Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண், பெண் இருவருக்கும் சில மருத்துவ அழகுக் குறிப்புகள்

* கோடையில் சருமம் எளிதில் வற ண்டுபோய் விடும். அதை தடுக்க தின மும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங் கள். வறண்ட சருமம் நீங் கி தோல் பொ லிவு பெறும்.

* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன் றாக மசித்து, அதனுடன் சிறி து தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவ ற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.

* தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மா றும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மாறி, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.

* வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்ப டும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப்படுத்தும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறை ய பப்பாளிப் பழச்சாறை முக த்தில் தடவவும். எக்காரணம் கொண் டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிக மாகும். மேலும் முரு ங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

* கோடை வெயிலில் நாக்கு மட்டுமல்ல தோல் வறட்சியும் ஏற்படும். இதற்கு பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் மினரல் வாட்டரை அடிக்கடி சாப்பிட வும். இதனால் தோல் வறட்சி தடுக்கப் படும். உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு தோல் பள பளப்பா கவும் மாறும். கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.

* கோடை காலத்தில் பாத வெடிப்பு அதிகமாக ஏற்படும். இதற்கு வெ ங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங் களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிப்படியாக மறையும். பெரும் பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடை யும், கண்ணுக்கு கண்ணா டியும், காலுக்கு செருப்பும் அவ சியமாகும்.

* உடம்பில் இருந்து அதிக மான அளவு வியர்வை வெளி யேறுவதைத் தடுத்தால் வேர் க்குருவைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித் தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர் வை நின்ற பிறகே குளி க்க வேண்டும். அதிக அளவு சோப்புகளையும் கோடை காலத் தில் பயன்படுத்த வே ண்டாம். அதிகமாக வியர்க்கும் போ து பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வே ண்டும்.

* கோடை காலத்தில் அதிகம் பாதி க்கப்படுவது சருமம்தான். வெள் ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள் வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

* வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற் றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப் பாக அடிக்கடி மோர் மற்றும் இள நீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத் தில் எண்ணை பதார்த்த ங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடி நீரையும் அதிகம் குடிக்கலாம்.

* வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியா வாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல் லது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.

* ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய் த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

* வறண்ட சருமத்தைக் கொண்ட வர்கள் வெயில் காலத்தை எண் ணி அதிகம் கவலை கொள்ள வேண் டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்ட வர்க ளுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க் கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அதனால் அடிக்கடி உடம்பை கழுவவும்.

* கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பி டுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: