Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரெய்லி புத்தகத்தை படித்து சாதித்த அக்ஷயா

சென்னையில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் படித்த, கண் பார்வையற்ற மாணவி பி. அக்ஷயா, 490/500 மதிப்பெ ண்கள் பெற்று சாதனையாளர்களுக்கெல் லாம் முன்னோடி யாகத் திகழ்ந் துள்ளார்.

ஆம், கண்பார்வை குறைவான அக்ஷயா, பிரெய்லி புத்தக முறை யில் 10ம் வகுப்பு பாடங்களை படித்து, ஆசிரியரின் துணை யுடன் தேர்வெழுதி இந்த மதிப்பெண்ணை பெற்று ள்ளார்.

அக்ஷயா பற்றி, அவருக்கு ஊக்கமளித்து இந்த அளவிற்கு சாதனை படைக்கக் காரணமான ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கி லோ இந்தியன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆரோக்கிய மேரி ராய் பெருமிதத்துடன் கூறுகிறார்.

சிறு வயதிலேயே படிப்பின் மீது இவ்வளவு கவனம் செலுத் தும் ஒரு பெண்ணை நான் இதுவரை பார்த்ததே இல்லை. எங்கள் பள்ளிக்கு வந்து, மாணவர்கள் மத்தியில் உரையாற் றும்படி அக்ஷயாவைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அவளைப் பற்றி தெரிந்தால்தான், கஷ்டப்பட்டு படிப்பது என்பது என்ன வென்று மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

தேர்வு முடிவுகள் வெளியானதும், அக்ஷயா, தனது மதிப் பெண்களை தெரிந்து கொண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து அவள் மீளவே இல்லை என்று அவளது தாய் பானுமதி நிருபர்களிடம் தெரிவித்தார்.

இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாமல், ஒரு சிறு புன்னை கயுடன் நம்மிடம் பேசிய அக்ஷயா, தேர்வின்போது நான் சற்று நம்பிக்கையை இழந்திருந்தேன். சமூக அறிவியல் பாடத்தில் நான் சரியாக எழுதவில்லை என்று நினைத்து கவலைப்பட்டேன். என்னால் சாதிக்க முடியாமல் போய் விடுமோ என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளையாக, எல்லாவற்றையும் கடந்து சாதித்துவிட்டேன் என்று பணி வாகக் கூறுகிறார்.

திட்டமிட்டோ, அட்டவணை தயாரித்தோ அக்ஷயா படிக்க வில்லை. அவள் எப்போதுமே புத்தகத்துடனே இருப்பாள், தூங்கச் செல்லும் போதும் அவள் புத்தகத்துடன் இருப்பதை யும், நடு இரவிலும் அவள் படித்துக் கொண்டிருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன் என்று அக்ஷயாவின் சகோதரி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அக்ஷயா பதில்களை சொல்லச் சொல்ல, ஆசிரியர் ஆரோ க்கிய மேரி தேர்வினை எழுதியுள்ளார். ஒரு பதிலை எழுதும் போது எதனை ஹைலைட் செய்ய வேண்டும், எங்கு புள்ளி வைக்க வேண்டும், எங்கு கமா போட வேண்டும், எந்த வார்த்தையை அன்டர்லைன் செய்ய வேண்டும் என்பது முதல் அனைத்தையும் அக்ஷயாவே சொல்வாள். இதிலிரு ந்தே, அவளது படிப்பு ஆர்வத்தை நாம் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

சாதனை படைக்க உடல் ஊனம் ஒன்றும் தடை அல்ல என ஏற்கனவே பலர் நிரூபித்திருந்தாலும், வருங்கால தலை முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக சாதனை படைத்துள்ளார் நம் அக்ஷயா.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: