ஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ, காத லியோ கீழ்க்கண்ட 5 விஷயங்க ளை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது நல்லது…
1. `நாம கொஞ்சம் பேசணும்’
உங்களவர், உலக சாம்பியன் வேக த்தில் ஓடி மறைய வேண்டும் என் று நினைக்கிறீர்களா? மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறி னால் போதும். `ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகி றாள்’ என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் தலைமறை வாகி விடு வார்.
`பேசுவது’ எல்லாம் கடைசியில் அழுகை, ஆத்திரம், தீர்வில்லாத நிலையில் தான் முடியும் என்று ஆண்களுக்குத் தெரியும். பெண்கள் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்று ஆண் களுக்குத் தெரியாது.
அப்போது கன்னாபின்னா வென்று நடக்கத் தொடங்கி விடுவார்கள். எதையும் மனந்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கட்டு ரைகளில் சரியாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் அவ்வ ளவாக ஒத்து வராது.
2. `நீங்க அம்மா பையன்’
பெண்கள் தங்கள் துணைவருடன் உறவு சீர் கெட விரும்பினால், அவரின் அம்மா வை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போ தும். `பாருங்க… உங்க அம்மா இப்படிப் பண்றாங்க’, `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான்’ என்றெல்லாம் சொல்வ தை எந்த ஆணும் விரும்புவ தில்லை.
பெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மா வைப் பிடிக்குமோ, அப்ப டித்தான் ஆண் களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல் வதை அவர்கள் ரசிப்பதில்லை. அதே போல, `நீங்க அம்மா பிள்ளை… உங்க அம்மா சொல்றது தான் உங் களுக்கு வேத வாக்கு’ என்று கூறுவதையும் விரும்புவதில்லை.
பெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம் மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொ ள்ள வேண்டும். அது, பெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது உத வும்.
3. `உங்க நண்பரைப் பாருங்க’
`உங்க நண்பரைப் பாருங்க… எவ்வளவு ஸ்டைலா இருக்காரு! நீங்களுந்தான் இருக்கீங்களே, தொந்தியும் தொப்பை யுமா…’ என்று பேசும் பெண்கள் இருக் கிறார்கள். இவர்கள் தங்கள் துணைவ ருடான உறவுக்குக்குத் தாங்களே வே ட்டு வைப்பவர்கள்.
இப்படி பேசத் தொடங்குவது, `அப்படின் னா நீ `அவனை’யே காதலி ச்சிருக் கலா ம்’ அல்லது, `நீ அவனையே கல் யாணம் பண்ணிக்கிட்டி ருக்கலாம்’ என்ற வெறு ப்பான கத்தலில் தான் முடி யும். பெ ண்கள் தங்கள் கணவரின் அல் லது துணைவரின் நண்பரிடம் வெளிப்படை யாகக் காணாத பல குறைபாடுகள் இருக்கக்கூடும்.
கண்ணில் தெரிவதை மட்டும் கண்டு, வியப்பது அறிவீனம். பெண்கள் எப்படித் தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லையோ, அதேபோலத்தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.
4. `நீங்க எப்பவும் இப்படித்தான்… திருந்தவே மாட்டீங்க’
முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரு ம்புவதில்லை. அதிலும் அவர்களே தங்களி டம் இருந்து துறக்க விரும்பும் பழக்க ங்களை, குறைபாடுகளை அடிக்கடி குத்திக் காட்டுவதை தாங்குவதே இல் லை. ஒரு வரைப் பற்றி, `இவர் இப்படித்தான்’ என்று வெகு சீக்கிர மாக முடிவு கட்டிவி டுவது பெண்களின் குறைபாடு.
எல்லாருமே தவறு செய்வது இயல்பு. சிலருக்கு இயல்பாகவே சில தவறுகள் சிலமுறை நேர்ந்துவிடும். அதுகுறித்து அந்த ஆணே வருத்தத்தில், குற்ற உணர் வில் இருப்பார். அப்போது, ஆறுதலாக இருப்பதுதான் பெண் துணையின் மீதான மதிப்பை ஆணுக்கு உயர்த்தும்.
மாறாக, நொந்த வேளையில் `லந்து’ செய்வது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். `இப்பல்லாம்…’ என்ற வார்த்தையையும் தவிர்க்க லாம். `இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி அன்பாயில்ல…’ என்று மூக் கைச் சிந்துவதால் பயனில்லை.
5. `தலையெல்லாம் நரைச்சுப் போச்சு’
மத்திய வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலையில் நரைமுடிகள் தலைகாட்டத் தொடங்குமë. அவற்றை `இளநரை’ என் றெண்ணிச் சமாதானம் அடைவது ஆண்க ளின் வழக்கம்.
அதுகுறித்து அதிகம் சுட்டிக்காட்டுவதும், `உடனே சலூனுக்கு ஓடிப்போய் `டை’ அடி ச்சுட்டு வாங்க’ என்று நெட்டித் தள்ளுவதும் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
`கல்யாணத்துக்கு முன்னால கொடியிடை யா இருந்தே… இப்போ தடியிடையா ஆயி ட்டே…’ என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமில்லையா?