Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் பெண்களை அழ விடுங்கள்

உலகம் முழுவதும் பெண்களுக்கு தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ அறி விப்பு. ஆம். பெண்கள் அழுவத ற்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது ஆண் களே.

லண்டனில் கண் பாதுகாப்பு நிறுவ னம் ஒன்றின் சார்பில் 2,000 ஆண், பெண்களிடம் (அழுகை வரும் அளவுக்கு) ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தங்களை அழ விடுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக 4ல் 1 பெண் தெரிவித்தார். அதிலும், ஒருவர்கூட தனது அப்பா, மகனை காரணமாக கூறவில்லை! ஆய் வில் பங்கேற்ற அனைத்து பெண்க ளின் ஏகோபித்த குற்றச்சாட்டு… கணவன் அல்லது காதலன் மீது தான். மனைவியோ, காதலியோ… அழ விட்டு ப் பார்ப்பதில் ஆணுக்கு தனி ஆர்வம் இருப்பதாக வெடித்தனர் பெண்கள்.

ஆய்வின்படி, மனைவி, காதலி மட்டுமின்றி தாயைக் கூட அழவிடும் ஆண்கள் 63 சதவீதம் என்று தெரிய வந்தது. இப்படிச் செய் யும் ஆண்கள் தப்பி விட முடியுமா என்ன…? அவர்கள் ஆபீ சில் பாஸ் கடிக்கும்போதும், வேலையைச் சுமத்தும்போதும் அழுகின்றனராம். இங்கிலாந்து பெண்களில் 32 சதவீதத் தினரும், ஆண்கள் 22 சதவீதத்தினரும் வே லையில் மன அழுத்த ம், பிரச்னையால் கண் ணீர் விட்டுக் கதறுகின் றனர்.

கடந்த 6 மாதங்களில் ஒரு முறையாவது அழுததாக ஆய்வில் பங்கேற்ற பலர் தெரிவித்தனர். எனினும், அலுவலக பிரச் னைகள், டென்ஷனால் கண்ணீர் விட்டு அழும் ஆண்கள் கு றைவே. மற்றபடி மனதுக்குள் அழுதாலும், பெண்களால் என் ன பிரச்னை வந்தாலும் மன துக்குள் கூட அழுவதில்லை. ஸ்டிராங்காக எதிர் கொள் கின்றனர். மாறாக, பெண் களை டென்ஷனாக்கி அழ விடுகின்றனர் என்கிறார் ஆ ய்வு நடத்திய டாக்டர் சாரா ப்ரூவர்.

அழுவது சோகமானதுதான் என்றாலும், கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது என்கிறார் அவர்.நவீன உலகில் பெரும் பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன் கழி க்கிறோம். அதனா ல், கண்கள் காய்ந்து ஈரத்தன்மையை இழக்கின்றன. கண்ணீர் வெளியானால் கண்கள் சுத்தமாகும் என் றார் சாரா.

சாரே… பொஞ்சாதி, கேர்ள் பிரண்ட அழ விடுறதே அவங்க கண்கள் நல்லா இருக் கணுங்கற நல்ல நோக்கத்துலதான்னு அவங்க புரிஞ்சிக்க ணும் தானே சாரே… என்கிறார் தினமும் மனைவியை அழ விடும் ஒரு கணவர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply