Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கற்பழிப்பு வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன் – சீமான்

சீமான் அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிகை விஜயலட்சுமி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்தித்துப் பேசி னார். அப்போது அவர் தான் மிக வும் வறுமையில் வாடு வதா கவும், குடும்பச் செலவுக்குக் கூட பணம் இல்லை என்று கூறி வருத் தப்பட்டார். மேலும் தனது அக்காவின் விவாகர த்து வழக்கு கோர்ட்டில் நடப்பதாகவும், அதற் கான செலவை சமாளிக்க முடிய வில்லை என்று அழுதார்.

நான் மனிதாபிமான அடிப்படை யில் அவருக்கு சில உதவிகள் செய்து கொடுத்தேன். அது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு. இதன் பிறகு அவரிடமிருந்து எனக்கு எஸ்.எம்.எஸ் கள் வரத் தொடங்கின. என் அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லை, பண உதவி தேவை என்று தகவல் வரும்.

என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று எழுதி வைத்து விடுவேன் என்று கூட ஒருமுறை மிரட்டல் எஸ்.எம்.எஸ். வந்தது. இதை எனது நண்பரான டைரக்டர் சேரனை தொ டர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித் தேன். விஜயலட்சுமி மீது போலீசில் புகார் கொடுக்கலாமா என்று அவரிடம் ஆலோச னை கேட்டேன். வேண்டாம் என்றும், விஜயலட்சுமியை கண்டிப் பதாகவும் சேரன் கூறினார்.

அதன் பிறகு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாகி விட்டேன். திமுக, காங்கிரசை எதிர்த்து கூட்டங்களில் பேசினேன். தேர் தலில் அந்தக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. என்னால் பாதிக்கப்பட்டவர்கள் தான் இப்போது நடிகை விஜயலட்சுமி யை தூண்டி விட்டு ள்ளனர்.

விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் என் மீது போடப்பட் டுள்ள கற்பழிப்பு வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன். அரசி யல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை நிரூபிப்போம் என்றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: