Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் காதலை அளவிட (ஒரு சுய பரிசோதனை கேள்வி-பதில்)

காதல் புனிதமானது. புதிரானதும் கூட. ஆனால் என்றும் புதிதானது. காதலிப்பவர்களுக்கு இடையில் உள்ள உறவு எப்படி இருக்கிறது என்பதை அளவிட இங்கு ஒரு சுயபரி சோத னை கேள்வி-பதில் தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் உங்கள் காதலின் ஆழத்தை அளவிட்டுக் கொள்ளலாம். புதிதாக காதலிக் கத் தொடங்கினால் உங்கள் துணையை எப் படி கவர்ந்திழுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

1. உங்கள் காதலரை சந்தித்தால் எதைப்பற்றிப் பேசிக் கொண்டு இருப் பீர்கள்?

அ. பணச் செலவு, சமுதாய நிலவரம், உயர்ந்த வாழ்க்கை கனவுகள் பற்றி…

ஆ. காதலரின் திறமைகள், வளர்ச்சி பற்றி..

இ. நீ நல்ல பையன்/ பொண்ணு போன்ற புகழ்ச்சி

 2. உங்கள் காதலியை எங்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?

 அ. புதிதாக தொடங்கப்பட்ட ரெஸ்டாரண்ட், கிளப்

ஆ. பாதுகாப்பான மற்றும் பேசிக் கொண்டிருக்க வசதியான சிற்றுண்டி சாலை, பார்க்

இ. குடும்ப உணவகத்துக்கு நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் அழைத்துச் செல்வேன்.

3. பெற்றோருடன் சென்றிருக்கும்போது தற்செயலாக உங்கள் காதலரை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?

அ. ஜாடை செய்வேன், ஆனால் யாரென்று காட்டிக்கொள்ள மாட்டேன்.

ஆ. நான் உன்னை இங்கு சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று வியப்பு காட்டுவேன்.

இ. ஏற்கனவே தெரிந்தவர்போல அவரிடமும் பேசுவேன்.

4. அவர் உங்களுக்குத்தான் என்று நிச்சயமானால் உங்கள் முதல் திட்டம் என்ன?

அ. தொட்டுத் தொட்டுப் பேசுவேன், உறவு வைத்துக் கொள்ள சம்மதமா என்று கேட்பேன்.

ஆ. கைகளை பின்னிக்கொண்டு ஷாப்பிங் அழைத்துச் செல்வேன். நண்பர்கள் முன் அழைத்துச் சென்று உரிமை கொண்டாடுவேன்.

இ. என்னைப் பற்றி அவள் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்வேன். சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டி இருப்பதை விளக்குவேன்.

5. உங்கள் பிறந்த நாள் விழாவுக்கு உறவினர்களை அழைக்கிறீர்கள், அப்போது…

அ. எல்லோரையும் அழைப்பதுபோல் காதலரையும் அழைப்பேன். ஆனால் கண்டுகொள்ள மாட்டேன்..

ஆ. நிச்சயம் அவருடன் தனியாக இருக்கும்படி திட்டமிடுவேன்.

இ. உறவினர்களுடன் இருந்தாலும் அவ்வப்போது அவளை தனியே சந்தித்து பேசுவேன்.

6. காதலி எந்த விதத்தில் உங்களுக்குப் பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்கள்?

அ. பார்வைக்கு அழகானவர், படுக்கைக்கு பொருத்தமானவர்.

ஆ. எங்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. என்னை புரிந்து கொண்டு செயல்படுவார்.

இ. எங்கள் குடும்பத்துக்கு பொருத்தமானவர்.

7. காதலரை நினைவூட்டும் மிகப்பெரிய விஷயம் எது?

அ. மற்ற காதலர்களின் நெருக்கங்களை காணும்போது.

ஆ. அவர் என்னுடன் பேசிய பேச்சுக்கள், பகிர்ந்து கொண்ட எஸ்.எம்.எஸ்.களை பார்க்கும் போது…

இ. விழாக்களில் எடுத்த புகைப்படங்ககளை பார்க்கும் போது…

* உங்கள் பதில்களில் மிகுதியாக `அ’ விடை இருக்குமானால்…

உங்கள் காதலில் மோகம் மிகுந்திருக்கிறது. ஈர்ப்பால் மட்டும் உங்கள் காதல் அரும்பி இருக்கிறது. உடல் சார்ந்த தேவைக்காக நேசிக்கும் உங்கள் மனநிலை மாற வேண்டும். உடல் சார்ந்த உறவு மட்டும் காதலுமல்ல, வாழ்க்கையும் அல்ல.

உண்மையான காதல் என்பது எல்லாவற்றுக்கும் முன்னுரிமை கொடுக்கும். விட்டுக்கொடுக்கும். எதிர்பார்ப்பும், நம்பிக்கை குறை வும் இருக்காது. உங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் நல்ல காதலும், சிறந்த உறவுகளும் அமையும்.

* “ஆ” விடை அதிகமாக வருபவர்களுக்கு…

மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு உங்கள் காதல் ஆச்ச ரியமானது. அன்பு வழியில் அனுபவப்பூர்வமாக பயணிக்கிறீர்கள். சரியான புரிதலுடன் கூடிய விட்டுக்கொடுத்தலும், எல்லையில்லா நேசமும் உங்கள் காதலை மேலும் பெருகச் செய்யும். பாராட் டுக்கள்.

* விடைகளில் `இ’ மிகுந்திருக்கும் உங்களுக்கு…

ஒரு ஈர்ப்புடன் பழகும் முதல் நிலையில் இருக்கிறீர்கள். காதலில் இது இரண்டும் கெட்டான் நிலை. அவர் மீது விருப்பம் இருந்தாலும் அது காதலா என்பது சந்தேகமே. பல விஷயங்களை எதிர் பார்க் கிறீர்கள், பழகுகிறீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு ஈடானால் மட்டும் நீங் கள் இன்னும் நெருக்கம் காட்டுவீர்கள். நேசம் என்பது எதிர்பா ர்ப்புடன் வருவதல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: