Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம் :

10ம் வகுப்பு தேர்வில் திரு வண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மி ன்னலா தேவி உட்பட 5 மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். இன்றைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று கா லையில் வெளியா னது. இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத் து 1ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர். மொத்த ம் ‌தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவ ர்கள் 82. 30 சதம், மாண விகள் 88.10 சதம் ஆகும்.

விருதுநகர் , திருவண்ணாமலை,சென்னை, ஈரோடு , சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 5 பேர் முதல் ரேங்கை தட்டிப்பறித்துள்ளனர். இவர்கள் 5 பேரும் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர். 5 பேரும் மாணவிகளே ஆவர். இரண்டாமித்தை 495 மார்க்குகள் பெற்று 11 பேர் பிடித்துள்ள னர். 494 மார்க்குகள் பெற்று 24 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர்.

முதலிடத்தை பிடித்த 5 மாணவிகள் விவரம்: எந்த முறையு ம் இல்லாத அளவிற்கு முதல் ராங்கை 5 பேர் பிடித்து ள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு:

நித்தியா – எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்,

ரம்யா- ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம்.

சங்கீதா- முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் , சேலம் ,

மின்னல்விழி- செய்யாறு, அரசுமேல்நிலைப்பள்ளி,

ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.

கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் 13 ஆயிரம் பேர்:

பத்தாம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் 12 ஆயிரத்து 532 பேர் நூற்றுக்கு நூறு மார்க்குகள் பெற்றுள்ளனர். அறிவியலில் 3 ஆயிரத்து 677 பேரும், சமூக அறிவியலில் 756 பேரும் பெற் று சாதனை படைத்துள்ளனர்.

விவசாயி மகள் முதலிடம்: ஆத்தூர் தலைவாசல் வி.கூட்டு‌‌ ரோடு பகுதியில் இருக்கும் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சங்கீதா 500க்கு 496 மார்க்குகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சக்திவேல் விவ சாயி. இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் தமிழ்- 98 ; ஆங்கிலம் – 99; கணிதம் – 100; அறிவியல் – 100; சமூக அறிவியல் – 9

டாக்டராவேன் என்கிறார் அரசுப்பள்ளி மாணவி: திருவண் ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுப் பள்ளி மாணவி மின்னலாதேவி அளித்த பேட்டியில் : எதிர்காலத்தில் டாக் டராகி சமூக சேவை விருப்பம் என தெரிவித்துள்ளார். இவரது தந்த‌ை மோகன் கிராம தபால் ஊழியராக பணியாற் றுகிறார். இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் : தமிழ் -98 ; ஆங்கிலம் – 98; கணிதம் – 100 ; அறிவியல் -100; சமூக அறிவியல் – 100.

மெட்ரிக் பிரிவில் ஈரோடு மாணவி முதலிடம் : மெட்ரிக் பிரிவில் ஈரோட்டை சேர்ந்த மாணவி முதலிடத்தை பிடித்து ள்ளார். பாரதிய வித்தியாபவன் மெட்ரிக்., பள்ளியை சேர்ந்த அஸ்வினி 493 மார்க்குகள் பெற்றுள்ளார்.

கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நட ந்தன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ். எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். இவர்களில், நான்கு லட்சத்து, 22 ஆயிரத்து, 21 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து, 35 ஆயிர த்து, 935 பேர் மாணவியர்.

தனித்தேர்வு மூலம், 97 ஆயிரத்து, 655 பேர் எழுதினர். மார்ச் 22 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். இவர்களில், 79 ஆயிரத்து, 794 பேர் மாணவர்கள். 65 ஆயிரத்து, 458 பேர் மாணவியர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை, 4,873 பேரும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர்.

NEW IN DINAMALAR

Leave a Reply