Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதல் போகம் நெல் சாகுபடி: மதுரையில்…

தற்போது “ராஜராஜன் 1000′ என்ற நவீன நெல் சாகுபடி என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். விவசாயி கள் தற்போது இந்த நவீன முறை யை அனுசரித்து சாகுபடி செய் ய வேண்டும். இந்த முறையில் முக்கியமாக கவனிக்கப்பட வே ண்டியது வயலை மேடு பள்ளம் இல்லாமல் தயார் செய்வதா கும். ஏனென்றால் விவசாயிகள் 14 நாட்கள் வயது டைய இளம் நாற்றினை நட வேண்டிஉள்ளது. ஒரு ஏக்கர் சாகு படி க்கு மூன்று கிலோ விதை நெல் போதுமானது. விதையினை உப்புக் கரைசல் நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

100 கிராம் சமையல் உப்பினை 10 லிட்டர் நீரில் கலந்து, இதில் விதைகளை இட்டு மிதக்கும் விதைகளை நீக் கி, அமிழ்ந்து இருக்கும் நல்ல விதைகளை மட் டும் எடுத்து தண்ணீரில் கழுவி விதையை பயன்ப டுத்தலாம். அடுத்து பாய் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். இதனை நடவு வய லின் அருகிலோ, அல்லது வயலின் ஓரத்திலோ அமைக்க லாம். ஒரு ஏக்கர் நடவிற்கு 40 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள ஒரு சென்ட் நாற்றங்கால் தேவை. மண்ணின்கீழே பாலிதீன் பேப்பர் போட்டு விதை சட்டம் உபயோகித்து நா ற்று நட வேண்டும். ஒரு விதைச்சட்டத்திற்கு 50 கிராம் வீதம் விதை போடவேண்டும். நாற் றங்காலுக்கு அடியுரமாக தொழு உரம் இட வே ண்டும். ஒரு சென்ட் நாற் றங்காலுக்கு 2 கிலோ டிஏபி உரம் இடலாம். நாற்றங்காலில் நாற்றுக்கள் போதிய வளர்ச்சி பெற்றிருக் கவில்லையெனில் விதைவிட்ட 9ம் நாள் 50 கிராம் யூரியா வினை 10 லிட்டர் நீரில் கரைத்துக்கொண்டு கரைசலை நாற் றுக்கள் மேல் தெளிக்கலாம். நடவு வயலுக்கு ஏற்ற இயற் கை, செயற்கை உரங்களை இடலாம்.

அடுத்து மார்க்கர் கருவி உபயோகிப்பது பற்றி தெரி ந்து கொள்ள வேண்டும். நடவு வயலில் 25து 25 செ. மீ. இடைவெளியில் ஒற் றை நாற்று மேலாக சதுர நடவு மேற்கொள்ளும் வகை யில் அடையாளம் இடும் கருவியை பயன் படு த்தி நடவு செய்ய வேண்டும். இதனால் போதிய அளவு காற் றோட்டம், சூரிய வெளிச்சம் நாற்றுக்கு கிடைக்கிறது. மே லும் கோனோ களை எடுக்கும் கருவி கொண்டு குறுக்கும் நெடுக்கும் களையினை அழுத்தி அழிக்க ஏதுவாக உள்ளது.

கோனோ களை கருவி: இக்கருவியினை நடவு செய்த 10ம் நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை குறு க்கும் நெடுக்குமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு களை க்கருவியை பயன்படுத்துவதால் ஒவ் வொரு முறையும் சுமார் ஒரு டன் அள விற்கு களைகள் அமுக்கப்பட்டு பசுந் தாள் உரமாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் மண்ணில் அங் ககப் பொருளின் அளவு அதிகரிக்கின்றது. மேலும் மண் ணில் அதிக காற்றோட்டம் ஏற்பட்டு வேர் வளர்ச்சி அதிகரிக்கி ன்றது.

நீர்ப்பாசனம்: புதிய பெயர் கொண்ட நெல் சாகுபடி முறை யில் நீர்ப்பாசனம் செய் யும்பொழுது சாதாரண சாகுபடி முறையைவிட பாதி அளவு நீரே போது மானதாகும். முத லில் பாய்ச்சப்பட்ட நீர் மறை ந்து சிறு கீறல்கள் தோன் றும் நிலையில் மீண்டும் நீர்ப்பாசனம் மேற்கொ ள்ளப்பட வேண்டும். இதனால் மண்ணின் நு ண் உயிர்களின் வளர்ச்சி அதிக ரித்து அதன் செயல்பாடுகள் அதிகரிக்கின்றது. மேலும் மண் ணில் காற்றோட்டம் அதி கரித்து வேர் வளர்ச்சி அதிக ரிப்பதால் நாற்று நன்கு தூர்கட்டி வளர்கிறது. புதிய பெயர் கொண்ட நெல் சாகுபடி முறையில் 25 செ.மீ. இடைவெளி யில் மேலாக நடப்பட்ட ஒற்றை நாற் றிலிருந்து 35-40 வாளிப் பான பக்கத் தூர்கள் வெளிவருகி ன்றன. இது சாதாரண நட வைவிட மூன்று மடங்கு அதிக மானது ஆகும்.

புதிய முறையில் பயிருக்கு மேலுரம் இடுவது முக்கியம். இதற்கு இலை வண்ண அட்டையைப் பயன்படுத்த வேண் டும். விவசாய இலாகா அதிகாரிகள் உதவியோடு இப்பணி யை செய்யலாம். இந்த சீசனுக்கு ஏற்ற ரகங்களை விவசாயி கள் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். ஆடுதுறை 36, ஆடுதுறை 45, ஆடுதுறை 47 மற்றும் 100 நாள் நெல் ஜே-13 இவைகளை சாகுபடி செய்யலாம்.  எஸ்.எஸ்.நாகராஜன்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: