Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமைதிபேரணிக்கு பா.ஜ., அழைப்பு விடுப்பு: யோகாகுரு ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி . . .

ஊழல். மற்றும் கறுப்பு பணத்தை தாய்நாட்டுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி யோகாகுரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத போராட் டத்தை துவக்கினார். இவர் மீதும், இவரது ஆதரவாளர்கள் மீதும் போலீ்சார் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரி வித்து பா.ஜ., சார்பில் 24 மணி நேர சத்தியாகிரக போராட் டத்திற்கு அழைப்பு விடுக்‌கப்பட்டுள்ளது. மேலும் அமைதிப் பேரணியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

யோகா மற்றும் பஜனைபாடல்களுடன் ராம்தேவ் உண்ணா விரத போராட்டத்தை துவக்கினார். பெருகி வரும் ஆதரவு காரண மாக அசாதாரண சூழ ல் ஏற்படும் என அறி ந்த மத்திய அரசு நே ற்று நள்ளிரவில் போ லீசார் ஆயிரக்கணக் கில் ராம் லீலா மைதா னத்தை சுற்றி குவிக் கப்பட்டனர். தொட ர்ந்து யோகாகுருவை அப்புறப்படுத்தினர். இந்நேரத்தில் ஏற் பட்ட மோதலில் போலீசார் மற்றும் போராட்டக்ககாரர்கள் பலர் காயமுற்றனர். கண்ணீர்புகை குண்டுவீச்சு, தடியடி யுடன் முடிந்தது.

‌‌நெருக்கடியை நினைவுபடுத்துகிறது: இவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, போலீசார் நடந்து கொண்ட விதம் ஒரு நெருக் கடியை நினைவுப்படுத்தியதாக லோக்பால் மசோதாவில் உறுப்பினராக உள்ள சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில். சாதாரண குடிமகனுக்கு உரிய அடிப்படை உரிமையை மத்திய அரசு பறித்துள்ளது என்றார். பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.,எஸ்., அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் இந்த சம்பவ த்திற்கு மக்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என் றும் இன்று லக்னோவில் பா.ஜ., தலைவர் நிதின்கட்காரி, அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். மேலும் கூறுகை யில்., கறுப்பு பணவிவகாரம் குறித்து பா.ஜ., நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. யோகாகுரு மீது எடுக்கப்பட்ட நட வடிக்கை கண்டனத்திற்குரியது,. அடிப்படை உரிமை மறுக்க ப்பட்டுள்ளதன் மூலம் நெருக்கடியை நினைவுபடுத்துவ தாக உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ., சார்பில் 24 மணி நேர சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும். நாடு தழுவிய அமைதிபபேரணி நடத்தப்படும். இந்த பேரணியில் பா.ஜ., முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திக்விஜயசிங், ராம்தேவ் போராட்டம் தேவையற்றது என்றும் அவருக்கு யோகா நடத் துவதற்கான அனுமதிதான் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் போராட்டமாக மாற்றிக்கொண்டார். இது கண்டனத் திற்குரியது என்றார்.

மேதா பட்கர் – கிரண்பேடி கண்டனம்: முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி கூறுகையில்; மைதானத்தில் பலரும் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் போலீசார் புகுந்து எடுத்த நடவடிக்கை முற்றிலும் தவறானது. பாபா யாரையும் வன்முறைக்கு தூண்டவில்லை. குறைந்தபட்சம் காலை வரையாவது போலீஸ் பொறுத்திருக்கலாம். இது கண்ட னத்திற்குரியது என்றார்.

சமூக ஆவர்லர் மேதா பட்கர் தனது கருத்தில் ., போலீசார் எடுத்த நடவடிக்கை மனிததன்மையற்ற காட்டு மிராண் டித்தனம். அறப்போராட்டம் நடத்துவோரை எப்படி கையாள வேண்டும் என்று கூட இந்த அரசுக்கு தெரியாமல் போனது தான் வேதனை. இதில் இருந்து தெரிவது என்னவெனில் அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை அலட்சியம் செய் கிறது என்பது தான் இவ்வாறு பட்கர் கூறியுள்ளார்.

ராம்தேவ் விவகாரம் தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, இன்று காலை 11 மணிக்கு நிருபர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பாபா ராம்தேவ் எங்கே., ? : நேற்று இரவில் அப்புறப்படுத்தப் பட்டு அழைத்து செல்லப்பட்ட யோகா குருராம்தேவ் எங்கே இருக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் இவர் டில்லியில் இருந்தால் மே லும் சிக்கல்கள் வலுக்கும் என்ற காரணத்திற்காக போலீசார் அவரை ஹெலிகாப்டர் மூலம் ஹரித்துவாரில் உள்ள ஆசிர மத்திற்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.

NEWS IN DINAMALAR

Leave a Reply