Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் பிரவுசர் மிக வேகமாக இயங்க

யாரும் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டரை விரும்புவ தில்லை. அப்படியே கம்ப்யூ ட்டர் பூட் ஆகச் சற்று நேரம் எடுத் துக் கொண்டாலும், அதன் பின்னர் மேற்கொ ள்ளும் வேலை களும், குறி ப்பாக இணையத் தேடல்கள் மெதுவாக இயங்கு வதனை ஏற்றுக் கொள்ள மாட்டோ ம். மிக மெதுவாக இய ங்கி, முடங்கிப் போகும் பிரவுசரை நிச்சயம் யாரும் வரவேற்க மாட்டோம். உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட் மிக வேகமாக இயங்கக் கூடியது என்றாலும், பிரவுசர் மெதுவாக இயங்கினால், எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை.

பிரவுசர் மெதுவாக இயங்கப் பல காரணங்கள் உண்டு. மெ மரி, கேஷ் மெமரி பை ல்கள் எடுத்துக் கொ ள்ளும் இடம், ஆட் ஆன்தொகுப்புகள் இ யங்கும் விதம் எனப் பல காரணங் களைச் சொல்லலாம். அதிர் ஷ்ட வசமாகச் சில பிரச்னை களை நாமே தீர்த்து, பிரவுசரை வேகமாக இயங்க வைக்கலாம். அவற்றை நாம் இங்கு காணலாம்.

1. ஹோம் பேஜ்: உங்களுடைய பிரவுசரை இயக்கத் தொடங் கியவுடன், அது உங்கள் ஹோம் பேஜ் எனப்படும் நீங்கள் குறித்து வைத்த இ ணைய தளத்தைக் காட்டு ம். இந்த இணைய தளம் பிர வுசர் இயக்கும் ஒவ் வொரு முறையும் காட்டப்பட வே ண்டும் என எண்ணுகிறீர்க ளா? பெரும்பாலானவர்கள் இல்லை என்றே இதற்குப் பதில் அளிப்பார்கள். பின்ன ர் ஏன் இதனை முதல் இணைய தளமாகத் திறக்கும்படி அமைக்க வேண்டும்? எடு த்து விடலாமே? முதலில் செல்ல வேண்டிய தளம் என்ற இடம் காலியாக இருக்கலாமே! ஹோம் பேஜ் என்பதைக் காலியாக அமைத்திட, உங்கள் பிரவுசரின், டூல்ஸ் அல்லது செட்டிங்ஸ் மெனு செல்லவும். அங்கு ஹோம் பேஜ் குறித்த வரியினைக் கண்டறிந்து, அத னைக் காலியாக அமைத் திடவும்.

2. தற்காலிக பைல்களை அழித்திடுக: ஒவ்வொரு முறை நீங்கள் இணையத் திற்குச் செல்கையில், உங்களு டைய பிரவுசர் படங்களை யும் மற்ற தகவல்களை யும், கம்ப்யூட்டரின் தற் காலிக (கேஷ்) நினைவக த்தில் பதிந்து வைத்துக் கொள்கிறது. ஒருபுறம் பார்க்கையில் நமக்கு இது நன்மை தரும் விஷயம் தான். அடுத்த முறை நாம் இணையத்தில் செல்கையில், ஏற்க னவே பார்த்த தளங்கள் குறித்த தகவல்கள் இருப்பதனால், இணைய தளங்கள் வேகமாகத் திறக்கப்படும். ஆனால் இதில் ஒரு சிறிய பிரச்னையும் உள் ளது. கேஷ் நினைவ கத்தில் இது போன்ற தகவல்கள் தேக்கப்படு கையில், அதிக மான இடத்தை ஆக்ரமிக்கிறது. இதனால் ஹார் ட் டிஸ்க் இடம் சிக்கலாகிப் போ கிறது. தளம் சார்ந்த தேடுதல் தாமதமாகிறது. எனவே இந்த தற்காலிக பைல் களை அவ்வப் போது அழித்துவிட வேண்டும். மேலும் இவற்றை அழிப்பத னால், நம்முடைய தனிநபர் தகவல்களை மற்றவர்கள் அணு கிப் பார்ப்பது தவிர்க்கப்படுகிறது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில், இத்தகைய தற்கா லிக பைல்களை அழித்திட Tools – Delete Browsing History எனச் சென்று, Delete All என்பதில் கிளிக் செய்து, பின்னர் Close அழுத்தி வெளியே வரவும்.

பயர்பாக்ஸ் பிரவுசர் பயன் படுத்துபவர்கள், Tools – Clear Private Data எனச் செல்லவும். எத்தகைய பைல்களை நீக்க வேண் டும் என பிரவுசருக்குச் சொல்ல, அந்த வகை (Cache, Cookies, Search History போன்றவை) பைல்கள் முன் டிக் அடையாளம் ஏற்ப டுத்த வேண்டும். அதன் பின்னர், Clear Private Data என்பதில் கிளிக் செய்து வெளியேறலாம்.

3. பயர்பாக்ஸ் பைப் லைனிங்: பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன் படுத்து பவர்களுக்கு, இந்த வகையில் கூ டுதல் வசதி ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு தளம் கம்ப்யூட்டருக்கு இற ங்கும் நேரத்தை அதிகப்படுத்தலாம். இந்த வசதியைத் தரும் தொழில் நுட்பத்திற்கு பைப் லைனிங் (Pipe Lining) என்று பெயர். இதன் மூலம் ஒரே நேரத்தில் நாம் பிர வுசருக்கு, இணையத்தில் பல வேலைகளை மேற்கொள்ள கட்டளை களைத் தரலாம். முதல் கட்டளைக்கான பதிலைப் பெற்றுத் தான், அடுத்த கட்டளையை எடுத்துக் கொள்ளும் என்ற நிலை எல்லாம் இல்லை. இந்த தொழில் நுட்பத்தினை அமல் படுத்த, கீழ்க்கண்ட வாறு செயல்படவும்.

1. பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி, அதன் முகவரிச் சட்டத் தில் about:config என டைப் செய்து என்டர் தட்டவும்.

2. கிடைக்கும் கட்டத்தில் network. http.pipelining என்று இருப்பதனைக் க ண்டு அதில் True என்ப தை அமைக்கவும். இதன் மூலம் பைப்லைனிங் வச தி உங்களுக்கு இயக்கப்பட்டு எப்போதும் செயல்படும்.

3. அடுத்ததாக, network.http.proxy. pipelining என்று இருப்ப தற்கும் True என வேல்யு செட் செய்திடவும்.

4. பின்னர் network.http.pipelining. maxrequests என்று இருப் பதில் டபுள் கிளிக் செய்து நம் கட்டளை விருப்பங்களின் எண் ணிக்கையை 8 என அமைக்கவும்.

உங்கள் பிரவுசர் மிக வேகமாக இயங்க இன்னும் பல வழிகள் உள்ளன. மேலே சொல்லப்பட்ட வழிகள் எளிதான வழிக ளாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: