Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சில்லரை வர்த்தகத்தில் கூகுள் புரட்சி

சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற் கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொ பைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது. இதன் மூலம், கடைக ளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதன ம் ஒன்றின் முன், உங் கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கண க்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடை க்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக அந்தக் கடையில் பயன் படுத்திக் கொள்ள லாம்.

இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த சிஸ்ட த்தின் அடிப்படையில் இயங் கும் தொழில் நுட்பத்தின் பெ யர் NFC (Nearfield communi-cation). இதன் அடிப்படையில் இயங்கும் இரு சிப்களை, இர ண்டு சாதனத்தில் அமைத்து அருகே வைத்து இயக்குகை யில், அவை இரண்டும் தாங்க ளாகவே, தகவல்களைப் பரி மாறிக் கொள்ளும். கிரெடிட் கார்ட் தகவல்கள், ட்ரெயின் டிக்கட், கூப்பன்களில் உள்ள பார் கோட் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதாக இவை கையாளும். இந்த சிப்களை இனி வெளியாகும் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களிலும் வைத்திட கூகுள் முடிவு செய்துள்ளது.

முதலில் ஆண்ட்ராய்ட் இயக்க த்தில் செயல் படும் நெக்சஸ் எஸ் மொபைலில் இது செயல் படும். முதல் முறையாக அமெரிக்காவில் சான்பிரான் ஸிஸ்கோ மற்றும் நியூ யார்க் நகரங்களில் இது சோதனை செய்யப்படுகிறது. பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப் பாவின் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும். பின்னர், அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களில் அமல்படுத்தப் படும். அமெரிக்காவில் பல வர்த்தக நிறுவனங்களும், கிரெ டிட் கார்டுகளை வழங்கும் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கென கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை மேற் கொள்கின்றன. பன்னாட்டளவில் மூன்று லட்சம் வர்த்தக நிறுவனங்கள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன் வந்துள்ளதாகவும் கூகுள் அறிவித்துள்ளது. சாம்சங், மோட் டாரோலா, எச்.டி.சி. நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களி ல் இதனை அறிமுகப்ப டுத்த ஒத்துக் கொண் டுள்ளன. ஏற்கனவே இந்த தொழில் நுட்பத் தினை Microsoft, Visa, Sony, Nokia and AT&T ஆகிய நிறுவனங்கள் சப்போர்ட் செய்து வருகின்றன. என்.எப்.சி. தொழில் நுட்பம் இனி ஸ்மார்ட் போன்களில் ஒருங்கிணைந்த ஒரு வசதியாக கருதப்படும்.

இனி ட்ரெயின், பஸ் அல்லது விமானப் பயணங்களுக்கு, இன்டர்நெட் மூலம் டிக்கட் எடுத்து, அதனை அச்செடுத்து, மறந்துவிடாமல் எடுத்துச் செல் லும் வேலை எல்லாம் இருக் காது. மொபைல் மூலமாகவே இன்டர்நெட்டில் டிக்கட் எடுத்து அதனைப் பதிவு செய்து வை த்துக் கொள்ளலாம். பின்னர், ஏறிச் செல்லும் வாகனங்களில் கதவுகளில் பதிந்து வைக்கப் பட்டுள்ள சாதனத்தின் முன், மொபைல் போனை ஆட்டிவிட்டு உள்ளே செல்லலாம்.

கடைகளில் பொருட்களை வா ங்கிய பின்னர், மொபைல் போ னை காசு வாங்கும் இயந்திரத் தின் முன் அசைத்துவிட்டு, ரசீது பெற்று பொருளை எடுத்துச் செ ன்றுவிடலாம்.

பணம் மட்டுமின்றி, வாகன ஓட் டுநர் உரிமம், அடையாள அட்டை போன்றவற்றையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிடுகிறது.

இதில் மோசடி நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கூகுள் கொண்டு வந்துள்ளது. மொபைல் போனில் இது இருந்தாலும், போ ன் இயக்கத்துடன் கலக் காமல் தனி சிஸ்டம் மற்றும் மெமரியில் என்.எப்.சி. சிப் இய ங்கும். போன் இயக்கத் திற்கென ஒரு PIN எண் ணும், மொ பைல் மணி பர்ஸுக்கென இன்னொரு PIN எண் ணும் பயன் படுத்த வேண்டும்.

கூகுளின் இந்த புதிய நிதி வர்த்தக நடவடிக்கை அதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் அவை இயங்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்து பவர்களை அதன் வளையத் திற்குள் கொண்டு வரும். வர்த்தகத்தில் ஈடுபடாமலேயே, பன்னாட்டளவில் பெரிய வர்த்தக நிறுவனமாக கூகுள் மா றும். இந்த துறையில் தங்களின் பங்கினையும் மேற்கொள்ள நிச்சயம் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தினைக் கொண்டு வரும் என எதிர் பார்க்கலாம். அதிக எண்ணிக்கை யில் நிறுவனங்கள் வந் தால், நமக்கு லாபம் தானே.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: