Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குடும்ப வன்முறை: கடுமையாக ஆண்களைத் தாக்கும் பெண்கள்!

பொதுவாக வீட்டு வன்முறையென்றால் பெண்கள் மீது ஆண் களால் நடத்தப்படும் தாக்கு தல்கள், ஆண்களால் பாதி க்கப்படும் பெண்கள் என்று தான் எல்லோரும் கருதுவ துண்டு.

ஆனால் பிரிட்டனில் நிலை மை அப்படியே தலைகீழாக மாறி வருகின்றது. வீட்டு வன்முறைகளால் பெண்க ளால் தாக்கப்படும் ஆண்க ளின் எண்ணிக்கை அண்மை க் காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரிட்டனில் வீட்டு வன்மு றைகளால் பெண்களால் தா க்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிக ரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இது சம்பந்தமாக 4000 பெண்களுக்கு எதிராக வெற்றிகரமாக வழக்குகள் முன்னெ டுக்கப்பட்டுள்ளன.

2005ல் இந்த எண்ணிக்கைஅதாவது ஆண்களைத் தாக்கிய பெண்களின் எண் ணிக்கை 1500 ஆகத் தான் இருந்தது. ஆ ண் களுக்கு எதிரான வீட்டு வன்முறை கள் சம்பந்தமாகக் குரல் கொடுக்கும் charity man kind என் ற அமைப்பு இந்தத் தகவல்களைத் தெரி வித்துள்ளது.

பெண்கள் மிகவும் வன்முறை மிக்கவர்களாக மாறி வரு கின்றனர். வீட்டு வன்முறை தொடர்பாகக் குற்றம் சாட்டப் பட்டு வழக்குத் தொடரப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஐந் து சதவீதத்தில் இருந்து ஏழு சத வீதமாக அதிகரித்துள்ளது.

ஒருவர் மீது மற்றவர் அதிகாரம் செலு த்துவது அல்லது கட்டு ப்பாடு செலுத்து வது சம்பந்தமாக ஏற்படுகின்றப் பிரச்சி னைகளே இந்த வீட்டு சன்முறைகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிடு கின்றன.

இதுவே பெண்கள் தமது ஆண் துணைகளைத் தாக்கவும் பிர தான காரணமாகின்றது. இந்த விடயத்தை முழுமையாக மூடி மறைக்க முயலாமல் அரசாங்கம் ஆண்களை இலக்கு வைத்து இது சம்பந்தமான சில வேலைத் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று charity man kind அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஆண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டப் பெண் களின் எண்ணிக்கை 2004 மற்றும் 2005 காலப்பகுதியில் 806 ஆக இருந்தது.

இது 2009-10 காலப் பகுதியில் 3494 ஆக அதிகரித்துள்ளது. இதே காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறை களில் ஈடுபட்ட ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது.

இதில் இன்னொரு முக்கிய விடயம் பெரும்பாலான பாதிக் கப்பட்ட ஆண்கள் தமக்கு ஏற்பட்ட பாதிப்பை வெளிக்காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply