Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பேஸ்புக்கில் செய்த தவறுதலால் ஏற்பட்ட விபரீதம் ?

16 வயது பெண் தனது பிறந்த நாளையொட்டி விழாவில் பங்கேற்க தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பேஸ்புக்  மூலமாக செய்தி அனுப்பினார்.

அந்த செய்தியில் தனது பிறந் தநாள் விழா தனிப்பட்ட விரு ந்து நிகழ்ச்சியாக நடைபெறு கிறது என்பதை குறிப்பிட மற ந்தார். அவரது பிறந்த நாள் விழா பொது நிகழ்ச்சியாக நடைபெறும் என்பதைப் போல பேஸ்புக்கில் செய்தி அனுப் பட்டிருந்தது.
இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த பெண்ணுக்கு தெரியாதவர்கள் எல்லாம் ஹம்பர் க்கில் உள்ள அவரது வீட் டின் முன் பாக பிறந்தநாளின் போது குவிந் தார்கள்.
தனது வீட்டிற்கு முன்பாக ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் வந்து இருக்கிறார்களே யாரையும் தனக் கு தெரியவில் லையே என குழம்பி ய அந்த பெண் வந்திருந்தவர்களை விசாரித்தபோது அவரது பிறந்த நாள் அழைப்பை பார்த்து வந்ததாக தெரிவித்தனர்.
பேஸ்புக்கில் பிறந்தநாள் செய்தியி ல் குழப்பம் ஏற்படுத்திய பெண்ணின் பெயர் தெசா ஆவார். அவரது பிறந்தநாள் பொது நிகழ்ச்சி என கருதிய பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் ஆயிரக் கணக்கில் அந்த பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவ ரது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வர வும் விருப்பம் தெரிவித்தனர்.
இதனால் தெசாவுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. தனது நண் பர்களுக்காக ஏற்பாடு செய்திரு ந்த பிறந்தநாள் விழாவை ரத் து செய்தார். அவர் வேறு ஒரு இடத்தில் பிறந்தநாளை கொ ண்டாட முடிவு செய்தார்.
சனிக்கிழமை அதிகாலை 1.55 மணிக்கு பிறந்தநாள் நிகழ்ச்சி யை போலிசார் முடிவுக்கு கொண்டு வந்தனர். பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வந்த சில பொது நபர்கள் வன்முறையிலும் ஈடுபட்டு கற்களை எறிந்தார்கள். இதனால் அந்த பெண் ணின் வீட்டு கண்ணாடிகள் நொறுங் கின. இந்த சம்பவம் குறித்து போலிஸ் செய் தித்தொடர்பாளர் மிர் கோ ஸ்டெ ய்பர் கூறுகையில்,”பேஸ்புக்கில் தனது பிறந்த நாளுக்கு அழைப்பு விடுத்த பெண் இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட நபர்க ளுக்கான அழைப்பு என்பதை குறிப்பிட மறந்து விட்டார். அதனால் இதுபோன்ற விபரீதம் ஏற்பட்டது” என்றார். சம்பவ இடத்தில் நூற்றுக்ககணக்கான போலிசார் குவிக்கப்பட்ட னர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply