Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

27-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு: இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி எஸ்.எஸ். எல்.சி. தேர்வு தொடங் கியது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மா ணவ- மாணவிகள் 2 ஆயிரத்து 800 மைய ங்களில் எழு தினார்கள். இதில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 பேர் பள்ளிகள் மூல மாக தேர்வு எழுதியவர்கள் ஆவர். 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 மாண வர்களும் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 மாணவிகளும் தேர்வு எழுதினார்கள்.  
சென்னையில் 272 பள்ளிகளைச் சேர்ந்த 36 ஆயிரத்து 148 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார்கள். விடைத்தாள் திருத்தம் பணி முடிந்து பாடவாரியாக மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது.
பின்னர் விடைத்தாளில் உள்ள மார்க்கையும் கம்ப்யூட்டரில் உள்ள மார்க்கையும் ஒப்பிட்டு சரிபார்க்கும் பணி நடந்தது.   அனைத்து பணிகளும் முடிந்து தேர்வு முடிவுகள் வெளியிட தயாராக உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று மாணவ- மாணவிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து பல்வேறு தகவல்கள் கசிந்தன. ஆனாலும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்வு முடிவு குறித்த அறிவிப்பு 2 நாட்களுக்கு முன்பாக தெரிவிக்கப்படும் என் றார்.   இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு 27-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) வெளியிட அரசுத் தேர்வுத் துறை முடிவு செய் துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தேர்வு முடிவு வெளியாகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (புதன்கிழமை) மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபிதா கூறுகையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு குறித்த அறிவிப்பு மாலை வெளியிடப்படும் என்றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply