“நான் சினிமாவுக்கு வருவேன் என்று கனவுல கூட நினைச் சதில்லை. ஆனால் சினி மாவுக்குள்ளே வந்ததும் இந்த மாதிரியான கதா பாத்திரங்களில் எல் லாம் நடிக்கணும்னு கனவும் கண்டதில்லை. நான் கன வு காணாமலே எனக்கு நல்ல கதா பாத்திரங்கள் அமைந்துவிட்டது. என க்கு கனவு பாத்திரம் என் று எதுவும் கிடையாது. என்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிற மாதிரி யான கதைகள் கொண்ட படங்களில் நடிக்கணும்.
அவ்வளவுதான். ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் இருந்து நான் காணாமல் போனால்கூட, நம்முடைய கேரக்டர் ஆடியன் úஸôட நினைவில் இருக்கணும். புது சா வர ஜெனரேஷன் கூட “சரண்யா இந்த மாதிரி கேரக்டர்ல நடிச்சாங்க’ ன்னு சொல் லணும்” என்று தனது நடிப்பு பிரவேசம் பற்றி பேச ஆரம் பிக்கிறார் சரண்யா மோகன். “வெண் ணிலா கபடிக் குழு’ படம் மூலம் பரவலாக தமிழ் சினிமாவில் கவ னம் பெற்ற யதார்த்த நாயகி. தற் போது சுசீந்திரன் இயக்கும் “அழகர் சாமியின் குதிரை’ படத்தில் அப்புக் குட்டிக்கு ஜோடியாக நடித் துள்ளார்.
கோலிவுட்டிலுள்ள ஹீரோயின்க ளுக்கு ஒரு வெற்றிப் படம் சரியாக அமைந்துவிட்டாலே அடுத்து பெரிய பெரிய ஹீரோக்களுடன்தான் ஜோடி சேருவேன் என்று அடம் பிடிப்பார்கள். அத்தகைய ஹீரோயின்களுக்கு மத்தியில் “கதைக்கேற்ற நாயகர்களோடும் நடிப்பேன்’ என்று களமி றங்கி கலக்கிக் கொண்டிருக்கும் சரண்யா மோகனின் திற மையை மனம் திறந்து பாராட்டத்தான் வேண்டும். கன்னக் குழியும், சின்ன விழியும் கொண்ட சரண்யாவிடம் “அழகர் சாமியின் குதிரை’ படம் குறித்து விவாதித்தோம்.
“அழகர்சாமியின் குதிரை’ படம் குறித்து சொல்லுங்களேன்?
இந்தப் படம் எண்பதுகளில் நடக்கிற மாதிரியான கதை களம் கொண்ட பீரியட் ஃபி லிம். அதை விறுவிறுப்பும் பரபரப்பும் கொண்டதாக இய க்கியிருக்காரு சுசீந்திரன் ஸô ர். என்னோட மேக்-அப், காஸ் ட்யூம் எல்லாமே எண்பது களில் இருக்கிற மாதிரிதான் இருக்கும். படம் முழுக்க சே லைதான், பிளவுஸ் கூட பார்த்தீங்கன்னா அந்த கால த்து மாடல்லதான் இருக்கும். தலையில ரிப்பன் எல்லாம் வெச்சுக்கிட்டு பக்கா கிராமத்துப் பெண்ணா நடிச்சிருக்கேன். சுசீந்திரன் ஸôர் கூட எனக்கு இது இரண்டாவது படம். அது வே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
“குரங்கனி மலை’யெல்லாம் ஏறினீங்களாமே?
குரங்கனி மலை மீது எல்லாம் ஏறவில்லை. ஆனால் அதன் பக்கத்துலேயே இருக்கிற “மா ட்டுப்பட்டி’ங்கிற இடத்துல தான் தங்கினோம். மலைப்பா ங்கான இடம் அது. ஏற்ற இற க்கமாதான் இருக்கும். மாட்டு ப்பட்டி வரைதான் வண்டி எல் லாம் போகும். அங்கிருந்து ஒரு மூணு கிலோ மீட்டர் தள் ளிதான் எங்க லோக்கேஷன் இருந்தது. அங்க வண்டி எல் லாம் போகாது. சைக்கிள் கூட போக முடியாதுன்னா பார்த் துக்குங்களேன்.
வெயிட் எதுவும் எடுத்துக்கிட்டு போகணும்னா குதிரை மீது தான் எடுத்துக்கிட்டு போகணும். அந்த மாதிரியான இடத் துக்கு தினமும் ஒரு அரைமணி நேரம் நடந் துதான் போய் சேரு வோம். அது போல க்ளை மாக்ஸ் காட்சி எடுக்கும் போது எல்லாம் பார்த்தீ ங்கன்னா திடீர்ன்னு பனி மேகம் வந்து மூடிக்கும். திடீர்னு மழை வந்திடும். திடீர்னு வெயில் அடிக் கும். அதனால மூணு நாள் படப்பிடிப்பு தள்ளிபோச்சு. அதுக் காகவே சரியான நேர த்துக்கு அந்த இடத்துக்குப் போய்விடுவோம். அந்த லோக் கேஷன் தமிழ் சினிமாவுக்கே ரொம்ப புதுசாக இருக்கும் பாருங்களேன்.
அந்த இடத்துல நாங்க தான் முதன்முதலாக படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். அங்கு தங்குவ தற்கு எந்தவித வசதி யும் கிடையாது. படப்பிடிப்பு முடியும் வரை எல்லாரும் ஒண்ணா, ஒரே இடத்துலதான் தங் கினோம். அந்த இடத்துல மொத்தமே இருபத்தி எட்டு குடும்பம்தான் இருந்தது. அந்த மக்கள் எல்லாம் எங்களுக்கு ரொ ம்ப உதவியா இருந்தாங்க. எங்க ளுக்கு என்ன தேவைன்னு பார்த்து பார்த்து கவனிச்சுக்கிட்டாங்க!
பீரியட் ஃபிலிம் கதைக்கு உங்களை எப் படி தயார் செய்து கொண்டீர்கள்?
அதுக்காக நான் எதுவும் தனியா பிராக்டீஸ் செய்யல. எல் லாமே டைரக்டரோட திட்டமிடல்தான். அந்த கேரக்டர் எப் படி இருக்கணும்னு முன்னாடியே அவர் முடிவு பண்ணிட் டாரு. அதனால நான் எ ப்படி நடந்துக்கணும், எங் க பார் க்கணும், எப்படி நிக்கணும்ங்கிறது எல்லா மே அவரோட முடி வு தான். அவர் எப்படி நடிக்க சொன்னாரோ அப்படியே நடிச் சிருக்கேன்.
எல்லோரும் பெரிய ஹீ ரோக்களோடு ஜோடி சேர ஆசைப்படும்போது நீங் அப்புகுட்டிக்கு ஜோடியா நடிச்சி ருக்கீங்களே?
பொதுவா நான் ஒரு படம் கமிட் பண்ணும்போது, அந்தப் படத்தினுடைய கதையையும், அதில் என் கதாபா த்திரத் தையும் மட்டும்தான் பார்ப்பேன். அதில் யார் ஹீரோவா நடிக்கிறாங்க ன்னு பார்க்க மாட்டேன். எனக்கு இந்தக் கதை யை கேட்டதுமே ரொம்ப பிடிச்சு போச்சு. இந்த கதை மீதும், டைரக்டர் மீதும் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது. அப்புகுட்டியும் இந்த துறைக்கு புதுசு இல்ல. அவர் ஏற்கெ னவே நடிச்சுகிட்டு இருக்கிற ஆர்ட்டிஸ்ட்தான். பொதுவாக நம்மு டைய நிறம், அழகு, உருவம் எல்லாம் இறைவன் கொடு ப்பதுதான். அதனால் எந்தப் படத்திலும் நாயகனின் முகத் தைப் பார்த்து எடை போட கூடாது.
அந்தப் படத்தின் கதையும், அவங்க நடிப்பையும் பார்த்து தான் எடை போடணும். அதுதான் சரி. அந்த வித த்துல அப்புகுட்டி ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு. அவரு டைய திறமை “அழகர்சாமியின் குதிரை’ படம் பார்த்த பிறகு உங்களுக்கே தெரிய வரும்!
கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்குப் போனீங்களே. அங்கு வரவேற்பு எப்படியிருந்தது?
தமிழில் நல்ல கதைக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந் தேன். நிறைய படங்களில் வாய்ப்பு வந்தது. ஆனால் எல்லாமே வந்து போகிற மாதிரியான கேரக்டர். எதுவுமே எனக்கு நம்பிக்கையளி க்கிற மாதிரியில்லை.
அதுவும் இல்லாமல் சிறந்த இயக் குநரின் படங்களிலோ அல்லது பிர பலமான தயாரிப்பு நிறுவனங் களின் படங்களிலோதான் நடிக்க ஆசைப்படுறேன். அந்த மாதிரியா ன வாய்ப்புகள் எதுவும் தமிழில் அமையவில்லை. அதனாலதான் கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கிட் டேன்.
அதுமட்டுமில்லாமல் போன வருடம் தெலுங்கு இண்டஸ்ட்ரி பக்கம் போய் கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். “வெண் ணிலா கபடி குழு’ படம் தெலுங்கில் ரீ-மேக் பண்ணினாங்க, அதில் நான் நடிச்சிருந்தேன். அந்தப் படம் அங்கே எனக்கு பெரிய சக்ஸஸ் கொடுத்தது. அதைத் தொடர்ந்து அங்கே நான்கு படங்களில் நடித்துவிட்டேன்.
விஜய்யுடன் நடித்திருக்கீங்களாமே?
உண்மைதான். வெளியீட்டிற் காக காத்திருக்கும் “வேலாயுத ம்’ படத்தில்தான் விஜய் ஸô ருக்கு தங்கையா நடிச்சிருக்கே ன். இந்தப் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைஞ்சிருக் கு. மற்றபடி வேறு எந்தப் தமிழ்ப் படத்திலும் இப்போ தைக் கு ஒப்பந்தம் ஆகல. மலையாளத்தில் ஒரு படம் பண் ணிகிட்டு இருக்கேன்.
உங்களுடைய நாட்டிய திறமையை பயன்படுத்துற மாதிரி படம் எதுவும் வந்திருக்கிறதா?
பொதுவா ஒரு படத்துல டான்ஸ் மட்டும் இருந்தா பத்தாது. அதுக்கு ஏற்ற மா திரி நல்ல கதையும் இருக்க ணும். அப்போ தான் நம்ம திறமையும் வெளிப்படும். அந்த மாதிரி படம் வந்தால் கண்டிப்பா செய்வேன். ஆனால் இப்போது நடனப் பள்ளி ஆரம்பித்து அதில் மாணவர்களுக்கு நடனம் சொ ல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.
இதை தவிர கொச்சியில் ஒரு ஸ்பெஷல் பரத நாட்டிய பயிற் சி வகுப்பு நடந்துகிட்டு இருக்கு. அதில் நானும், என் தங்கை யும் கலந்துகொண்டு பயிற்சி எடுத்துக்கிட்டி ருக் கோம். சமீபத்தில் கூட நான் ஒரு கச்சேரியில் கலந்து கிட்டு நடனம் ஆடினேன். அதுனால நடனக் கலையும் நல்லா போய்கிட் டுதான் இருக்கு.