Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மருத்துவ பயன் உடைய ரோஜா மலர்கள்

காதலை சொல்லும் மலர் ரோஜா. இந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மரு த்துவத்திலும் முக்கிய பங்கு வகி க்கிறது. 35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப் பதாக சான்றுகள் தெரிவிக்கி ன்றன. தோட்டப் பயிராக ரோஜா வை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின் றன.

முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது. அரேபிய நாடுகளில் வாசனை திரவியங் களுக்காகவும், மருத்துவ பயனுக் காகவும் மிகவும் பயன்படுத்து கிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித் துள்ளது. இத்தகைய ரோஜா மலர் கள் மருத்துவ பயன் உடையவை.

ரோஜாப்பூவின் அழகும், மணமும் மக்களை அதுவும் பெண்களை பெரிதும் கவரும். பொதுவாக ரோ ஜாப்பூவால் சரும நோய்கள் நீங் கும். ரத்த விருத்தி உண்டாகும். ரோஜா மலரின் இதழ்களை வே ளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெ றுமனே மென்று சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் மலர்கள் நறுமண எண்ணெய் உடையவை. பினைல்எத்தானல், க்ளோ ரோஜி னிக் அமிலம், டான்னின், சையா னின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற வேதிப்பொருட்கள் ரோஜா மலரில் அடங்கியுள்ளன.

ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை(தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை உர லில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண் டும். மூன்று மணி நேரம் குறையா மல் வைத்திருந்து பிறகு வடி கட்டி கொள்ள வேண்டும். குழந் தைக ளாக இருந்தால் கால் டீஸ்பூனும், பெரியவர்க ளாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத் திற்கு ஒருமுறை கொடுத் துவர உஷ்ண வயிற்று வலி போகும்.

களிம்பு ஏறாத பாத்திரத்தில் ரோஜா இதழ் களை பாத்திரத்திலிட்டு கொதிக்கும் நீரை அதில் விட்டு நன்றாக கிளறி விட்டு அப் படியே மூடி வைத்திருக்க வேண்டும். இப்படி 12 மணி நேரம் மூடி வைத் திருக்க வே ண்டும். பிறகு மூடியை திறந்து கைகளை சுத்தம் செய்து கொண்டு இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்க வேண்டும். பிறகு இந்த நீரை வேறொரு பாத்திரத்திலிட்டு 500 கிராம் சர்க்கரை மற் றும் 200 மில்லி நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும்.

சர்க்கரை பாகு வந்ததும் ஏற்கனவே செய்து வைத்த ரோஜாப் பூ நீரை இதில்விட்டு மறுபடியும் காய்ச்ச வே ண்டும். இப்போது பாகு தேன் பதத்தி ற்கு வந்ததும் மூன்று அவுன்ஸ் அள வுக்குப் பன்னீரை கலந்து கிளறி இற க்கி ஆற வைத்துக் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு கரண்டி டம்ளரில் விட்டு தேவை யான அளவு தண்ணீர்விட்டு சாப்பி ட்டு வரலாம்.

இதனால் ரத்த விருத்தி உண்டாகும். ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பய த்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரை த்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: