Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ்நாடு திரைபட இயக்குனர் சங்கத்தேர்தலில் வரலாறு காணாத போட்டி

இந்தமுறை போல எந்தமுறையும் தமிழ்நாடு திரைபட இய க்குனர் சங்கத்தேர்தலில் இத்தனை கடுமையான போட்டி இருந்ததில்லை. பாரதிரா ஜா தலைவராகவும், ஆர். கே. செல் வமணி செயளா லராகவும். ஆர்.சுந்தரரா ஜன் பொருளாளராகவும் பதிவி வகித்து வந்த இய க்குனர் சங்கத்தின் செயற் குழு டி40 எ ன்ற நட்சத்திர கலைவிழாவை நடத்திய து. இந்த விழாவின் சாட்டிலைட் உரிமையை 2.60 கோடி கொடுத்து வாங்கியதாம் சன் டிவி. ஆனால் தற்போது இந்தத் தொகையில் 1.60 கோடி மட்டு மே சங்கத் தின் வங்கிக்கண க்கில் வைப்புநிதியாக உள்ள தாம். மீதி 1 கோடி ரூபாயை டி 40 விழாவின் செலவுக்கணக் காக காட்டுவாதாகவும், இத னால் பொருளாளர் ஆர். சுந்த ரராஜன் பதவியை ராஜினா மா செய்து விட்டதாகவும் சொல்லப் படுகிறது.

தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட இளம் கதாநாயகர்கள் பர பரப்பான நிகழ்வு – செலிபிரேட்டி கிரிக்கட் லீக் – CCL – துடுப் பாட்டம் நிகழ்வு படங்கள்

இப்படியொரு நெருக்கடியான சூழ்நிலையில்தான் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங் கத்துகான தேர்தல் வருகிற 19- ஆம் தேதி நடக்க இருக்கி றது. இதில் மொத்தம் மூன்று அணிகள் போட்டியிட இரு ப்பது இயக்குனர் சங்கத்தேர் தலை ரனகளமாக்கி இருக்கி றது. இந்தத் தேர்தலில் தற் போது தலைவராக இருக்கும் பாரதிராஜா மீண்டும் போட் டியிடு கிறார். இவரை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக் குநர் சங்கத் தேர்தலில் போட்டி போட இயக்குநர் சீமானை பலரும் வற்புறுத்தியதாகவும், ஆனால் பாரதி ராஜாவை அப் பா என அன்போடு அழைத்து மரியாதை செய்யும் தான், அவரை எதிர்ப் போட்டியிடு வது தன்னால் முடியாது என நழுவிக் கொண்ட நிலையில், இயக்குநர் அமீர் எதிர்த்துப் போட்டியி டுகிறார்.

சங்கத்தின் செயலாளர் பதவிக்கு இயக்குநர் பாரதிராஜா அ ணியில் உள்ள தற்போதைய செயலாளர் ஆர்.கே.செல்வ மணியும், பொருளாளர் பதவிக்கு எழிலும் போட்டியி டுகிறார்கள். இயக்குநர் அமீர் அணி யில் துணைத் தலைவ ர்கள் பதவிக்கு ஏ.ஆர். முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேன ன் ஆகிய இருவரும் போ ட்டியிடுகிறார்கள்.

செயலாளர் பதவி க்கு இயக்குனர் சேரன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு ஜனநாதன் போட்டியிடுகிறார். இதே அணியில் வசந்தபாலன், சிம்புதேவன், பிரபு சாலமன், ஏ. வெங்கடேஷ், பாலசேகரன் உள்பட பலர் செயற்குழு உறுப் பினர்கள் பத விக்கு போட்டியிடுகிறார்கள்.

இது இவ்வாறாக இரு க்க இம்முறை தேர்த லில் புதிய அணி ஒன்றும் களம் காண இருக்கிறது. புதிய அலைகள் எனப் பெ யர் வைத்து, அணி சேர்ந்து தேர்தலைச் சந்திக்கவிருக் கிறது உதவிய இயக்குனர்களின் அணி. தமிழ்நாடு திரைப் பட இய க்குநர்கள் சங்கத்தில் இயக்குநர்கள், உதவி இயக்கு நர்கள் என மொத்தம் 2,100 பேர் உறுப்பினர்களாக இருக்கி றார்கள். இதில் உதவி இயக்குனர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் போடும் ஓட்டுகளே முக்கிய பதவிகளை தீர்மாணி க்கின்றன. ஆனால் அவர்களுக்குரிய சம்பளத்தைக் கூட சங்கம் ஒழுங்காக பெற்றுத்தருவதில்லை என்கிறார் கள்.

கனவுத் தொழிற்சாலைக் குள் பணிபுரியும் பலநூறு உதவி இயக்குனர்களின் தொழில் நிலையும், வாழ் நிலையும் துயர் நிறைந்த துதான். ஆனாலும் துறை சார் அங்கீகாரம் ஒன்றின் தேவைக்காக, பல்வேறு அவமானங்களையும், பணிக்கான ஊதியத்தினை யும் ஒழுங்காகப் பெற முடி யாதவர்களாக இருப்பதுதான் இன்று வரை உதவி இயக்கு னர்களின் நிலை. இயக்குனர் சங்கத்தின் தலைமைப் பொறு ப்புக்களில் வரும், இயக்குனர்கள் பலரும், ஒரு காலத்தில் தாம் இயக்குனர் களாக இருந்தவர்கள் என்பதையே மறந்து, தமக்கு ஆதர வான சில உதவி இயக்குனர்களை செயற்குழு உறுப்பினர் களாக வைத்துக்கொண்டு, தமது எண்ணப் போக் கிலேயே செயற்படுவதால், உதவி இயக்குனர்களின் உண் மைக் குரல் வெளிப்படுவதில்லை யாம். இதனால் இம்முறை தேர்தலில் புதிய மூன்றாவது அணி போல தேர் தல் களத்தில் இறங்கும் உதவி இயக் குனர்கள், தேர்தலிலும் செயற்குழு உறுப்பினர் பதவிகளையே குறி வை த்துப் போட்டியிடவுள்ளதாகவும் தெரி விக்கப்படுகிறது

பல இயக்குநர்களின் புதிய சிந்தனைகளுக்கு அடிநாதமாக இருக்கக் கூடிய உதவி இயக்குனர்கள், தங்கள் அணிக்கு புதி ய அலைகள் என்று பெயர் வைத்து இருப்பதிலும், அவர்க ளின் புதிய சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரி ய வருகிறது. பிரெஞ்சு சினிமாவில் புதிய தாக்கத்தி னை ஏற்படுத்திய புதிய அலையின் குறியீடாக இந்தப் பெய ரைத் தெரிவு செய்துள்ளதாகவும், சீமானின் உதவி இயக்குனர் களில் ஒருவரே இந்த அணிக்கு ஒருங்கிணைப்பாளரா கச் செயற்படுவதாகவும், நடைபெறவுள்ள இயக்குநர் சங்கத் தேர்தல், புதிய மாற்றங்களைத் தரும் எனவும் உதவி இய க்குனர்கள் அணி வென்றால் அவர்களுக்கு நல்லது நடக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply