Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழக சட்டசபை முதல் கூட்டம்: கவர்னர் உரையில், பல்வேறு ….

தமிழக சட்டசபை முதல் கூட்டம் இன்று கவர்னர் உரையு டன் துவங்கியது. இன்றை ய உரையில் தமிழகத்தில் செயல் படுத்தப்படவிருக் கும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளி யானது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த இந் த கூட்டத்தில் புதிதாக பொறு ப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகை யில் பல்வேறு அம்சங்கள் அடங்கி இருந்தது. அதே நேரத் தில் தி.மு.க., கொண்டுவந்த திட்டங்கள் மாற்றம் கொண்டு வருவதும் சிலவற்றை ரத்து செய்வதும், தொழில் துறை ஊக்கம் அளிப்பதும் என பல்வேறு திட்டங்கள் இருந்தன.

கூட்டம் துவங்கியதும் புதிய எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் ஜெ., தமிழக மக்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவி த்து தனது உரையை துவக்கினார்.

இலவச அரிசி வழங்கும் திட்டம், கேபிள் டி.வி., அரசுடை மையாக்குவது தொடர்பாக உடனடி நடவடிக்கை, கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து , மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மிக்ஸி, கி ரைண்டர், மின்விசிறி, வரும் செப் 15 ம் தேதி முதல் அமல்படுத்தப்படு ம், சூரியஒளி மூலம் மின்சாரத் திற்கு முக்கிய த்துவம், மேலவை கொண்டுவரப்படாது, ஓம ந்தூரார் தோட்டத்தில் தி.மு.க., அரசின் காலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலக பணிகள் நிறுத்தி வைப்பது, இது தொடர்பான கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையில் கமிட்டி உள்ளிட்டவை கவர்னர் உரையில் முக்கிய அம்சங்கள் ஆகும்.

* சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் மோனா ரயில் திட்டமாக மாற்றப்படும்.

* ஏனைய பகுதிகளில் உள்ள சென்னை அண்ணா பல்கலை., கலைக்கப்பட்டு, சென் னையில் மட்டும், அண்ணா பல்கலை., இணைந்து ஒரே மை யமாக செயல்பபடும்.

* மக்கள் நலத்திட்டம் அங்க அடையாளத்து டன் கூடிய புதிய திட்டம்

* முதியோர் உதவித்தொகை வங்கி மூலம் வழங்க ஏற்பாடு.

* பொது விநியோக திட்டத்தை வலுப்படுத்த கடத்தல்காரர் கள் மீது கடும் நடவடிக்கை

*ரூ.50 கோடி செலவில் விலைக்கட்டுப்பாடு நிதியம்

*உற்பத்தி குறைவாக உள்ள அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி அதிகரிக்க திட்டம்

* மீனவர்கள் நலன் பேணிக்காக்கப்படும்

* வேலைவாய்ப்பை பெருக்கிட ஒட்டுமொத்த வளர்ச்சி திட் டம்

*வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல திட்டம்

*முதன்மை துறையான வேளா ண்மை ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்துள்ளது. இதனை சீர்செய்ய சிறப்பு கவனம்

*கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்படும். இது மக்க ளின் தேவையை நிறைவேற்றும்படியா முழுமையா இல் லை எனவே அனைவருக்கும் தரமான மருத்துவம் பெற புதி ய மருத்துவ திட்டம் கொண்டுவரப்படும்.

*சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழு. சமச் சீர் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் எதிர்காலம் பாழா வதை இந்த அரசு விரும்பவில்லை. தற்போதுள்ள புது பாடத் திட்டத்தில் தரமானதாக இல்லை.

*விவசாயிகள் நலன் கருத்தில் கொண்டு பண்ணைசார் சிற ப்பு திட்டம்

*துல்லிய பண்ணை முறை பெரிய அளவில் கொண்டு வரப் படும் அதிகவருவாய் தரும் பயிர்கள் பயிரிட தேவையான உதவிகள் செய்யப்படும்

* வேளாண்மையில் நீடித்த வளர்ச்சிக்கு பாசனநதி முக்கி யம், நதிநீர் இணைப்புக்கு முக்கிய த்துவம் வழங்கப்படும்.

* மேட்டூரில் முன்கூட்டி ய தண்ணீர் திறக்க உத்தரவு

* வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டம் ஒருங்கிணைத்து ஏழை குடும்ப நல திட்டம் கண்காணிக்கப்படும்

*வரீ சீர்திருத்தம், விற்பனை வரி, சரக்கு, சேவைவரியை பின்பற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

*முல்லை பெரியாறு உள்ளிட்ட நதி நீர் பிரச்னையில் சட்ட ப்படியான நடவடிக்கை எதிர்கொள்வது

*தொழில் துறையில் மோட்டார்வாகனதுறை தகவல் தொழி ல் நுட்பம், கணனி துறையில் பெரும் தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

* நானோ தொழில் நுட்பம் ஊக்கு விக்கப்படும்

*தகவல் தொழில்நுட்பம் தொழில் பூங்கா மூலம் வளர்ச்சிக்கு பாடுபடு வோம்

*மின்சாரம், சாலை வசதி குறைவு போக் கிட திட்டம் , மாநில அரசின் நிதியுடன் தனியார் தொழில் நிறுவனங் களுடன்

* மின் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆட்சியில் தொழில் துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பாதிப்பு உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக உருவாக்கப்படும், தொழில் துறைக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். மின் வழங்கிகள் மூலம் மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தி முழுமையாக செயல்படுத்துதல், மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்திக்கு முழுக்கவனம்.

* தொடர்பு துறைகள் பழைய செயல்பட்டு வருகிறது. அமைச் சர் ஒருபுறமும், செயலகம் ஒரு புறமும் இருப்பது நல்லத ல்ல, கூடுதலான செலவு, தரமற்ற கட்டுமானம் இவைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிட்டி.

*சட்ட ஒழுங்கு பேணிகாத்திட முழு நடவடிக்கை எடுக்கப் படும், ஜெ., ஆட்சி பொறுப்பேற்ற கடந்த காலத்தில் அமைதி ப்பூங்காவாக நடத்தியுள்ளார். போலீஸ் துறை நவீனப்படுத்த ப்படும், குற்றவாளிகள், கண்காணிக்கும் மின்திட்டம் விரை வில் செயலாற்றப்படும்.

*சென்னை நகரில் ஆற்றோரம் வாழும் நபர்களுக்கு பாது காப்பான வீடு வழங்கப்படும்.

* கடற்கரையோரங்களில் சிறு துறைமுகங்கள் தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும்

*பெண்கள் நலன் நிறைவேற்றுவது இந்த அரசின் முக்கிய தலையாய பணி ஆகும். சுய உதவிக்குழு மூலம் தொடர் ந்து வங்கிகக்கடன் வழங்கப் படும்

* மகளிருக்கு மின்விசிறி, கி ரைண்டர் ,மிக்ஸி, செப் 15 ம் தேதி முதல் வழங்கப்படும்

* சூரிய எரிசக்தி ஆரம்பகட்ட செலவு அதிகமாக இருந்தாலும் , தெருவிளக்கு, மற்றும் சமுதாய மாற்றங்களுக்கு தேவை யான ஒன்றாக இந்த அரசு கருதுகிறது. எனவே இது ஊக் குவிக்கப்படும்.

*சுற்றுச்சூழல் பாதுகாத்திட சிறப்பு முயற்சிகள், மக்கிப் போ காத பிளாஸ்டிக் தொடர்பான சிறப்பு கவனம் எழுப்பிட புதிய திட்டம், பாலித்தின் பைகளுக்கு தடை

*தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும், பள்ளிச்சேர்ப்பு அதிகரிக்க நடவடிக்கை.

*மேலவை தேவையில்லை என முன்னாள் முதல்வர் எம். ஜி.ஆர்., முடிவு எடுத்திருந்ததால் அதன் அடிப்படையில் மீண்டும் மேலவை ஏற்படுத்த மாட்டாது.

* வீட்டு வசதி திட்டத்தினால் பயனாளிகளுக்கு உரிய பயன் கிடைக்காததாலும், அரசு வழங்கிய நிதிஉதவி மிக குறைவு என்பதாலும், அந்த திட்டம் கைவிடப்ட்டு, அரசே வீடுகள் கட்டத்திர ஏற்பாடுகள் செய்யப்படும்.

மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி இணைக்கும் தனி இயக்குனரகம் உருவாக்கப்படும்.

அரசு ஊழியர் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 6 மாதமாக உயர்த்தப்படும்.

முறையில்லா விருந்தாக இருக்கிறது; கவர்னர் உரை குறித்து ஸ்டாலின் விமர்சனம்: இன்றைய கவர்னர் தாக்கல் செய்த உரை காய்கறி மட்டும் உள்ளதாகவும், முழு விருந் தாக இல்லை என்றும் விமர்சித்தார். தி.மு.க., சட்டசபை கட்சி தலைவர் மு.க., ஸ்டாலின் சபைக்கு வெளியே நிருபர் களிடம் பேசுகையில்; ஒரு விருந்து என்றால் சாதம் முதல் காய்கறிவகைகள் என இருக்கும். ஆனால் கவர்னர் உரை யில் சாம்பார், ரசம் இல்லை, வெறும் காய்கறிவகைகள் மட்டும் உள்ளது. தி.மு.க., கொண்டு வந்த திட்டங்கள் ரத்து செய்ப்பட்டுள்ளது குறித்து கேட்கையில் , அதே திட்டத்தை பெயரை மாற்றி செயல்படுத்துகின்றனர். ரத்து செய்யப் படுவது வளர்ச்சிப்பாதையில் நேர்கோட்டில் செல்வதற்கு எதி ராக உள்ளது என்றார். புதிய சட்டசபை வளாக பணிகள் குறித்து ஆராய நீதிபதி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு இது போன்று எத்தனையே கமிட்டிகளை பார்த் திருக்கிறோம் எதையும் சந்திப்போம் என்றார்.

மீண்டும் சட்டசபை 6ம் தேதி கூடுகிறது: கவர்னர் உரை முடிந்ததும் சபாநாயகர் தலைமையில் கூடி சட்டசபை அலு வல் குழு ஆய்வ செய்தது. பின்னர் நிருபர்களிடம் தெரிவித்த சபாநாயகர் வரும் 6ம் தேதி சட்டசபை கூடுகிறது. அந்நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒத்தி வைக்கப்படும், 7, 8, 9 தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிப்பது, மற்றும் விவாதம் நடக்கும், 10 ம் தேதி பதிலுரையுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும்.

NEW IN DINAMALAR

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: