Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணுக்கால் வலியா?

ணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…

தோள்பட்டை, கழுத்து, முது கு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக் காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண் களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலி யானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற் கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக் கும்.

னித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே கணுக்கால் வலி உண்டாகி ன்றது.

கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்க முடி யாத வலி உண்டாகும். காலை அழுத்தி, ஊன் ற முடியாது. மேலும் சிறு கட்டி போல் (எலும்புபோல்) காண ப்படும்.

காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும்.

பின் மாலை நேரத்திலும் வலி இருக்கும். மாடிப் படிகளில் ஏறி இறங்க முடியாது. கால் பாதத்தில் ஒருவிதமான எரிச் சல் இருந்துகொண்டே இருக்கும். காலை அழுத்தி ஊன்றி நடக்காததால் நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு தொடையிடு க்கில் நெறி கட்டிக் கொள்ளும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடை வில் நடக்க இயலாமல் போய் விடும்.

கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:

வாதம், பித்தம், கபம் போ ன்ற முக்குற்றங்களில் பித்த நீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது. இப்படி தலை யில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப் பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.

துபோல் கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகு தியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி வலியை உருவா க்குகின்றது.

பெண்களுக்கு மாத வில க்கு காலங்களில் ஒழுங் கற்ற உதிரப் போக்கு, நாள்கடந்த மாதவில க்கு, ஜலதோஷம் போன்றவ ற்றால் கணுக்காலில் வலி உண் டாகும்.

ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற் படுத்தும்.

ப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்கா லில் தங்கும் நீரானது உப்புப் படி வமாக மாறி கட்டிபோல் உருவா கின்றது. இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்க ள். உப்பும் சுண்ணாம்புச் சத்தும் இணைவதால் திடப் பொருளாக மாறும். உடம்பில் உள்ள சர்க்க ரையும் சேர்வதால் எலும்பு போல் உறுதியாகிறது.

பொதுவாக உடலில் சர்க்கரை இருக்கும். இந்த சர்க்கரை யானது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் உப்பு கலப்பதால் அவை கட்டியாகி விடுகின்றன. உதாரண மாக சுண்ணாம்பு, சர்க்கரை, உப்பு, சேர்ந்தால் கட்டியாக மாறும். அதுபோல்தான் இனிப்பு நீர், உப்பு நீர், சுண்ணாம்பு நீர் சேர்ந்து கணுக்காலில் தங்கி கட் டியாக விடுகின்றது. இதனால் பாத வெடிப்பு ஏற்படு வதற்கும் காரணமாகின்றது.

ரவில் அதிகமான கார உணவு உண்பதாலும் காலை, மதிய உணவிலும் காரத்தை சேர்த்துக் கொள்வதாலும் குடல் அலர் ஜியால் பித்த நீர் மேல் எழும்பி தலையில் நீர் கோர்த்து தலை வலி வந்து பின் கணுக்காலில் கட்டியாகி விடுகின்றது.

லச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற வற்றால் கூட இந் த வலி உருவாகிறது.

கல் தூக்கம், அதிக உடல் உழை ப்பு, உடல் உழைப்பின்மை போன் ற காரணங்களால் கூட கணுக் கால் வலி உண்டாகும்.

டல் எடை அதிகரித்தாலும் கணுக்கால் வலி உண்டாகும்.

து, புகை போன்ற போதைப் பொருட்களாலும் உடலில் அலர் ஜி உருவாகி கணுக்கால் வலி உ ண்டாகும்.

முறையற்ற உணவு, நீண்ட பட்டினி போன்றவற்றாலும் உரு வாகலாம்.

கணுக்கால் வலி வருமுன் காக்க:

லச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக வாயுவை உண்டுபண்ணும் உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்லது.

நாம் உண்ணும் உணவில் காரத்தன்மையைக் குறைக்க வேண்டும். கார உணவை மதிய வேளையில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் இரவு உணவில் காரம் சேர்க்கக் கூடாது.

கார உணவைப் பற்றி சித்தர்கள் அன்றே மாலைக்குப்பின் காரம் தேவையில்லை என்றார்கள். அதனால் கார உணவை தவிர்ப்பது நல்லது.

திய உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டு மே ஒழிய அதிக நேரம் தூங்கக்கூடாது. நீண்ட தூக்கம் கொ ண்டால் உடல் எடை அதி கரிக்க ஆரம்பிக்கும்.

டலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும். இதனால் இரும்புச் சத்து நிறைந்த பழங் கள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தினமும் 1/2 மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது நல் லது. அதிகமாக நீர் அருந்த வேண்டும்.

ணுக்காலின் மேல்பு றத்தில் தைல வகை களான காயத் திரு மேனி தைலம், கற் பூராதித் தைலம், வா த நாராயணத் தைலம் போன்ற வலி நிவா ரண தைலங்களைத் தடவி 1/2 மணி நேரம் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் கணுக்காலில் உண்டான கட்டி சிறிது சிறிதாக குறையும். காலையும், மாலையும் இவ்வாறு செய்வது நல்லது.

வசம்பு – 5 கிராம்
மஞ்சள் – 5 கிராம்
சுக்கு – 5 கிராம்
சித்தரத்தை – 5 கிராம்

டுத்துப் பொடித்து முருங்கை இலை அல்லது வெற்றிலை சா றில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக் கால் கட்டி நீங்கி வலி குணமாகும்.

எருக்கின் பழுத்த இலை – 5
வசம்பு – 5 கிராம்

ரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீ­ரில் கொதிக்க வை த்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல் பாக த்தில் பூசி வர கட்டி குணமாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply