Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கா. அவனுக்கு என்ன குறைச்சல்!!??

இணையம் ஒன்றில் கண்டெடுத்தது

நிறைய குடும்பங்களில் செக்ஸ் உறவு பிரச்சனையே தாம் பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. பொ துவாக கிளி மாதிரி பொண்டாட்டி இரு க்கா. அவனுக்கு என் ன குறைச்சல், குரங்கு மாதிரி வப்பாட்டி வெச்சி ருக்கானே பாவின்னு ஒரு பழ மொழி சொல்லுவாங்க. அழகான மனைவியை பார்த்தேன்……. ரசித் தேன் என்பதோடு மட்டும் நின்று விடலாமா? அடுத்தக் கட்ட மான அன்பான, அழகான மனை வி தாம்பத்ய உறவிலும் கணவனது ஆசைகளுக்கு, ரசனைகளுக்கு ஒத்துபோக வேண் டுமே.

அது தன் அழகான மனை வியிடம் கிடைக்காத பட்ஷ த்தில் தனது செக்ஸ் ரசனைக ளுக்கு ஒத்துப் போகிற பெ ண்ணுடன் அவன் சல்லாபிக் கிறான். அழகான மனைவி யின் மனநிலை பல்வேறு காரணங்களால் தன் கணவ னுக்கு அவன் இஷ்டப்படி இன்பங்களை வாரி வழங்க முடியவில்லை என்பதே உண்மை.

1. காதல் தோல்வி
2. கணவனது செக்ஸ் தொல்லை அல்லது வெறுப்பு
3. வெளிப்புறத் தோற்றத்தில் அழகாக இருந்தாலும் உடல் நிலை கோளாறு.
4. சில பெண்களுக்கு உடலுறவின் போது எரிச்சல், பெயின் (வலி)
5. மனக்கவலை
6. மூட் இல்லாத நேரம்.

தாம்பத்ய உறவில் ஒரு பெண் தனது கணவனுக்கு முழு ஒத் துழைப்பு கொடுப்பது என்பது அவளது சந் தோஷமான, கவலையற்ற மனநிலையைப் பொறுத்தது. இதில் அறுபது சதவீத பெண்கள் ஏதோ ஒரு மனவிரக்தியுடன் கணவனின் ஆசையை தீர்த்துக் கொள்ளவே தன்னை தயார்படுத்திக் கொண்டு ஒத்துழைக்கிறா ர்கள். அந்தி மாலைப் பொழுதில் ஆண் மயில் தனது தோகையை விரித்து ஆடி தன்னுடைய பார்ட்னரை மகிழ்வித்து அதன் பின் கூடி மகிழும். பெண் மயி லும் சந்தோஷ துள்ளலுடன் தோகையழகை ரசித்த போதை யுடன் ஆண் மயிலின் தாகத்தை தணிக்கும். அதுப்போல தான் பெண்மையும். தன் மனத்தோடு ஒத்து போகும் கண வனுடன் தன்னை பகிர்ந்து கொள்வதில் அதிகமான ஈடுபாடு காட்டுவாள். பெண்மை யை மகிழ்வித்து தானும் சந்தோஷ கடலில் மிதக்க வேண்டும் என்று நினை க்கும் ஆண்களோ மிகக் குறைவு. பெண் மனசு ஆழமுன்னு சொல் வா ங்க. வெட்கம், நா ணம் என்ற திரைக்குப் பின்னா ல் ஒளிந்து கிடக்கும் பெண்மையின் அச்சத் தைப் போக்க வேண் டியது ஆண் மையின் கட மை. வெறுமனே மனை வியை தன் இஷ்டப்படி மனநிலை, உடல்நிலையை பற்றி கவலைப்படாமல் செக்ஸ் உறவுக்கு அழைப்பது ஆணுக்கு கிக்காக இருக்கலாம். ஆனால் மனைவியோ வெறுப்பின் உச்சத்திற்கே போய் விடுவாள். ஒரு பெண் தற்கொலை செய் து கொள்ளும் அளவுக்கு நேர்ந்து விடும். இதோ ஒரு உதா ரணக்கதை….

இருபத்தெட்டு வயது நிரம்பிய ஒரு லதாவின் கதை. அவளு டைய கண வர் என்ஜினியராக இருக்கி றார். அவருடை ய புர பஷன்ல எப்படி எக்ஸ்பர்ட்டோ, அதுமா திரி செக்ஸ் விஷயத்தி லும் ஸ்பீட் அதிகம். கலகலவென்று பேசி யா ரையும் தன் பக்கம் இழுத்திடுவார். அவருக்கு எந்த நேரத்தில் மூட் வரு ம்னு சொல்ல முடியாது. உடனே லதாவைக் கட் டாயபடுத்துவார். சில சமயங்கள்ல மட்டும் கோ-ஆபரேட் பண்ணு வாள் லதா. பல சந்தர்ப்பங்களில் அவரைத் திட்டி ஒதுக்கி விடுவாள். அதுக்கு காரணம் அவளுக்கு பெயின் ஜாஸ் தியா இருக்கும் அதை அவளுடைய கணவர் கேர் பண் ண மாட்டார். அந்த எரிச்சலில் அவருடன் செக்ஸ் ரிலேஷன் ஷிப் வச்சுக் கிறதை கொஞ்சம் கொஞ்சமாக அவா ய்ட் பண்ணி னாள். அது லதா லைப்புக்கே டேஞ் சராகி விட் டது.

அவளுடைய பிரண்டு ரேவதி அடிக்கடி லதா வீட்டுக்கு வரு வாள். அவளும் கலகலப்பா பேசுவாள். லதா ஹஸ்பண்டுக்கு அவளை அறிமுகம் செய்து வத்தாள். அவளுடைய ஹஸ் பண்டும், ரேவதியும் எல்லா சப்ஜெக்ட்டும் பேசுவாங்க. ஆனால் லதாவுக்கு புரியாது. லதவுக்கு தெரியாமலேயே ரேவதியும் அவள் ஹஸ்பண்டும் நெருங்கிட்டாங்க. வெளி யே தனியாக ஹோட்டல் போய் வந்திருக்காங்க. திடீர்னு அவள் கணவரும் அவளை போர்ஸ் பண்றதில்லை. செக்ஸ் ரிலேஷனும் வைக்கவில்லை. அப்பாடி….. தொல்லை விட் டுப் போச்சுன்னு சந்தோஷப்பட்டு நிம்ம தியாக இருந் தால் லதா. ஒரு நாள் ரேவ தி வீட்டுக்கு போனாள் லதா. கத வும் திறந்தே இருந்தது. ரேவதியை கூப்பி ட்டுக் கொண்டே பெட்ரூம் பக்கம் போனா ள். அங்கே சிரிப்பு சத்தம் கேட்டது. லே சாக திறந்த ஜன்னல் வழியா பார்த்தாள் அங்கே லதா வின் ஹஸ்பண்டும், ரேவதியும் அவள் கற்பனை பண்ண முடியாத ஒரு ஆக்ஷன்ல ஈடுபட்டிருந்தாங்க. வாயைப் பொத் திக் கொ ண்டு வீட்டுக்கு ஓடி வந்து கதறி அழுதாள் லதா. இனி யும் அவர் கூட வாழக்கூடாதுன்னு அவள் பேரண்ட்ஸ் வீட்டுக்கு போய் விட்டாள் லதா. அவளுடைய கணவர் ராமன் மாதிரி, என்னை தவிர வேற யாரையும் நினைச்சு பாக்க மாட் டார்ன்னு நினைச்ச லதாவின் நிலைமை?…. ஸோ……. தன் மனைவியிடம் மறுக்கப்பட்ட செக்ஸ் அவளது தோழி ரே வதியிடம் கிடைத்ததால் அவளுடைய தாவி விட்டார். அவ ரின் செக்ஸ் ஆசைகளுக்கு ரே வதியும் வளைந்து கொடுத்த தால் இருவரும் வேறு உலகத் தில் சஞ்சரிக்கிறார்கள். அவர்க ளுடைய நட்பு இன்னும் தொடர் கிறது.

பொதுவாக தடம் மாறும் ஆண் களின் மனதை கட்டுபடுத்தும் கடிவாளம் பெண்களின், மனைவியின் கைகளில் இருக்க வேண்டும். செக்ஸ் விஷய த்தில் கணவனின் போக்கை கண் காணித்து உங்கள் பக்கம் இழுத்தால் ஓ.கே. இல்லை!!!.. சில பெண்களோ…. எப்படியோ தன்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்று விட்டு விட்டால் பெண்களின் லைப்பே அம்பேல். செக் ஸ் ரிலேஷ னில் தனது கணவனின் ஆசையை தவிர்ப்பதில், தனது உடல் மனவலியை பொ றுத்து கொண்டு கணவன் வேறு பக்கம் திரும்பா மல் பார்த்து கொள்ளும் சாமர்த்தியமான பெண் களும் உண்டு. அதேபோ ல், தன் மனைவியின் ஆசையை, தாகத்தை புரிந்துகொள் ளாமல் ஜடமாக இருக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். அதனால் பெண்மையே தடுமாற க்கூடிய சம்பவங்களும் நட க்கிறது….. எனவே கணவர்களும் மனைவிகளும் பார்த்து நடந்து கொள் ளுங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

 • Nalliah Thayabharan

  “ஆதலினால் காதல் செய்வீர்”

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காதல் எங்கள் மத்தியில் இருந்தது. பின்னர் குழந்தைத் திருமணம் நடைமுறைக்கு வர, எங்கள் மத்தியில் காதல் அருகிவிட்டது. இன்று நாங்கள் காதல் அற்றவர்களாக மாறிவிட்டோம். “ஆதலினால் காதல் செய்வீர்” என அறை கூவியவன் பாரதி.

  ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன், அரசாட்சிகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரம், சாதி சார்ந்ததாக மாறிவிட்டது. இந்தியாவில் சாதி அதிகாரமும், சாதிப் பிரிவினையும், படு மோசமாக இருந்தன. சாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்பட்டு, அதற்காகவே குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடைமுறையாகி, இரண்டாயிரம் வருடங்களாக நாங்கள் காதல் என்றால் என்னவென்று தெரியாது வாழ்கின்றோம். இதனால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெறும் உடலுறவு மட்டுமே.

  ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தமக்குப் பிடித்த துணையை, தாமே தேடிக் கொள்வதுதான் உண்மையான காதல். வாழ்நாள் பூராக நீடிக்கும் காதல் உறவைத் தேடிக்கொள்ள கடந்த இரண்டாயிரம் வருடங்களாக எங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.

  கல்யாணப் பொருத்தத்தில் சாதி, பணம், சொத்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள், திருமணம் செய்ய விரும்புபவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா? என்று பார்த்தது கிடையாது. ஒருவரை ஒருவர் விரும்புவதற்கு, ஒருவரோடு ஒருவர் பழகாமல் விருப்பம் வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய கல்யாணங்களில் கழுத்தில் தாலி ஏறிய பின்னர்தான் கணவன் மனைவியை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் தமக்கிடையே அன்பைப்
  பகிருந்தோறும், இருவரும் நெருங்கிப் பழகுந்தோறும், உள்ளத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதால் வளரும் ஓர் உறவுதான் உண்மையான காதல்.

  எங்கள் எண்ணங்களோடு இணைவு இல்லாத ஓருவரோடு, சில நிமிடங்களுக்குப் பின் எதையுமே பேசவே முடிவதில்லை. அப்படி இணைவு இல்லாத ஒருவருடன் கல்யாணம் எப்படி வருடக் கணக்கில் தொடர முடியும்?

  பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத் தளம் இல்லாத நிலையில் நம் மத்தியில் கணவன் மனைவிக்கிடையில் வெறுமையான உரையாடல்களுடன் எங்கள் கல்யாணங்கள் எல்லாம் வெறும் ஒப்புக்கு போலியாக சாகும் வரை தொடர்கின்றன. கல்யாணமாகி கொஞ்சக் காலம் சென்ற பின் எங்கள் கணவன் மனைவிக்கிடையில் “சாப்பாடு தயாரா?”, “பிள்ளைகள் என்ன சாப்பிட்டார்கள்?” என சில சொற்களுக்கு மேல் அவர்களுக்கிடையில் உரையாடும் குடும்பங்கள் மிக மிக அரிது. கல்யாண வாழ்வில் காதல் இல்லாத காரணத்தால் பல ஆண்கள் விபச்சாரிகளை தேடிப்போனார்கள்.

  நாங்கள் பெரும்பாலும் எங்கள் நண்பர்களோடுதான் மனம்விட்டு பேசுவோம். கணவன் மனைவிக்கிடையில் காதல் வளராதலால், வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன், தொலைக்காட்சியிலும், கணணித் திரையிலும், கதை புத்தகங்களிலும் வெறும் கற்பனையில் காதலை பார்த்துவிட்டு, நாங்கள் மரணித்துப் போய்விடுகின்றோம். இன்னமும் உண்மையான காதல் என்றால் என்னவென்று எங்களுக்கெல்லாம் தெரியாததால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையயுள்ள நெருக்கத்தையே காதல் என எண்ணி ஒரு ஆணும் பெண்ணும் சற்று நெருக்கமாக பழக நேர்ந்தாலே அது கல்யாணம் செய்து கொள்வது வரை சென்று விடுகின்றது.

  இறுகிப்போன எங்கள் கலாச்சாரத்தில், இன்னமும் காதல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பதனாலேயே, அது இரகசியமானதாகவும், மற்றவர்களால் வேவு பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது. இதனால் காதலை நிதானமாக அணுக முடியாத நிலையில், கண்டவுடன் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே, கல்யாணமாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளாக இறுதி வரை தொடர்கின்றன.

  காதலை சரிவர அணுகவும், நிதானமாக முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும், தேவையான அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் தேவை. காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் ஆரோக்கியமான சமூகங்கள் மத்தியில் இருக்கின்றது. பொருத்தமான கணவன் மனைவி உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்

  – நல்லையா தயாபரன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: