Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்: யோகாகுரு ராம்தேவ் மேடையில் போலீஸ் கெடுபிடி. . .

டில்லியில் யோககுரு பாபாப ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது போலீஸ் நடந்து கொண்ட விதம் மற்றும் கெடு பிடிகள் தொடர்பான விஷயங்க ளுக்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள் ளது.

ஊழல். மற்றும் கறுப்பு பண த்தை விவகாரத்தை முன்நிறு த்தி காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தை 4-ம் தேதி துவக்கினார். இவரது போரா ட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது.

இதனால் ஏற்படும் சூழல் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான எண்ணப் போக்கை அறிந்த மத்திய அரசு நள்ளிரவில் போ லீசார் ஆயிரக்கணக்கில் சென்று யோகா குருவை அப்புறப் படுத்தினர். இந்நேரத்தில் இந்நேரத்தில் ஏற்பட்ட மோதலில் போலீசார் மற்று ம் போராட்டக்காரர்கள் பலர் காயமுற் றனர். கண்ணீர்புகை குண்டு வீச்சு, தடியடியுடன் முடிந்தது. தொடர்ந்து அவர் பாதுகாப்பாக டேராடூனு க்கு கொண்டு செல்லப் பட்டார்.

இவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, போலீசார் நடந்து கொண்ட விதம் ஒரு நெருக்கடியை நினை வுப்படுத்தியதாகவும், ஜனநாயக உரிமை மீறப்பட்டடதாக வும், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.,எஸ்., சமூல நல அமைப்பினர் கண்டனம் தெரிவி த்திருந்தனர். பா.ஜ., சார்பில் 24 மணி நேர சத்தியாகிரக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலை யில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசு, உள்துறை செயலர், மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்டாயமாக வெளியேற்றியதன் காரணம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

NEWS IN DINAMALAR

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: