Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குரூப் -1 தேர்வு ரத்தா?!

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த குரூப்-1 எழுத்துத் தேர் வில், ஒரு ரூபாய் அரிசி திட்டம், செம்மொழி மா நாடு உள்ளிட்ட கடந்த தி.மு.க. ஆட்சியின் சாத னைகள் குறித்த கேள்வி கள் இடம் பெற்றதால், தேர்வு ரத்து செய்யப்படு மோ என தேர்வு எழுதி யவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அ.தி.மு.க., அரசு, முந்தைய தி.மு.க., அரசு செயல்படுத்தி வந்த கலைஞர் காப்பீடுத் திட்டம், இலவச கான்கிரீட் வீடு திட்டம், ஒரு ரூபாய் அரிசித் திட்டம் ஆகியவற்றை ரத்து செய்து மாற்றி யமைத்து வருகிறது.

மாணவர்களின் எதிர்கால நன்மையை கருத்தில் கொ ண்டு உருவாக்கிய சமச்சீர் கல்வித்திட்டமும் மறு ஆய் வுக்கு உட் படுத்த உத்தரவி டப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழி மாநாட்டு பாடல்கள் உள் ளிட்ட அவரது எழுத்துக்கள், சமச்சீர் கல்வி பாட நூல்களில் இடம் பெற்றதுதான் மறு ஆய்வு உத்தரவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு பொது தேர்வாணையம் சார்பில் குரூப்-1 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. தேர்வில் இடம் பெற்ற சில கேள்விகள் எளிதாக இருந் தாலும், சில கேள்வி கள் கடந்த தி.மு.க., ஆட்சியின் சாத னைகளை குறிப்ப தாக உள்ளன. இத னால், தேர்வு ரத்து செய்யப்படுமோ என தேர்வு எழுதியவர் கள் கவலை அடைந் துள்ளனர்.

தேர்வு எழுதி முடித்த சிலர் கூறியதாவது: தேர்வில் மொத் தம் 200 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. பெரும்பா லான கேள்விகள் எளிதாக விடை அளிக்கும் வகையில் தொகுக் கப்பட்டுள்ளன. இத னால், ஏராளமானோர் வெற் றி பெற வாய்ப்புள்ளது. முந் தைய தி.மு.க., கூட்டணி ஆட்சியின் சாதனைகளை விளக்கும் கேள்விகளும் இட ம்பெற்றிருந்தன. “இந்தியா விலேயே முதல் முறையாக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?&’, 2010ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாடு, உலக தமிழ் மாநாடுகளின் வரிசையில் எத்தனாவது?, பொது வினியோக முறையின் கீழ் ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் மாநிலம் எது?, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிக்கும் திட்டம் 100 நாட்கள் வேலை கொ டுப்பதற்காக எந்த ஆண்டு அறிமுக ப்படுத்தப்பட்ட து? ஆகிய கேள்விகள் குறிப்பாக முந்தைய அரசின் சாதனைகளை விள க்குவதாக உள்ளது.

முந்தைய தி.மு.க., அரசி ன் சாதனைத் திட்டங்களை ரத்து செய்து வரும் இப்போதைய அரசு, தேர்வில் இடம் பெற்றுள்ள சில கேள்விகளுக்காக தேர் வையும் ரத்து செய்து விடுமோ என பயப்படுகிறோம், என் றனர்.

மே மாதம் நடைபெறுவதாக இருந்த குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு, முந்தைய தி.மு.க., அரசால் வெளியிடப்பட்டது என்பதும், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் முந்தைய ஆட்சியில் தொகுக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply