Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

498ஏ குடும்ப வன்முறை சட்டப்பிரிவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக‌ (பாகம்3). . .

இந்திய திருமண சட்டங்களும் அதில் உள்ள குழப்பங்களும்.

இந்திய குடும்ப அழிப்புச் சட்டங்களை இயற்ற “குடும்ப வன் முறை சட்ட நிதி” என்ற பெயரில் வெளிநாடு கொடுக்கும் நிதியு தவி! இவற்றில் உருவாகிக் கொ ண்டிருப்பவை தான் சமீபகால மாக உருவாகிக்கொண்டிரு க்கும் 2005 Domestic Violence Act போ ன்ற சட்டங்கள்.

1.வரதட்சணை தடுப்புச் சட்டம் (1961) – இதில் இதுவரை வரதட்ச ணை கொடுத்த எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட்டதில் லை.

2.IPC498A (1984) – இந்த சட்டப்படி மனைவி சொல்வது மட்டு ம்தான் உண்மை. மனைவி பொய்யாகப் புகார் கொடுத்தால் தண்டிக்க எந்தவித பிரிவு களும் கிடையாது.

3.குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (2005) – இந்த சட்டப்படி பெண் என்பவள் எந்த வன்முறையும் செய்யத் தெரியாதவள். ஆண்தான் எப்போதும் குற்றவாளியாகக் கருதப்படுவான்.

4.கள்ளக் காதல் உறவு (IPC497) – இந்த சட்டப்படி பெண்ணின் கள்ள உறவு என்பது புனிதமானது. இந்த தவறான உறவில் ஈடுபடும் பெண் தானே விரும்பி தவறு செய்தா லும் எந்த தண்டணை யும் கிடையாது. ஆனால், ஆணுக்கு தண்டனை உண்டு.

ஒரேவித நோக்கத்திற்காக இதுவரை அடுக்கடுக்காகப் பல வித சட்டங்கள் தொடர்ந்து இயற்றப்பட்டு வருகிறது. ஆ னால் சட்டத்தின் நோக்கத்தை முழுமையாகச் செயல் படுத் தாமல் வரதட்சணை கொடுப்பவர்களையும், சட்டத்தை சுய நலத்திற்காகப் பயன்படுத்துபவர்களையும் தண்டிக்காமல் ஆதரித்து வளர்க்கும் வகையில் இந்த சட்டங்கள் இயற்ற ப்பட்டுள்ளன.

அதற்குக் காரணம் பல பொய் வழக்குகள் பதிவானால்தான் அதிக புள்ளிவிபரம் காட்டி நிதியுதவி பெறமுடியும். எப்போ தும் இதுபோன்ற புள்ளிவிபரங்களில் பதிவாகும் வழக்கு களின் எண்ணிக்கை மட்டும்தான் காட்டப்படும். கடைசியில் எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றம் என நிருபிக்கப் பட்டது என்று குறிப்பிடமாட்டார்கள். ஏனென்றால் புள்ளி விபரம் காட்ட எண்ணிக்கையே இல்லாமல் போய்விடும் அல்லவா? அதனால் காவல்நிலையத்தில் எத்தனை FIR பதிவாகிறது என்பது மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள் ளப்படும். அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதி வாக பல வகையான சட்டங்கள் தேவை. அவற்றை தவறாகப் பயன் படுத்தினால் தானே பதிவாகும் புகார்களின் எண்ணிக்கை யும் அதிக மாகும். இந்த தந்திரம் தெரிந்தவர்கள் பெண்க ளின் பெயரால் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த உண் மையை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக் கிறார்கள்?

தமிழ் மனம் & சிந்திக்கவும் என்ற இணையத்திலிருந்து பெறப்பட்ட செய்தி இது. 498ஏ குடும்ப வன்முறை சட்டப் பிரிவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கான தளம் இது

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: