சராசரி ஒரு நாளைக்கு ஒரு மனி தனுக்குத் தேவையான பொட்டாசி யத்தின் அளவு 1875 மில்லிகிராம் முதல் 5635 மில் லிகிராம் என கண க்கிடப் பட்டு ள்ளது. இதை இயற்கை யாகப் பெற தினமும் ஒரு சில வா ழைப்பழங்களை (குறிப்பாக நேந்திர ன் வாழை) சாப்பிடுவதன் மூலம் தேவையான அளவு பொட் டாசியம் கிடைத்து விடும். இதனால் உயர் ரத்த அழுத்தம் (ஹைப்பர் டென்ஷன்) கட்டு ப்படுத்தப் படுகிறது. அதாவது உயர் ரத்த அழுத்தத்தின் போது வெளியேறும் பொட்டாசியம் பற்றாக் குறையை வாழைக் கனிகளில் உள்ள பொட்டாசியம் செறிவு ஈடு செய்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக் கிறது.
இரண்டு வாழைப்பழத்தையும் பாதி பப்பாளி பழத்தையும் துண்டுகளாக்கி அதன்மேல் சிறிது உப்பைத் தூவி, எலுமிச் சம் பழச்சாற்றை ஊற்றி ஊற வைத்து நாள்தோறும் காலை, மாலை இரண்டு வேளை உண் டுவர மலச்சிக்கல் விலகும்.
வாழைக்கனிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் பொது குணங்களும் சிறப்பியல்புகளும் உண்டு. குறிப்பாக செவ்வாழை விளையாட்டு வீரர்களுக் கும், நெய் பூவன் குழந்தைகளுக்கானது என்றும், மருத்துவ குணங்களுக்கு சிறந்தது பூவன் என்றும் கருதப்படுகிறது.
வாழை இலையில் சுட ச்சுட உணவைப்பரிமாறி சாப்பிடுவ தால் அதிலுள் ள பச்சையம் உணவுடன் சேர்ந்து ரத்தத்தில் கலந்து உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. தோல் நோய்க ளையும் குணப்படு த்துகிறது.
வாழைத்தண்டை இடித் துச் சாறெடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகக் கல், சிறுநீர்ப் பாதை யில் கிருமித் தொற் று ஆகியவை மறையும்.
(தகவல்:ரெ.அனிதா, சரஸ்வதி, வேளாண் அறிவியல் மையம், கரூர்-621313. போன்: 04323-290666)
– டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்
nalla payanulla thakaval… elaikalain apple parri thelivaaka kuriyulleerkal.. vaalththukkal