதிலேயே, டீன்ஏஜில் குண்டாக இருந்தால், அதற்கு உடற் பயிற்சி, யோகா போன்றவை பலன் தரும். ஆனால், “டீன்ஏஜில்’ கண்டபடி சாப்பிட்டு உடல் பருமன் போட்டு விட்டால், அப்போ தாவது விழித்துக் கொள்வது நல்லது.

உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்?

* நீங்கள் முப்பது வயதை தாண்டியவரா?

* உடல் பருமன் அதிகமாக இருப்பதாக உணர்கிறீர்களா?

* குடும்பத்தில் சர்க்கரை வியாதி யாருக் காவது இருந்ததா?

* சாட், பாஸ்ட் புட் சாப்பிடும் வழக்கம் உள்ளவரா?

* ரத்த அழுத்தம் சற்று அதிகம் தானா?

இவை தான் அறிகுறி, உடனே டாக் டரிடம் செக்கப் செய்து கொண் டால் போதும், சர்க்கரை நோய் வரு மா என்பது தெரிந்து விடும். இல்லை என்று தெரிந்ததும், மீண்டும், சாட் அயிட்டங்களில் மூழ்கி விடாதீர்கள், உஷார்.

அப்புறம், நாற்பதில் அவதிப்படப் போவது நீங்கள் தான். அப்போது, எதையுமே சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டு விடும். உங்கள் குஷி எல்லாம் பறந்துவிடும். அதனால், இருபதில் இருந்தே, வாயை கட் டுங்கள், முடிந்தவரை!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: