
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 29-ந் தேதி ஏ.வி. எம். ஸ்டூடியோவில் நட ந்த “ராணா” படப் பிடிப்பில் பங்கேற்றபோது திடீர் உட ல் நலக் குறை வால் அவதி ப்பட்டார். காய்ச்சல், சளித் தொல் லை, வாந்தி போன் றவை இருந்தன.
உடனடியாக மயிலாப்பூ ரில் உள்ள இசபெல்லா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகி ச்சை பெற்று வருகிறார்.
25 நாட்களாக அவர் உடல் நலக்குறைவாக உள்ளார். ரஜினிக்கு உட ல் நலக்குறைவு ஏற்பட்டதற்கான அடிப்படை காரணங்கள் தெரிய வந்துள்ளன. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவ ருக்கு உயர் ரத்த அழுத்தம், ஆரம்ப நிலையில் சர்க்கரை வியாதி போன்றவை இருந்துள்ளன.
ரத்த அழுத்தத்துக்கு உரிய சிகிச்சை பெறாததால் சிறுநீரக செயல் பாட்டில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போதே இந்த விஷய ங்கள் பரிசோதனையில் தெரிய வந்தன.
சிறுநீரகத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருந்தால் ரத்தத்தில் அதிகமாய் சேரும் உப்பு, பொட்டாசிய சத்துக்கள் சிரியாட்டினின் பாஸ்பேட்டில் இருந்து பிரியும் கிரியாட்டினின் எனும் வேதிப் பொ ருள் ஆகியவற்றை சிறுநீரகங்கள் வடிகட்டி சிறுநீர் மூலம் வெளியே ற்றிவிடும். ரத்தத்தில் யூரியா எனப்படும் உப்பு சத்து அளவு 40 மில் லி கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும். பொட் டாசிய சத்து 4.5 மில்லி கிராமுக்கு குறைவாகவும் கிரியாட்டினின் அளவு 1 மில்லி கிராமுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
ரஜினிகாந்துக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளில் உப்பு சத்து, பொட்டாசிய சத்து, கிரியேட்டின் அளவுகள் அதிகமாக இருந் தன. இதனால்தான் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருந்தது. ரத்தத்தில் இயல்பாக 1.4 கிராம் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவும் ரஜினிக்கு குறைந்து இருந்தது.
ஆஸ்பத்திரியில் சிறுநீரக செயல்பாடு பாதிப்பு காரணமாக டயா லிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை 5 முறை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. சிறுநீரக பாதிப்பு காரணமாக உப்பு, புரதசத்து குறைவான உணவுகளை சாப்பிடுமாறு டாக்டர்கள் அறிவு றுத்தியுள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனியறைக்கு மாற்றப்பட்ட பின் ரஜினி உற்சாகமாக இருக்கிறார். குடும்பத்தினருடன் அமர்ந்து டி.வி. பார்க்கிறார். ஆனாலும் சிறுநீரக பாதிப்புக்கு தொடர் சிகிச்சை பெற இன்னும் 3 தினங்களில் ரஜினி லண்டன் செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.