Thursday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

498ஏ குடும்ப வன்முறை சட்டப்பிரிவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக‌ . . .

ஆண்பால் காதலும் பெண்பால் காதலும்

அனைத்து உயிரினங்களையும் ஆண்பால், பெண்பால் என்று இலக் கணத்தில் பாலினப் பாகுபாடு (Gender) செய்து வைத்திருக்கி றார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.

ஆனால் எந்த நாட்டிலும் இல்லாத இந்தியா வில் மட்டுமே இருக் கின்ற காதல் பாலினப் பாகுபாடு பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்தியக் காதலில் மட்டும்தான் ஆண்பால் காதல், பெண்பால் காதல் என்று இரண்டு வகை இருக்கிறது.

இந்த இரண்டுவகை காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள பின்வரும் செய்தியையும் அதனூடே வரும் வீடியோக் களையும் பாருங்கள். உங்களுக்கே தானாகப் புரியும்.

திருமணத்துக்கு மறுத்த இன்ஜினியருக்கு சிறை

தினகரன் 26 ஏப்ரல் 2011

பூந்தமல்லி : காதலித்து ஏமாற்றி விட்டதாக காதலன் மீது காதலி புகார் செய்தார். இதையடுத்து, காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போரூர் அடுத்த முகலிவாக்கம் ராஜசேகரன் நகர், 1வது தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (25). பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரபு (25). இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள்.

கல்லூரியில் ஒன்றாக படித்த போதிருந்தே இருவரும் காதலர்கள். கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் விஜய லட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிருஷ்ண பிரபுவிடம் கூறியுள்ளார். ஆனால் கிருஷ்ண பிரபு, நாட்களை கடத்தி வந்தார். மேலும் கடந்த 3 மாதங்களாக விஜயலட்சுமியை சந்திப் பதை தவிர்த்துள்ளார்.

இதுகுறித்து விஜயலட்சுமி, கிருஷ்ணபிரபுவின் அலுவலகத்துக்கு சென்று, கேட்டபோது, ‘உன்னை திருமணம் செய்தால் எனது பெற் றோர் இறந்துவிடுவதாக கூறுகின்றனர். எனவே, உன்னை திருமணம் செய்ய முடியாது’ என்று கூறியுள்ளார்.


இதனால் மனவேதனை அடைந்த விஜயலட்சுமி, பூந்தமல்லி அனை த்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராணி, கிருஷ்ணபிரபுவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கிருஷ்ணபிரபு, விஜயலட்சுமியை திருமணம் செய்ய மறுத்து விட்டார். எனவே, போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணபிரபுவை கைது செய்தனர். பிறகு, பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ஆரல்வாய்மொழி : நாகர்கோவில் அருகே திருமணத்துக்கு முதல் நாள் இரவில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் பாலநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுப்பிரமணியன் (24). செங்கல் சூளை தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மகள் அழகுமதிக்கும் (23) கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணத்தை நேற்று (12&ம்தேதி) பணகுடியில் உள்ள மணமகள் இல்லத்தில் நடத்தி ஆரல்வாய்மொழியில் உள்ள மண்டபத்தில் மாலையில் மணமக்கள் வரவேற்பு வைத்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

நேற்று முன் தினம் இரவு இரு வீட்டு சார்பில் ஊர் அழைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திருமண ஏற்பட்டால் மணமக்களின் வீடு களை கட்டியது. நேற்று (12&ம்தேதி) காலையில் மணமகன் அழைப்புக்கு முன், சுப்பிரமணியன் வீட்டில் இருந்து மணப் பெண்ணுக்கு பூ கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஆரல்வாய் மொழியில் இருந்து மணமகனின் உறவினர்கள் நேற்று காலை காரில் பணகுடி சென்றனர். பூக்களை கொடுத்து விட்டு மணப் பெண்ணுக்கு அலங்காரம் செய்யும்படி கூறி விட்டு வந்து விட்டனர். காலை 8 மணியளவில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி ஆரல்வாய் மொழியில் தொடங்கியது. சுப்பிரமணியன் பட்டு, வேட்டியுடன் மாப்பிள்ளை தோரணைக்கு வந்தார்.

மணமகனின் கார் புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென மணப்பெண் வீட்டில் இருந்து போன் வந்தது. அதில் மாப்பிள்ளை இங்கு கிளம்பி வர வேண்டாம். மணப்பெண்ணை காணவில்லை. திருமணத்தை நிறுத்தி விடுவோம் என கூறி விட்டு போனை துண்டித்து விட்டனர். அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக பணகுடிக்கு விரைந்தனர். அப்போது தான் நேற்று முன்தினம் இரவு உறவினர்கள் ஊர் அழைப்புக்கு சென்ற போது, மணமகள் மாயமாகி விட்டார் என்பது தெரிய வந்தது. இதனால் திருமண வீடே சோகமயமானது.

மணமக்களின் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வாக்கு வாதத்தில்  ஈடுபட்டனர். ஊர் பெரியவர்கள் கூடி பேசி பணகுடி காவல் நிலையத்துக்கு விவகாரம் சென்றது. மணப்பெண்ணின் தந்தை தர்மலிங்கம், மகளை காணவில்லை என புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரித்த போது மணப்பெண் அழகுமதி, தனது அத்தை மகனை காதலித்து வந்ததும், அவருடன் தற்போது தலை மறைவாகி விட்டதும் தெரிய வந்தது. எனவே இரு தரப்பினரும் பேசி இனி உறவை முறித்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

த‌கன மேடை என்ற இணையத்திலிருந்து பெறப்பட்ட செய்தி இது. 498ஏ குடும்ப வன்முறை சட்டப்பிரிவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக் கான தளம் இது

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

  • kumaran

    sir en manavi kobithu kondu aval amma veettirku senru vittal aval annan en meethu policeil pokar seiyya pokiren enru mirattukirar naan enna seivathu?

    • ஒரு நல்ல‍ வழக்க‍றிஞர் மூலமாக, குடும்ப நல நீதிமன்றத்தில் ரெஸ்டிடியூஷன் அஃப் கான்ஜுகல் ரைட்ஸ் என்ற பிரிவின் கீழ் வழக்கு தொடருங்கள். இவ்வ‍ழக்கானது, பிரிந்துபோன உங்கள் மனைவியை மீண்டும் உங்களோடு சேர்த்து வைக்க‍ உதவும். மேலும் குடும்ப நல கவுன்சிலர், உங்கள் இருவரையும் நேரில் அழைத்துப் பேசி, ஒரு நல்ல‍ தீர்வினை காண்பார் அதாவது உங்கள் மனைவியை உங்களோடு சேர்த்து வைப்பார். ஒரு வேளை தவறு உங்கள்மீது இருக்கும்பட்சத்தில் உங்களை திருத்திக்கொள்ள‍ அறிவுரையும், ஆலோசனையும் கூறுவார்.

Leave a Reply

%d bloggers like this: