Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குளம் வெட்டுவது ஏன்?

புதிது, புதிதாக கோவில் அமைப்பது, குளம் வெட்டுவது, நீர் நிலைகளை ஏற்படுத்துவது பு ண்ணியம் தான். ஆனால், ஏற் கனவே உள்ள கோவில்களை யும், நீர்நிலைகளையும், அவை பழுதடைந்திருந்தால், அவற் றை சீர் செய்து, பயனுள்ளதாக ச் செய்வது மகா புண்ணி யம்; ஆனால், நடப்பது வேறுவிதமாக அல்லவா உள்ளது.

எங்கேயாவது ஒரு குளம் இரு ந்தால், அதை தூர்த்து, அந்த இட த்தில் அடுக்கு மாடி குடியிருப் புக் கட்டி, பணம் சம்பாதி த்து வி டுகின்றனர். கோவில் இருந்த இடத்தில், பிளாட்டுகள் போட் டு, காலனியாக்கி விடுகின்ற னர்; இதெல்லாம் கலி தோஷம். ஒரு நல்ல காரியம் செய்தவனுக் கும், அதைச் செய்யத் தூண்டியவனுக்கும் கூட புண்ணிய லோக வாசம் கிடைக்கும் என்பதற்கு ஒரு சின்ன கதை…

கவுட தேசத் தலைவனா ன வீரபத்ரன், வேட்டை யாட வனம் சென்றான். வெயிலில் தாகம் எடுத் தது.

அருகிலிருந்த குளத்துக் குப் போனான். அதில் தண்ணீர் இல்லை; வற ண்டு போயிருந்தது. தன் உடை வாளால் ஒரு பள் ளம் தோண்டினான். அந்த பள்ளத்திலிருந்து சுவையான தண் ணீர் வந்தது. அதைப் பருகி, தாகம் தணித்துக் கொண்டான் வீரபத்ரன்.

அருகில் இருந்த மந்திரி, “அரசே… இந்த இடத்தை சுத்தம் செய்து, இன்னும் ஆழமாகவும், அகலமா கவும் வெட்டி, ஒரு குளம் ஏற்படுத்தினால், பல ஜீவன்களுக்கும், மக்களு க்கும் பயன்படும்; புண் ணியமும் கிடைக்கும்…’ என்றான். அரசனும், தன் ஆட்களைக் கூப்பிட்டு, அந்த குளத்தை சீர் செய்து ஆழப்படுத்த உத்தரவிட்டான். குளத்தில் நீர் நிரம்பியது; பல ஜீவன்களுக்கும், மக்களுக்கும் பயன்பட்டது.

இந்த புண்ணிய காரியத் தின் பயனாக அரசனும், மந்திரியும் எல்லா சுகங்க ளையும் அனுபவித்து, முடி வில் பிரம்மலோ கம் போய் சேர்ந்து, பல்லாண்டு காலம் சுகமாக இருந்தனர் என்று கதை உள்ளது. புதிதாக ஏற் படுத்துவதை விட, பழைய தை சீர் செய்வது மகா புண் ணியம். தண்ணீர் தானம் மிகவும் உயர்ந்ததாக சொல் லப்படுகிறது.

தேபோல், அன்ன தா னம், வஸ்திர தானம், கோவிலில் விளக்கு ஏற்றுதல் என்று பல வழி களில் புண்ணியம் சேர்த் துக் கொள்ள முடியும். மனம் தான் இருக்க வே ண்டும். பிரசா தம் தவிர, வேறு எதையும் கோவி லிலிருந்து வீட்டுக்கு எடு த்து வரக் கூடாது. இதை யெல்லாம் மனதில் வைத்துக் கொ ண்டால் நல்லது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply