Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்பெல்லிங் செக் – பவர்பாய்ண்ட்

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் நாம் அமைத்திடும் டெக் ஸ்ட் எழுத்துப் பிழை சோத னைக்கு உள்ளாக்கப் படுகி றது. தவறுகள் இருப்பின், அவை சிகப்பு நெளிவான கோடுகளில் காட்டப்படுகி றது. ஆனால் இவற்றை நாம் விரும்புவதில் லை. ஏனென்றால், மற்றவர்க ளுக்கு நாம் சொல்ல விரு ம்பு வதைக் காட்டவே பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத் தப் படுகிறது. ஆனால், அப்போது இந்த தவறுகள் சுட்டிக் காட்டப்படுகையில், பார்ப் பவர்களின் கவனம், நாம் சொல்லிக் கொண்டு வரும் தக வல்களிலிருந்து, வேறு பக்கம் திரும்ப வாய்ப்புண்டு. எனவே இதனைத் தவிர்க்க விரு ம்புவோம். ஆனால், பிழைகளைத் தெரிந்து கொண்டு அவற்றைத் திரு த்தி அமைக்கவும் வேண் டும். இப்படி ப்பட்ட சூழ்நிலையில், பிழைதிருத் தும் ஸ்பெல் செக்கர் வசதியை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். ஸ்பெல்செக்கர் வசதியை முடக்கிவிடாமல், நாம் விரும்பும் நேரத்தில் அதனைக் கொ ள்ளும் வகையில் அமைக்கலாம்.

இதற்கு Office பட்டனை அழு த்தி File டேப்பினைத் தேர்ந் தெடுக்கவும். இங்கு Options என்ற பிரிவிற்குச் செல்ல வும். இதனுள்ளாக, Proofing category என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு When correcting spelling in Power Point என்ற பிரிவில், Hide spelling errors என்று தர ப்பட்டுள்ள இடத்தில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத் தவும். இனி நீங்கள் மீண்டும் ஸ்பெல்லிங் செக் இயக்காத வரை, எழுத்துப் பிழைகளுக்கான கோடுகள் காட்டப்படமா ட்டாது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply