Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் ஆதரவு தெரிவித்து பலர் டில்லியில் குவிந்தனர்

மத்திய அரசின் சமரச முயற்சிக்கும் பசப்பு வார்த்தைக்கும் மசிந்து கொடுக்காமல் , மத் திய அமைச்சர்களின் பல க்கட்ட பேச்சுக்கு செவிசாய் க்காமல் ஊழலை ஒழித்தே தீர வேண்டும், வெளிநாடு களில் பதுங்கி கிடக்கும் கறு ப்பு பணத்தை கொண்டுவரும் வரை ஓயமாட்டேன் என்ற தளாராத நோக் கத்துடன் யோகாகுரு பாபா ராம்தேவ் இன்று டில்லி யில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். ராம்லீலா மைதனாத்தில் இவரது ஆதர வாளர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக் கில் குவிந்துள்ளனர்.

லோக்பால் மசோதா திருத்தம் செய்வதுடன் விரைந்து கொ ண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி அறப் போராட்ட தியாகி அன்னா ஹசாரே கடந்த சில மாதத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். இவருக்கு நாடு முழுவதும் பெருகிவந்த ஆதரவை கண்டு நடுங்கிப் போன மத்திய அரசு ஹசாரே சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்டு ஒரு வரையறு கமிட்டியை உருவாக் கியது. மத்திய அமைச்சகர்கள் சமூக ஆவர்வலர்கள் இடம் பெற்றிருந்த கமிட்டி கூட்டத்தில் கருத்து வேறுபாடுகள் தான் இருந்ததேயொழிய இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. மத்திய அரசு தங்களை ஏமாற்றி வருகிறது என்று ஹசாரே வருத்தப்பட்டார்.

இதனையடுத்து நாடு முழுவதும் யோகாகலையில் பெரும் புகழ்பெற்ற பாபா ராம்தேவ் மீண்டும் ஒரு அறப்போராட் டத்தை துவக்குவதாக அறிவித்தார். இவரது போராட்டத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என மத்திய அமைச் சர்கள் யோகாகுருவிடம் பலமுறை பேச்சு நடத்தினர். ஆனா ல் பலன் அளிக்கவில்லை. திட்டமிட்டப்படி இன்று காலை யோகாகுரு உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். டில்லியில் அவரது ஆதரவாளர்கள் குவிந்திருந்த மைதானத் திற்கு காலை 4. 30 மணி அளவில் வந்தார். இவரது வருகை யை எதிர்பார்த்து காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் பல த்த கரகோஷம் எழுப்பினர். பல்வேறு அரசியல் அமைப்பை சார்ந்தவர்களும், ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போரா ட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர்.

தமக்கு எதிராக சதி நடக்கிறது என்கிறார் : இன்று உண்ணா விரத மேடையில் பேசிய யோகாகுரு , முடியாதது என்பேத இல்லை, எதுவும் செய்ய முடியும் என்றும் இந்த போரா ட்டத்தில் வெற்றி கிடைக்கும் , தோல்வி அடைய மாட் டோம். ( வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் கொண்டு வருவது குறித்து இவ்வாறு தெளிவுபடுத் தினார்) மேலும் கூறுகையில் நாட்டை சுரண்டி கொள்ளை அடிப்‌போருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், ஊழலுக்கு எதிரான சத்தியாகிரக போராட்டம் துவக்கியிருக்கிறேன். எனக்கு எதிராக சதி நடக்கிறது. இந்த சதிக்கெல்லாம் அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றார். தொடர்ந்து பஜனைபாடல்கள் பாடினார். ஆதரவாளர்களுடன் தியான மும் மேற்கொண்டார்.

போராட்டத்தில் ஆடம்பரம் மட்டுமே தெரிகிறது : காங்., குற்றச்சாட்டு : ராம்தேவ் நடத்தும் இந்த போராட்டத்தில் ஆடம்பம் மட்டுமே தெரிகிறது. பைவ் ஸ்டார் ஓட்டல் போல மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து கொண்ட பாபா ராம்தேவ் எதற்காக போராடுகி றோம் என்று தெரியாமல் போராட்டத்தை நடத்துகிறார். இவரது போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்வாறு காங்., பொதுசெயலர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

யோகா குரு போராட்டத்திற்கு ஆதரவு பெருகுகிறது: மும் பை, மற்றும் தமிழகத்திலும் யோகா அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின் றனர். கோவையில் தமிழ்நாடு ஓட்டல் முன்பாக நடக்கும் போராட்டத்தில் பலர் பங்கேற்றுள்ளனர்.

NEWS IN DINAMALAR

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: