Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உறக்கம் தரும் உணவுகள்

சில உணவுப் பொருட்கள் நல்ல உறக் கத்தைக் கொடுக்க உதவி செய்கி ன்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்ப வர்கள் முத லில் உங்கள் உணவுக் கட்டுப் பாடு குறித்து அக்கறை செலுத்த வே ண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உண வினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக் கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்த த்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத் திருக்க உதவுகிறது. இந்த படுக்கை நேர சிற்றுண் டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட் டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப் பிட்டுவிட்டு உற ங்கச் செல்லுங்கள்.

தேநீர்: உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர் ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகை கள் உறக்கத் தைக் கொடுக்கக் கூடியவை. அந்த வகை யில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத் தின் முன் னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்ப ட உதவி செய்கிறது.

வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய் கிறது. அத் தோடு இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது. இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்ப டுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமை தியான ஹோர்மோன் களுக்கு அவசிய மானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.

பால்: பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப் டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வ தற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய் கிறது.

ஓட்ஸ்: நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர் கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப் பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவ தற்கும் உதவி செய்கிறது.

இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ் பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகிய வையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிக மாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அத ற்குப் பதிலாக வாழைப் பழம் போன்ற பழங்களை சேர்த்துக் கொள் ளப் பாருங்கள்.

செர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம் (ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லு ங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன் சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெல டொனின் செர்ரிப் பழங் களில் அதிகம் காணப் படுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: