Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஜயலட்சுமி விவகாரத்தில், சீமான் மவுனம் காப்பது ஏன்?

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜய லட்சுமி புகார் அளித்ததைத் தொடர்ந்து, இயக்குனர் சீமான் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஆறு பிரிவு களில் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கி ன்றனர். சென்னை, வளச ரவாக்கம், சவுத் ரி நகர் முதல் தெரு வைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி; சினிமா நடிகை. “பிரண் ட்ஸ், வாழ்த்துக்கள், பாஸ் (எ) பாஸ்கரன் உள்ளிட்ட படங் களில் நடித்துள்ளார். வளசரவாக்கத்தில், தாய் மற்றும் சகோ தரியுடன் வசிக்கும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், “இயக் குனர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வ தாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மனு அளித்தார். வளசரவாக்கம் போலீசில் விசா ரணை நடந்தது.

சீமானின் வக்கீல் சந்திரசேகர், இதை மறுத்ததுடன், “அரசி யல் காழ்ப்புணர்ச்சியால், யாரோ ஒருவர் தூண்டுதலில், பொய் புகார் அளித்துள்ளார் என, தெரி வித்திருந்தார். இதற்கிடையில், போலீசார், நேற்று முன்தினம் மாலை, விஜய லட்சுமியை அழைத்து விசாரணை நடத் தினர். அப்போது, “வாழ்த்துக்கள் படம் மூலம், சீமான் தனக்கு அறி முகமாகியதாகவும், தொடர்ந்து இருவரும் காதலித்த தாகவும், அதற்கான ஆவணங்கள் இருப்ப தாகவும் போலீசாரி டம் விஜயலட்சுமி தெரிவித் துள்ளார்.

விஜயலட்சுமி கூறிய அனைத்தையும், பதிவு செய்த போலீ சார், தொடர்ந்து, சீமான் மீது திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றுதல், மோசடி செய்தல், கற்பழிப்பு, கொலை மிரட்டல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சீமான், போலீசில் சிக்காமல், தலைமறைவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

பிரஸ் மீட் தவிர்ப்பு : இதற்கிடையில், நேற்று பிற்பகல், 2:30 மணிக்கு, சீமானின், “நாம் தமிழர் அமைப்பு சார்பில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை பிரஸ் கிளப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் கள் அங்கு சென்றனர். அப்போது, இரண்டு முறை இடம் மாற்றப்பட்டதாக அறிவித்தனர். அங்கும் சென்ற பத்திரிகை யாளர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதனால் எரிச்சலடைந்த பத்திரிகையாளர்கள், நிகழ்ச்சியை தவிர்த் தனர். சீமானும் இந்த புகாருக்கு நேரடியாக பதில் சொல் லாமல் தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சி அறிக்கை : இதற்கிடையில் இந்த விவ காரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் செய்தி சார்பில் ஓரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு, விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரை வைத் துக்கொண்டு காவல் துறை வழக்கு பதிவு செய்து ள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பல மாதங்கள் சிறை பட்டும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழர் நலனுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டும், மக்களிடமிருந்தும், கட்சியினரி டமிருந்தும் பிரியாது தொண்டாற்றுகிறார். சீமானை, இன நல னுக்கான போராட்டத்தில் இருந்து பின்வாங்கச் செய்யவேண்டும் என்ற உள்நோக்கத்தில் சிலரது தூண்டுதலின் பேரிலே இந்த பொய் புகார் திட்டமிட்டு கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளது

மேலும், அதிகார துஷ்பிரயோகம், ஊழல், முறைகேடு போ ன்றவற்றின் மூலம் தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொண்ட சில ஊடகங்கள் சீமான் தலைமறைவு, என்கிற பொய்யான செய்தியை வெளியிட்டு எங்களது பெயருக்கு களங்கம் விளைக்க முயல்கின்றனர். சீமான் எங்கும் தலைமறை வாக வில்லை என்பதை தெரிவிப்பதோடு, அவர் எவ்வித விசார ணைக்கும் தயாராகவே உள்ளார் என்பதையும் தெரி வித்து க்கொள்கிறோம். அரசியல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை சட்டத்தின் முன்பு நிரூ பிப்போம். இது போன்ற கீழ்த்தரமான சதிகள் மூலம் தமிழர் நலனுக்கான எங்களது போராட்டத்தை எள்ளளவும் தளரவைக்கமுடியாது என்பதையும் சதிகாரர்களுக்கு தெரி வித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமி, டைரக்டர் சீமான் மீதுதான் புகார் செய்திருக்கிறாரே தவிர… நாம் தமிழர் கட்சியின் தலை வராக இருக்கும் சீமான் பற்றி புகார் கொடுக்கவில்லை. அப்ப டியிருக்கும்போது டைரக்டர் சீமான், தன் மீது தவறு இல்லா தபட்சத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து நேரடியாக விளக்கம் கொடுக்கலாம்; மறுப்பு தெரிவிக்கலாம். நாம் தமிழர் என்ற பெயரில் தமிழர்களுக்காக நடத்தப்படும் கட்சி யின் சார்பில் தனிப்பட்ட சீமான் மீது கொடுக்கப்பட்டிருக்கும் புகாருக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? எந்தவொரு விஷயத்துக்கும் உடனு க்குடன் வீராவேசமுடன் பதிலடி கொடுக்கும் சீமான், விஜய லட்சுமி விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? என்ற கேள்வி களும் எழுந்துள்ளன. நியாயம்தானே?

NEW IN DINAMALAR

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply