Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செல்போனின் தரத்தை எப்படி அறிவது ?

காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இர வு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட் கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரு ம்புவோம். அப்படி அன்றா டம் உப யோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளா க மாறியுள்ள கால கட்டத் தில் நாம் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொ ருவர், ஒன்றிற்கு மேல் செல் போன்களைபயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற் படக்கூடிய பாதிப்புகள் அதிகள வில் இருக்கிறது என்ற உண் மையை யாரும் மறுக்க முடி யாது, இன்ஷா அல்லாஹ் பாதி ப்புகள் குறித்து பிறகு வரக்கூ டிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம்.

இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வா ங்கப்போகின்ற செல்போன்க ளின் தரம் என்ன என்பதை தெரி ந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோ கிக்கும் பொருள்களின் தரம் உயர் ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல் போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ண யிப்பது பற்றி அறிவோ ம்.

உங்களுடைய செல்போ னில் *#06# என்று அழு த்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடை யாள நம்பர் 15 இலக்க ங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண் களில் 7 மற்றும் 8 வதாக வரக்கூடிய எண் களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தர மான தொழிற் சாலை யில் தயாரித்தது என் பது மட்டுமல்ல உங்க ளின் செல் போனும் மிக மிக தரம் உயர்ந் தது என்பதை குறிக்கு ம். (மிக மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்ப தை குறிக்கும். (மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றி ருந்தால் தயாரித்த நா ட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ் ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)

7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங் கிணைப்பு செய்தது துபாயில். தர மான பொருள் அல்ல என்ப தை குறி க்கும். (சுமார்)

7 மற்றும் 8வது எண் 13 என்றிரு ந்தால் ஒருங்கிணைப்பு செய் தது அஜேர் பயிஜான்;. தரம் குறைந்த பொருள் மற்றும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோ சம்)

மேற்சொன்ன செய்திகள் அனைத் தும் எதிர்வரும் காலங் களில் தர மான பொருள்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்கா கவே இந்த தகவல்களை இங்கே குறிப் பிடப்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply