Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மைக்ரோசாப்ட் ஸ்கைப் – அடுத்து என்ன?

இணையத்தில், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எதேனும் ஒரு நிறுவனம் தன் தனித்துவம் பெற்ற புரோகிராம் மூலம், மக்க ளிடம் நல்ல பெயரை ப் பெற்றிருந்தால், அ தனுடன் போட்டி யிட புரோகிராம் எதனை யும் தயாரிக்காமல், அதனை அப்ப டியே விலைக்கு வாங்கி, தன் குடைக்குள் கொ ண்டு வருவது மைக் ரோசாப்ட் நிறுவனத்தின் வாடிக்கை. அந்த வகையில் அண் மையில் இணையத்தில் நண்பர்களுடன் வீடீயோ காட் சியுடன் பேச, சேட் செய்திட மற்றும் சார்ந்த சேவையி னை, உலகளாவிய அளவில் வழங்கி வரும் ஸ்கைப் சாப்ட் வேர் நிறுவனத்தினை, மைக்ரோசாப்ட் வாங்கியுள்ளது. இதற் கென மைக்ரோசாப்ட் செலுத்திய தொகை 850 கோடி டாலர். இனி ஸ்கைப் என்னவாகும்? என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது. சிலவற்றிற்கான பதிலை இங்கு காண லாம்.

ஸ்கைப் சேவை தற்போது இலவசமாகவே மக்களுக்கு வழங் கப்படுகிறது. அதனாலேயே மக்கள் ஸ்கைப் நிறுவனத்தி னை மிகவும் நேசிக்கின்றனர். எனவே, மைக்ரோசாப்ட் இந்த சேவையினை கட்டண சேவையாக நிச்சயம் மாற்றப் போவ தில்லை. அப்படி மாற்றினால், இந்த சேவையின் பண்பு மாறு ம். பல வாடிக்கையாளர்கள் இதிலிருந்து விலகி விடுவார் கள்.

உயர்நிலையில் ஸ்கைப் சேவை கட்டணத்துடன் வழங்கப்ப ட்டு வருகிறது. ஆனால் அது மிகவும் குறைவு என்பதுடன், தொடர்ந்து பல ஆண்டுகளாகக் குறைந்தும் வந்தது. ஸ்கைப் பயன்படுத்தும் 17 கோடிப் பேர்களில், 90 லட்சம் பேர் மட் டு மே கட்டண சேவையினைப் பயன்படுத்தி வந்தனர். இவர்க ளின் எண்ணிக்கையும் கடந்த மூன்று ஆண்டுகளில் 20% ஆக க் குறைந்தது. எனவே கட்டண சேவையில் மைக்ரோ சாப்ட் ஆர்வம் காட்டாது என உறுதியாகச் சொல்லலாம்.

மைக்ரோசாப்ட் ஸ்கைப் சேவையினை ஒரு தனி நிறுவனப் பிரிவாக அமைத்துள்ளது. ஏற்கனவே அதன் தலைமைப் பொ றுப்பில் இருந்த டோனி பிளேட்ஸ் அதே நிலையில் தொடர் கிறார். இதில் மைக்ரோசாப்ட் மேலும் முதலீடு செய்து, இந்த சேவையினை இன்னும் சிறப்பான முறையில் அதிக மக்க ளுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளை நிச்சயம் எடுக்க இருக்கிறது.

ஏற்கனவே மைக்ரோசாப்ட் இதே போன்றதொரு சேவையி னை, விண்டோஸ் லைவ் மெசஞ்சர் மற்றும் எம்.எஸ்.என். மெசஞ்சர் என்ற பெயர்களில் நடத்துகிறது. இனி, இதனை ஸ்கைப் சேவைக்குள் கொண்டு வந்து, கூகுள் டாக் மற்றும் யாஹு மெசஞ்சர் சேவைகளுக்குப் போட்டியாக மாற்றலாம்.
இதுவரை ஸ்கைப் சேவையில் மாற்றத்திற்கான புரோ கிராம் மாறுதல்கள் அறிமுகப்படுத்தப் படுகையில், முதலில் விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்டேட்டட் புரோகிராம் தரப்பட்டது. அடுத்து சில மாதங்கள் கழித்தே மேக் மற்றும் லினக்ஸ் பயனாளர்களுக்கு அவை வழங்கப் பட்டன. அனை த்து ஸ்கைப் பயனாளர் களுக்கும், சேவை தொடர்ந்து கிடை க்கும் என மைக்ரோசாப்ட் உறுதி அளித்திருப்பதால், மேக் மற்றும் லினக்ஸ் பயனாளர்கள் கவலைப்பட வேண்டியதில் லை. தற்போதுள்ள மக்களுக்கான இலவச சேவையை அப்ப டியே வைத்துக் கொண்டு, இதே ஸ்கைப் சேவையினை நிறு வனங்களுக்கான சேவையாகத் தனியாக வடிவமைத்து, கட்டண அடிப்படையில் மைக்ரோசாப்ட் வெளியிடலாம்.

இந்த ஸ்கைப் சேவை மைக்ரோசாப்ட் சர்வர், பிசினஸ் சாப்ட் வேர் மற்றும் நிறுவனங்களுக்கான சர்வீஸ்களுடன் இணை ந்து வெளியிடப்படலாம்.

ஸ்கைப் சேவை, மைக்ரோசாப்ட் வழங்கி வரும் லிங்க், மெச ஞ்சர், அவுட்லுக், எக்ஸ் பாக்ஸ் லைவ் மற்றும் விண் டோஸ் போன் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு கிடைக் கலாம்.

ஆனால், இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு நிச்சயம் ஒரு விஷயம் மைக்ரோசாப்ட் மனதில், ஸ்கைப் சேவையை வா ங்கும்போது இருந்திருக்க வேண்டும். அது விளம்பர வருமா னமே. சாப்ட்வேர் நிறுவனங்கள் அனைத்துமே, தற்போது இணைய வெளி விளம்பரங்களுக்கு இடம் கொடுத்து வருமா னம் ஈட்ட திட்டமிடுகின்றன. குறிப்பாக வீடியோ அடிப்படை யிலான விளம்பரங்கள், ஸ்கைப் சேவையில் நிறையத் தர முடியும் என்பதால், மைக்ரோசாப்ட் இந்த வருமானத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: