Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எக்ஸெல் ஸ்குரோலிங்

எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்க ளை அமைத்திருக்கிறீர்க ள். அவற்றை ஆய்வு செய் கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக் கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்க ள். என்ன நடக்கிறது? மீண் டும் நீங்கள் எந்த செல்லில் உங்கள் கர்சரை நிறுத்தியிருந்தீர்களோ அந்த செல்லுக்கு இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். உங்களுக்கு வியப்பு! என்ன நடக்கிறது இங்கு?

ஏறத்தாழ 100 வரிசைகள் தாண்டி நான் இருந்தேனே? எப்படி பழைய இடத்திற்கு வந்தேன் எ ன்று தானே வியக்கிறீர்கள். புரோகிராம் ஏன் இப்படி தவறு தலாகச் செயல் படுகிறது? அதுதான் இல்லை. நீங்கள் ஸ்குரோல் பாரைப் பயன்படுத்தி அல்லது மவுஸின் ஸ்குரோலைப் பயன்படுத் தி கீழாக அல்லது மேலாகச் செல்கையில் திரையில் காணப்படும் காட்சி தான் மாறுகி றது. புதிய செல் களுக்கு நீங்கள் செல்லவில் லை. எனவே நீங்கள் ஆரோ கீயை அழுத்திய வுடன் அது நீங்கள் இருந்த செல்லுக்கு ஒரு செல் மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கிறது. எனவே தான் நீங்கள் ஸ்குரோல் செய்து சென்ற இடத்திலிருந்து உட னடியாகக் கர்சர் இருந்த செல்லுக்கு அருகே நீங்கள் அழைத் துச் செல்லப்படுகிறீர்கள். ஸ்குரோல் செய்து அடைந்த இடத் திற்கு உங்கள் கர்சர் இருக்க வேண்டும் என்றால் மவுஸால் அதனை செலக்ட் செய் திட வேண்டும். இவ்வாறு ஸ்குரோல் செய்து சுற்றி வருவதும் நல்லதுதான். ஒரு செல்லில் தகவல் இடுகையில் மற்ற செல்களில் என்ன உள்ளது என்று பார்க்க விரும்பினால் என் டர் செய்து சென்றால் எங்கு நீங்கள் பணி யாற்றிக் கொண்டிருந்தீர்கள் என்பது மறந்து விடும் அல்ல வா? எனவே ஸ்கு ரோல் செய்து சுழன்று சென்று பின் மீண் டும் செயல்படும் செல் லுக்கே வரலாமே.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: