Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அறிமுகம்: நோக்கியா இ6

விரைவில் இந்திய மொபைல் சந்தையில் நோக்கியாவின் இ6 என்ற 3ஜி மொபைல் போன் அறிமுகமாக இருக்கி றது. நோக்கியாவில் ஒரு சில மாடல் போன்களே டச் ஸ்கிரீன் திரையுடன் வருகி ன்றன. அவற்றில் மிகச் சிற ப்பானதாக நோக்கியா இ6 வடிவமைக்கப் பட்டுள்ளது.

இது ஒரு பார் டைப் போன். இதன் பரிமாணம் 115.5 x 59 x 10.5 மிமீ. எடை 133 கிராம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 2ஜி அலைவரிசையில் 14 ம ணி 48 நிமிடங்களும், 3ஜி அலை வரிசையில் 7.5 மணி நேர மும் தொடர்ந்து பேச முடியும். நான்கு வேறுபட்ட அலைவ ரிசைகளில் இது செயல்படுகிறது.

இதன் திரை 2.46 அங்குல அகலத்தில் உள்ளது. டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இரண்டு கேமராக் களில் ஒன்று 8 மெகா பிக்ஸெல் திறனுடன் ஆட்டோ போகஸ் மற்றும் டூயல் எல்.இ.டி. பிளாஷ் கொண்டு அமைக் கப்பட்டுள்ளது. முன் புறம் உள்ள கேமரா 0.3 எம்.பி. திற னுடன் டிஜிட்டல் ஸூம் வசதியுடன் வி.ஜி.ஏ. கேமராவாக உள்ளது.

இதன் ஸ்டோரேஜ் திறன் 8 ஜிபி. உள் நினைவகம் 256 எம்.பி. மாறா நிலையில் பதியப்பட்டு கிடைக்கும் நினைவகம் 1 ஜிபி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் இதன் நினைகவகத் தினை 32 ஜிபி வரை உயர்த்தலாம். கருப்பு, வெள்ளை மற் றும் சில்வர் ஆகிய நிறங்களில் இந்த போன் கிடைக்கி றது. ஒரு சிம் மட்டுமே இதில் பயன்படுத்த முடியும். எஸ்.எம். எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இமெயில், புஷ் மெயில் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. எம்பி3 பிளேயர், எப்.எம். ஸ்டீரியோ ரேடியோ இதில் இயங்குகி ன்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு A2DP இணைந்த புளுடூத், வை-பி, 3ஜி தொழில் நுட்பம் ஆகியவை கிடைக்கின்றன. ஜி.பி.எஸ். மற்றும் ஏ-ஜி.பி.எஸ். வசதிகளும் உள்ளன.

இதன் விலை ரூ.18,000 என்ற அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply