Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“கமல் ஏன் இன்னும் ரஜினியை பார்க்கவில்லை”

திரையில்தான் அவர்கள் இருவரும் போட்டியாளர்கள். நிஜத் தில் ஆயிரம் கருத் து வேறுபாடுகளை த் தாண்டிய நண்பர் கள். தமிழ் சினிமா வின் இரு பெரும் சிகரங்கள்.

இந்திய சினிமாவு க்கு புதிய கவுர வம் தந்த சாதனை யாளர் கள். பெயர்க ளைச் சொல்வதில் கூட இவர்களை பிரி த்து உச்சரிக்க முடி யாது… இவர் பெயரைச் சொன்னால், கூடவே அவர் பெயரும் தன்னிச்சையாக வரும்… அந்தப் பெயர்கள் ரஜினி – கமல்!

கடந்த ஒரு மாத காலமாக ரஜினி மருத்துவனையில் நோயு டன் போராடிக் கொண்டிருக்கிறார். அவரைக் காண அத்த னை விவிஐபிக்களும் காத்திரு க்கிறார்கள்.

ஆனால் அனுமதிதான் கிடை த்தபாடில்லை. வெளியிலிருந் து நோய்க் கிருமிகள் ரஜினி யைத் தாக்கக் கூடும் என்ப தால் சிறப்பு வார்டில் அவர் வைக் கப்பட்டிருந்தார். மனைவி, மகள் கள், மருமகன் தவிர வேறு யாரும் ரஜினியைப் பார்க்க முடி யவில்லை.

ஒரு காலத்தில் ரஜினியின் ரசிகர் மன்றப் பொறுப்பாளராக இருந்து, பின்னர் ரஜினி வழியில் நடிகராகி, இன்று எதிர்க் கட்சித் தலைவர் என்ற அந்தஸ் தையும் பெற்றுள்ள விஜய காந்த் கூட ரஜினியை நேரில் சந்திக்க முடியாத நிலை.

ஐசியுவிலிருந்த ரஜினியை கண் ணாடி வழியாகப் பார்த்து விட்டு வந்து, “அண்ணன் ரஜினி நலமு டன் இருக்கிறார். திரும்ப பழைய படி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று உருக்கத்துடன் கூறினார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரால் ரஜினியை பார்க்கக் கூட முடியவில்லை. எனவே அவர் ராகவேந்திரர் கோயி லி ல் ரஜினிக்காக பிரார்த்தனை செய் து, மக்களுக்கு தன்கையால் அன் னதானம் செய்தார்.

“இன்றைய சினிமாவில் அனை வருமே ரஜினிக்கு ரசிகர்கள் தான். பிறகுதான் நடிகர்கள். எங்கள் அன்புக்குரிய ரஜினி விரைந்து நல ம்பெற்று வரவேண்டும்,” என் றார்.

இவர்கள் இப்படியெல்லாம் பேட்டி கள் கொடுத்துக் கொண்டிருந்த போது, அனைவரும் எழுப்பிய கே ள்வி, “கமல் சார் ஏன் இன்னும் பா ர்க்கவில்லை. அவரை விட உரிமையு ள்ளவர் யார் இரு க்கிறார்கள்…?” என்றே கேட்டு வந்தனர்.

உண்மையில் ரஜினியைக் காண மூன்றுமுறை கமல் முயற் சித்துள்ளார். ஆனால் அவர் ஒவ்வொரு முறை பார்க்க முயன்றபோதும், ரஜினி தீவிர சிகிச்சைப் பிரி வு அல்லது டயாலிஸிஸ் சிகிச்சையில் இருந்ததால், பார்க்க முடியவில்லையாம்.

ரஜினியைப் பார்த்தாக வே ண்டும் என லதா மற்றும் ஐஸ்வர் யாவிடம் அவர் சார்பில் கேட்கப்பட்டபோது, இப்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை கள் காரணமாக நாங்களே அவரைப் பார்க்க முடியாத நி லை உள்ளது. எனவே மருத் துவர்கள் அனுமதி அ ளித்ததும் உங்களு க்கு உடனே சொல்கிறோ ம்,” என்று மிகுந்த தயக்கத்துடன் கூறியு ள்ளனர்.

‘பக்கத்திலிருந்தும் என் நண்பன் ரஜினியைப் பார்க்க முடிய வில் லையே… அவரைச் சந்திக்கும் சூழலை எப்படியாவது ஏற்படு த்திக் கொடுங்கள்’, என தனது ஆற்றாமையை வெளிப்படு த்தியுள்ளார் கலை ஞானி.

கமல் 50 என்ற பெயரில் விஜய் டிவி விழா கொண்டாடிய போது, முதல் ஆளாய் அதில் கலந்து கொண்டு கடைசி ஆளாய் வெளியேறி நட்புக்கு மரியாதை செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

விழாவில் தன்னைப் பற்றி ரஜினி பேசியதைக் கேட்டு கண்கலங்கி உண ர்ச்சி வசப்பட்ட கமல், அவரைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்த மிட்டார். “எவன் சொல்வான் இந்த மாதிரியெல் லாம்… ரஜினி என் உண்மையான நண்பன்… பெருந்தன்மை க்கு சொந்தக்காரர்” என்றெல்லாம் கமல் புகழ்ந்தது நினைவி ருக்கலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: