Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் நல்லா இருக்கேன். உங்க ரஜினிகாந்த் பேசுறேன்” – ஆடியோ & வீடியோ

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அங்கு சிறுநீரக ஆபரேஷன் நடைபெற இருப்பதாக தகவ ல்கள் வெளியாகியுள்ளன. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச் சந்திரா மருத்துவமனையி ல் சிகிச்சை பெற்று வந்த நடி கர் ரஜினிகாந்த், மேல் சிகிச் சைக்காக நேற்று (27ம்‌ தேதி) இரவு விமானம் மூலம் சிங் கப்பூர் சென்றார்.  ராணா படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடி கர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்ப ட்டு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டார். கடந்த மே 18ல் அவரது உடல் நிலை மோசமா னதால், அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம் செய்யப்ப ட்டார். அங்கு அல்ட்ரா பில்ட்ரேஷன், ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரத்தத்தில் இருந்த “கிரியேட்டின் அளவு குறையத் துவங் கியது. இதையடுத்து, உடல்நலம் தேறிய அவர், மீண்டும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். பார்வையாளர்கள் அவரை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தனி வார்டில் இருந்த நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையை, அமெரிக்க நிபுண ர்கள் மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ரஜினியின் நுரை யீரலில் அழுத்தமாக படிந்துள்ள நீர்கோப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றுக்கு சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நவீன முறையில் சிகிச்சை அளிக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 11.30 மணிக்கு, சென் னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், ரஜினி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் சென்றனர். ரஜினி இருந்த ஆம்புலன்ஸ் வேன், விமானம் வரை செல்ல முதல்வர் ஜெயலலிதா சிற ப்பு அனுமதி பெற்றுக் கொடுத்ததால் விமானம் வரை ஆம்பு லன்ஸ் சென்றது.  பின்னர் ரஜினி மருத்துவ குழுவி னரின் உதவியுடன் விமானத்தில் ஏற்றப்பட்டார். சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரஜினி சில வாரங்களு க்கு தங்கி சிகிச்சை எடுப்பார் என்றும், அங்கு அவருக்கு சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி வாய்ஸ் : முன்னதாக ரஜினியின் வாய்ஸ் அடங்கிய சிடி ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு அவரது மகள் ஐஸ்வர் யா அனுப்பி வைத்தார். அதில் பேசிய ரஜினி,  நான் உங்க ரஜினிகாந்த் பேசுறேன். நான் நல்லா இருக்கேன். யாரும் கவலைப்படாதீங்க. நான் பணம் வாங்குறேன். நடிக்குறேன். அதுக்கு நீங்க என் மேல இவ்ளோ அன்பு செலுத்துறீங்க. உங்க ளுடைய பிரார்த்தனை, அன்புக்கு கைமாறா என்ன செய் வேன்னு, செய்யப்போறேன்னு  தெரியல. என் பேன்ஸ் எல்லாரும் கடவுள் ரூபத்தில் இருக்குறதா நினைக்கிறேன். உங்க பிரார்த்தனையால சிங்கப்பூர் போயிட்டு நான் சீக்கிர மே, நல்லபடியா திரும்ப வந்து உங்களையெல்லாம் சந்திக் குறேன். உங்க அன்பால தலைநிமிந்து நிற்பேன்,  என்று கூறியுள்ளார்.

லதா ரஜினி அறிக்கை: ரஜினியின் மனைவி லதா வெளியிட் டுள்ள அறிக்கையொன்றில், எனது கணவர் ரஜினிகாந்த் உட ல் நலம் பெற தாங்கள் செய்து வரும் பூஜைகளுக்கும், கூட்டு பிரார்த்தனைகளுக்காக முதலில் நான் எனது குடும் பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன். ரஜினிகாந்த் நலமுடன் உற்சாகமாகவும் உள்ளார். அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், உடல் நலத்தை கவனி த்துக் கொள்வ தற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம். அவ ரைப் பற்றி தேவையில்லாத செய்திகள் வந்து கொண்டிருப்ப தை கண்டு தாங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவ ருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது, என்று கூறியுள்ளார்.

மருத்துவமனை அறிக்கை: ரஜினி உடல்நிலை குறித்து ராம ச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பி ல், ரஜினிகாந்த் கடந்த 13ம்தேதி மூச்சுத் திணறல், காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களுக்காக மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டார். முன்னதாக அவருக்கு குடும்ப டாக்டர் மூலம் இசபெல்லா மருத்துவமனையில் 2 முறை அனுமதிக்கப்ப ட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரஜினிகாந்த்துக்கு அளிக்கப்ப டும் தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல் நிலை யில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு தேறி வருகிறார். நலமு டன் உள்ளார். அவரே உணவருந்துகிறார். குடும்பத்தினருட ன் பொழுதை கழிக்கிறார். அவர் சூழ்நிலை மாற்றத்துக்கா கவும், ஓய்வுக்காகவும் அதே நேரம் குறிப்பிட்ட பரிசோத னைக்காகவும் வெளிநாடு செல்கிறார், என்று குறிப்பிடப்ப ட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: