Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி

தமிழக சட்டசபைக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 23-ந்தேதி பதவி ஏற்றனர்.   சபாநாயகர், துணை சபா நாயகர் தேர்வு வருகிற 27-ந்தேதி நடைபெறுகிற து. ஜூன் 3-ந்தேதி சட்ட சபையில் கவர்னர் உரை யாற்றுகிறார். அதைத் தொ டர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
அதற்கு முன்பாக ஒவ்வொ ரு கட்சி சார்பிலும் அந்த கட்சியின் சட்ட சபை தலைவர், துணைத் தலைவர், கட்சி கொறடா தேர்ந்து எடுக் கப்பட்டு சபாநாயகரிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.
அதன் அடிப்படையில் சட்டசபையில் இருக்கை ஒதுக்கப்படும்.   சட்ட சபை தி.மு.க. நிர்வாகிகளை தேர்ந்து எடுப்பதற்கான தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதில் சட்டமன்ற தி.மு.க. தலைவர் மற்றும் நிர்வா கிகளை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  
இதையடுத்து சட்டசபை தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் ஏக மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். துணைத் தலைவராக துரை முருகன், தி.மு.க. கொறடாவாக சக்ரபாணி ஆகியோர் தேர்வு பெற் றனர்.
சட்டசபை கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு பங்கேற்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந் ததும் சட்டமன்ற தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட மு.க. ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வாழ் த்து தெரிவித்தனர்.  
பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி: சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தி வைத்திருக்கிறதே?
பதில்:- சமச்சீர் கல்வி நிறுத்தப்பட்டதால் தமிழ்நாட்டில் மாணவர் கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.
கே:- டெல்லியில் சோனியா காந்தியை சந்திக்க வில்லையே?
ப:- டெல்லியில் என்னை மத்திய மந்திரிகள் குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் சந்தித்தனர். கனிமொழி கைது செய்யப்பட் டுள்ள இந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்திப்பது முறையாக இருக்காது என்பதால் சந்திக்கவில்லை.  
கே: மேல்சபை வராது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவி த்து இருக்கிறாரே?
ப: தலைமை செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றி யதும், மேல்-சபை வராது என்பதும் எதிர்பார்த்ததுதான்.
கே: தி.மு.க.வினர் சிலருடைய சொத்துக்களை மிரட்டி வாங்கிய தாகவும் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?
ப:- அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை.  
கே:- தி.மு.க, சார்பில் போராட்டம் நடத்தப்படுமா?
ப:- இப்போது என்ன அவசரம்.
கே:- தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்களா?
ப: தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்க னவே முரசொலியில் நானும் அன்பழகனும் வேண்டுகோள் விடு த்து இருக்கிறோம்
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply