தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – 1 1/2 கப்
வேகவைத்த பாசிப்பருப்பு – 1 கப்
மஞ்சள்தூள் – சிறிதளவு
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மஞ்சள்தூள் – சிறிதளவு
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி-1 டீஸ்பூன் பொடியாக நறுக்கி யது
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
முந்திரி – தேவைக்கு
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கோதுமை ரவையை சிறிது வறு த்து கொள்ளவும்.லேசாக வறுபட்டதும் அதனுடன் வெந்த பாசிப் பரு ப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற் றும் 2 1/2 கப் வெந்நீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும். பின் வேறு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் மிளகு, சீரகம், கறி வேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள், முந்திரி, சேர்த்து தாளித்து வேக வைத்த கோதுமை ரவையை அதனுடன் சேர்க்கவும். பின் மீதமுள்ள 1 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு கலந்து சாம்பார், சட்னியு டன் சேர்த்து பரிமாறவும்.
Reblogged this on My blog- K. Hariharan.