தேர்தல் முடிவு தெரிவதற்கு முன், ஒரு கருத்துக் கணிப்பை நம்பி ராணாவாவது காணாவாவது என வாய்க்கு வந்த படி உளறிய வடிவேலுவுக்கு, அந்த ஒரு வார்த் தை எந்த அளவு பாதிப்பை ஏற்படுத் தும் என்பது அடுத்த நிமிடமே புரிந்து விட்டது.
அடடா ஒரு ‘ஃப்ளோல’ சொல்லி மாட்டிக்கிட்டே னே என தவித்தவர், எப்படியாவது சூப்பர் ஸ்டா ரைச் சந்தித்து தனது நிலைமை யை விளக்கிச் சொல்லி மன்னிப்பும் கேட்டு விடத் துடித்தார். ஆனால் அதற்கும் வழியில் லாமல் போய் விட் டது, ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டதால். அவர் இரண்டாம் முறை இசபெல் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டபோதே நேரில் பார்க்க எவ்வளவோ முயற்சிகளை மேற் கொ ண்டும் பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகு வீட்டுக்குத் திரும்பிய ரஜினியைப் பார்க்க பார்வையாளர்கள் யாரும் அனுமதிக் கப்படவில்லை.
தேர்தல் முடிவுக்குப் பிறகு மீண்டும் ராமச்சந்திராவில் ரஜினி சிகிச்சைக்குச் சேர்ந்துவிட, இந்த முறை எப்படியா வது அவரை சந்தி த்து விட வேண்டும் என்ற முடிவில் சமீபத்தில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்துள் ளார் வடிவேலு. நல்லவேளை அங்கு பெரிய அளவு ரசிகர் கூட்டமில்லை.
நேராக உள்ளே போனவர், ரஜினியைப் பார்க்க அனும தி கேட்க, நிர் வாகம் மறுத்துவிட்டது. நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவு க்குப் பிறகு, ரஜினியைப் பார்க்க யாருக்கும் அனுமதி தரப்படவில் லை. பல விஐபிக்கள் வாசலோடு நிறுத்தப்பட்டனர்.
லதா ரஜினியிடம் விசாரித்துவிட்டுச் சென்றனர். ஆனால் வடிவே லுவுக்கோ லதாவை சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. போன வேகத்தில் தலையைத் தொங்கப்போட்டபடி திரும்பினாராம் வடிவேலு.