Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மருத்துவ கவுன்சிலிங் ஜூன் 30 . ..

மருத்துவம் மற்றும் துணை படிப்புகளுக்கான மாணவர் சேர் க்கை, கவுன்சிலிங் வரும் 30ம் தேதி துவங்குகிறது.

தமிழகத்தில், அரசு மருத்து வக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப் பிற்கான அரசு ஒதுக்கீடு இட ங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல் லூரி, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், பி.டி.எஸ்., பட்டப் படிப்பி ற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள், கவுன்சிலிங் மூலம் நிரப்பப் பட உள்ளன.

மருத்துவக் கல்வி இயக்ககம் மூலம், மருத்துவ கல்விக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலு ம், கடந்த மாதம் 16ம் தேதி முதல் வழங்கப்பட்டன. பி.எஸ்சி., (நர்சிங்) பி.பார்ம்., பி.பி,டி., உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள், கடந்த 18ம் தேதி முதல் வழங்கப்பட்டன.

விண்ணப்பத்தை பெறவு ம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர் ப்பிக்கவும் நேற்று கடைசி நாள் என்பதால், சென் னை கீழ்ப்பாக்கம் மருத்து வக் கல்வி தேர்வுக்குழு அலுவலகத்தில் பெற் றோர் – மாணவர்கள் கூட்டம் அலை மோதியது.

விற்பனை செய்யப்பட்ட 24 ஆயிரம் விண்ணப்பங்களில், 21 ஆயிரம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டு ள்ளன. மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக் கான கலந்தாய்வு வரும் 30ம் தேதி துவங்குகிறது. தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களும் சேர்க் கப்பட்டு, தரவரிசை பட்டியல் வரும் 21ம் தேதி வெளி யிடப்படுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: