உன்னோடும் என்னோடும் உடம்போடு வேர்த்தாலும் வேர் க்காத இடமொன்று நீ சொல்லணும் – ஆணோ டும் பெண்ணோடும் வேர் க்காத இடமென்ன உதட் டில் மேல் வேர்க்காது நீ நம்பணும் – ஐயோ இது பாட்டு. பொதுவாக மனி த உடலில் வியர்க்காத இடம் என்று கேட்டால் அனைவரும் உதடு என்பார்கள்.
ஆனால் விஞ்ஞானிகளிடம் கேட்டால், அதில் உண்மையில் லை. உடலில் எங்கெல்லாம் சரு மம் இருக்கிறதோ அங்கெல்லா ம் வியர்வை சுரப்பிகளும் இருக் கின்றன என்று உறுதியாகக் கூறுகின்றனர்.
வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ள இடங்களில் வியர்ப்பது தெரிகிறது. குறைவாக உள்ள இடங்களில் தெரிவதில்லை. அ தாவது உடலின் சில இடங் களில் அதிகமான வியர்வை சுரப்பிகள் உள்ளன.
உதட்டில் வியர்வை சுரப்பிகள் மிக மிகக் குறைவு. அதனால் தான் உதட்டில் வியர்ப்பது நமக்குத் தெரிவ தில்லை. அதிலும் ஒரு சிலருக்கு அதிகமா ன வியர்வை சுரப்பிகள் உள்ளங்கைகளை, பாதங்களில் அமைந்து விடுவதும் உண்டு.
இனி யாரும் வியர்க்காத இடம் உண்டு, அது எது தெரியுமா என்று கேட்டால், உடலி ல் வியர்க்காத இடம் என்று எதுவுமில்லை. உதட்டுமேலயும் வேர்க்கும் என்பது உனக்குத் தெரி யுமா? என பதில் கேள்வி கேளுங்கள்.