Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அவசரகால முதலுதவிகள்!

திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினா ல் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான கால கட்ட ங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலி ருந்து நம் உயிரைக் காப் பாற்றிக்கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வே ண்டும்.

மாரடைப்பு:
மாரடைப்பிற்கான அறிகுறிகள்:
நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் தி டீரென்று தாங்க முடி யாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல்.

இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல்.

கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுதல்.

படபடப்பு. மூச்சுவிடச் சிரமப்படுதல் வாந்தி அல்லது கடுமை யான அஜீரணம் ஏற்படுதல். காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுதல். தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சி யுடன் கூடிய சோர்வு.

முதல் உதவி சிகிச்சை:

மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரைப் படுக்க வையுங்கள். ஆம்புலன்சை வரவழையுங்கள்.

ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரை யை ஒரு டம்ளர் தண்­ணீ ரில் போட்டுக் குடிக்கச் செய் யுங்கள். நாக்குக்கு அடியி லும் ஒரு சார்பிட்ரேட் மாத் திரையை வையுங்கள்.

பாதிக்கப்பட்டவருக்கு சுவா ச மூச்சு நின்று போயிருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பியுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியை யும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்கு மாறு செய்து பாதிக்கப் பட்டவரின் மூக்கின் இரு நாசித் துவாரங்களையும் அழுத் தி மூடிக்கொண்டு, பாதிக் கப் பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொரு த்திக்கொண்டு மெது வாக காற்றை உட்செலுத்துங் கள்.

நாம் காற்றை உள்ளிழுக் கும் போது நம் மார்புப் பகுதி மேல் நோக்கி அசை வதுபோல பாதிக்கப்பட்டவரின் மார்புப்பகுதி மேல்நோக்கி அசைகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில் மீண்டும் மீண்டும் செயற்கை சுவாசம் கொ டுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சு விடத் தொடங்கும் வரை இப்படி தொடர்ந்து கொடுங்கள்.

தீக்காயத்திற்கான முதல் உதவி:

சாதாரண தீக்காயமாக இருந்தால் அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே மூலம் குணப் படுத்தலாம்.

தீக்காயத்தில் தொடர்ச்சியாக தண்­ணீரை ஊற்றிக் குளிர்ச்சியாக வைத்தி ருங்கள்.

பாதிக்கப்பட்டவருக்குத் தலைசுற்றல், தளர்ச்சி, தாங்க முடி யாத ஜுரம், நடுக்கத்தோடு உளறுதல் மற்றும் உடல் வியர் த்து, விரைத்து குளிர்ந்துபோனால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

வெட்டுக்காயம்:

சின்னஞ்சிறு வெட்டுக்காயமா னால் காயத்திலுள்ள தூசித்துகள் களை அப்புறப்படுத்திவிட்டு ஆன் ட்டிபயாட்டிக் களிம்பினைக் காய த்தின்மீது போடலாம். காயத்தை சுற்றிக் கட்டு போடுங்கள். தின மும் புது பேண்டேஜ் துணிகொ ண்டு கட்டுப் போடுங்கள்.

வெட்டுக்காயம் நீண்டநாட்களாக ஆறாமல் இருந்து, அதி லிருந்து சீழ் வடிதல், மற்றும் ஜுரம் வந்தால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

குறிப்பு:
கண்ணாடிப்பிசிறு போன்றவை ரொம்ப ஆழத்தில் உள்ளே சென்றிருந்தால் அதை அகற்ற நீங்கள் முயற்சி செய்யவேண் டாம்.

எலும்பு முறிவு:
கையிலோ அல்லது காலி லோ அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும்போது கை அல்லது கால் விரல்க ளில் உணர்ச்சி இருக்கி றதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நரம்பு மண்டலம் அல்லது முது குத்தண்டு பாதிக்கப்பட்டி ருக்கும். அதனால், உடன டியாக பாதிக்கப்பட்டவ ரை டாக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர் பார்க்கும் வரை கை கால்களை அசைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கைவிரல் அல்லது கால் விரல்களில் காயம் பட்டிருந்தால் விரல்களை அசைக்காமல் பார்த்துக் கொள்ளு ங்கள்.

எலும்புமுறிவுக் காயத்தில் எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி டாக்டரிடம் அழைத்துச் செல் லுங்கள்.

எலும்பு முறிவு ஏற்பட்ட இடத் தில் அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகின்ற எலும் பினை உள்ளே பழைய நிலை க்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்புமுறிவுக் காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ அசைக்கவோ கூடாது.

டாக்டரை பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு ஏற்பட்ட வருக்கு தண்­ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உண வோ கொடுக்கக்கூடாது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply