Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூச்சி கட்டுப்பாடு: இயற்கை முறையில்…

இனக்கவர்ச்சி பொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச் சேர் ந்த தாய்ப்பூச்சிகளைக் கவ ர்வதாகும். ஒவ்வோர் பூச் சியும் எதிர் பாலினத்தை க் கவர்ந்து உறவுகொள்ள ஒரு விதமான வாசனை யுள்ள ஹார்மோனை வெ ளியிடும். இந்த வாசனை யை நுகர்ந்து ஆண் அல் லது பெண் பூச்சிகள் தங் கள் எதிர் பாலினத்தை நோக்கி வரும். இந்த இயற்கை அடிப்படையைக் கொண்டு தான் இனக்கவர்ச்சி பொறிகள் செயல் படுகின்றன.

இவ்வாறு கவரப்படும் பூச்சிகள் பின்னர் அழிக்கப்படும். இதன் மூலம் முட்டை யிடுதல் தவிர்க்க ப்படுகிறது. முட்டை யிடு தல் தவிர்க்கப்படுவதால் புழுக்கள் உற்பத்தி ஆவது தவிர்க்கப்பட்டு பூச்சி மருந்தின் தேவையும் குறைகிறது. இனக்க வர்ச்சிப் பொறிகள் மூலம் எல்லாவிதமான பூச்சி களையும் கட்டுப்படுத்த இயலா து. குறிப்பிட்ட பயிர்களில் குறிப்பிட்ட பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தவல்லது.

கத்தரி தண்டு துளைப்பான், வேர்க்கடலை இலை மற்றும் காய் துளைப்பான், தக்காளி காய் துளைப்பான், நெல் தண்டு துளைப்பான். பொறிகள் வைப்பதால் பூச்சி மருந்தின் தேவை குறைகிறது. ஒரு ஏக்கருக்கு 5-6 பொறிகள் வைத்தால் போது மானது.

ஒட்டும் பொறி: சாறு உறிஞ்சும் பூச்சிகளான கொசு, வெள் ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த இந்த ஒட்டும் பொறி பயன்படுகிறது. ஒரு தகரஷீட்டில் மஞ்சள் பெயின்ட் அடித்து அதன் மேல் மண்ணெண்ணெய் தடவி வயல்களில் வைத் தால் இந்தப்பூச்சிகள் தகர ஷீட்டில் ஒட்டிக்கொள்ளும். வெண் டை, பருத்திப்பயிரில் இது பெரிதும் பயன்படுகிறது. ஒரு ஏக் கருக்கு 4-5 பொறிகள் வைத்தால் போதுமானது. இருப்பினும் பூச்சி தாக்குதலுக்கேற்ப பொறிகளின் எண்ணிக்கை மாற லாம்.

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல்: தற்போது இயற்கை விவசாயம் பெருமளவில் விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பூச்சிக் கட்டுப்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் ஒரு எளிமையான முறை ஒன்றை தற் போது காண் போம். இஞ்சி,பூண்டு, பச் சை மிளகாய் கரைசல் என் பது இதன் பெயர்.

பூண்டு ஒரு கிலோ எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின் னர் இதனை எடுத்து நல்ல விழு தாக வருமாறு அரை த்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித் தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுது களை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக் கொள்ள வேண்டும். (ஜிலேபி பிழிவது போல் வைத்துக் கொள்ள வேண்டும்). இவ்வாறு தயார் செய்த காடா துணி யில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக் கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.

இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடு த்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சி கள்/செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றி லும் கட்டுப்படுத்தப்படும்.

காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும். இதன்மூலம் இக்கரைச லின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும். இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லை யெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.

-எம்.அகமது கபீர், தாராபுரம்-638 656. 93607 48542.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: