Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் காஸ், டீசல் விலை உயர்வும்: மத்திய அரசு

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட தையடுத்து, டீசல் மற்றும் சமையல் காஸின் விலையை யும் உயர்த்த மத்திய அரசு தி்ட் டமிட்டுள்ளது. இதற்காக, மத் திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதி காரம் கொண்ட அமைச்சர்கள் குழு, அடுத்த மாதம் 9ம் தேதி கூடி விவாதிக்க உள்ளது. இந்த குழு, சிறிது நாட்களுக்கு முன்பு கூடுவ‌தாக இருந்தது. ஆனா ல், கடைசி ‌நேரத்தில் இது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த குழு கூட்டம், ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளதாக தற்போது தெரிவிக்க ப்பட்டுள்ளது. அ ந்த கூட்டத்தில், எவ்வளவு உயர்த்தலாம் என்று விவாதிக் கப்பட்டு பின் முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி யிடப்படும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக் கின்றன. சர்வதேச அளவில் தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வரு வதால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியா தது என்று பிரணாப் முக ர்ஜி ஏற்கனவே கூறி யி ருந்தது குறிப்பிடத்தக் கது. சர்வதேச சந்தையி ல் கச்சா எண்ணை விலை உயர்ந்ததற்கு ஏற் ப இந்தியாவில் பெட்ரோ லியம் பொருட்கள் வி லை அதிகரிக்கப்படாததால் இந்திய எண்ணெய் நிறுவனங் களுக்கு தினமும் கடும் இழப்பு ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை நீட்டிக்க இயலாது என்பதால் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலைகளை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு ள்ளது. பெட்ரோல் விலை சமீபத்தில் 5 ரூபாய் உயர்த்தப் பட்டது. அப்போது டீசல், சமை யல் காஸ் விலை உயர்த் தப்படவில்லை. அவற்றின் விலை யையும் உயர்த்த பரிசீ லி க்கப்பட்டு வருகிறது. இந்த நிலை யில் வரும் 9-ந்தேதி பிரணாப் முகர்ஜி தலைமை யிலான அதிகாரம் கொண்ட அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடை பெற உள்ளது. அந்த கூட்டத்தில் டீசல், சமையல் காஸ் விலை யை எவ்வளவு உயர்த்துவது என்பது முடிவு செய்ய ப்படும். டீசல் விலை லிட்ட ருக்கு ரூ.4 உயரும் என்று தெரி கிறது. சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு ரூ.35 வரை உயரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. டீசல் விலை உயர் த்தப்பட்டால் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள் ளனர். எனவே டீசல் விலை உயர்வு சற்று குறை யலாம் என்று கூறப்ப டுகிறது. அதுபோல காஸ் விலை உயர்வு நடுத்தர மக்களை பாதிக்கலாம் என்பதால், சிலிண் டருக்கு 35 ரூபாய் உயர்த்தப்படுவதற்கு பதில் 25 ரூபாய் உயர்த் தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: