Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 தமிழ் மொழியில்

மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், தன் இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 9ஐ, தமிழ் மொழியில் வெ ளியிட்டுள்ளது. ஏற்கன வே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நி லையில், அண்மையில் மேலும் 53 மொழிகளி ல், தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள் ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையா ளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். உள்நாட்டு மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம், அனைத்து தரப்பு மக்க ளிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல் லும் முயற்சியில் வெற்றி பெ றும் வாய்ப்புகள் அதிகரிக் கிறது. பிரவுசர் போட்டியில், மற்ற பிரவுசர்களை முந் திச் செல்ல இது கைகொடு க்கும் என மைக்ரோசாப்ட் எண்ணு கிறது.

இந்த பிரவுசர் வெளியான போது, மைக்ரோசாப்ட் இந் தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப் பந்தம் மேற் கொண்டிருந் தது. இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 9 ஐ பிர பலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது. 1990 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந் தியப் பிரிவு, இந்தியாவில் செயல்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்பு ளோரர் பிரவுசரை உங்கள் கம்ப்யூட் டரில் இயக்க, http://windows.microsoft.com/enUS/internetexplore/downloads/ie9/worldwidelanguages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக டவுண் லோட் செய்து கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விஸ்டா / விண்டோஸ் 7 x 32 / 64 பிட்) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை டவுண்லோட் செய்திடவும். விண்டோஸ் எக்ஸ் பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என் பது உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply