Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இமெயிலை டியூன் செய்ய வசதி

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் கடிதங்களை, அவற்றைப் பெறு பவர்கள் கவனத்துடன் படிக்க வேண் டும் எனில், அவற்றைச் சற்று வரையறைகளுக்குள் அமைப்பது நல் லது. அவை என்ன என்று இங்கு பார்க்க லாம்.

பள்ளி வகுப்புகளில் நம் ஆசிரி யர்கள், கடிதம் ஒன்று எப்படி எ ழுதப்பட வேண்டும் என பாடம் நடத்தி இருப்பார். தேதி, பெறுப வரை வாழ்த்திச் சொல்லும் சொற்கள், உங்கள் முகவரி போன்றவை இருக்க வேண்டும் எனக் கூறி இருப்பார்கள். அவற்றை இங்கும் பின்பற்றலாம். இன்னும் சில பயனுள்ள தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

சுருக்கமாக: வேகமாக அஞ்சல்கள் சென்றடைய வேண்டும்; நம் செய்தி பெறுபவரை உடனே அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான், நாம் மின் னஞ்சல்களைப் பயன்படுத்து கிறோம். எனவே, நாம் தெரி விக்க விரும்பும் தகவல்க ளையும் சுருக்கமாக, மின்ன ஞ்சல் கடிதத்தில் அமைக்க வேண்டும். நாம் எழுதுவது ஒரு புத்தகமோ அல்லது காதல் கடிதமோ அல்ல; சில தகவல்கள். எனவே சுருக்க மாக அவற் றை அமைப்பது உங்களுக்கும் பெறுபவருக்கும் சரியான தகவல் தொட ர்பினை ஏற்படுத்தும்.

சிறிய சப்ஜெக்ட் வரி: மிக நீளமான சப்ஜெக்ட் வரியும், சப்ஜெ க்ட் கட்டத்தில் ஒன்றுமே எழுதாமல் அனுப்புவதும் தவறு. உங்கள் கடிதம் குறித்த பொருளைத் தெரிவிக்கும் ஒன்றிர ண்டு சொற்கள் போதுமே.

எழுத்து மற்றும் இலக்கண சோதனை: நம் கடிதம் பிழைக ளுடன் இருந்தால், நம்மைப் பற்றி அஞ்சலைப் பெறுபவர் என்ன நினைப்பார்? கடிதம் எழுதி முடித்த பின்னர், எழுத் து மற்றும் இலக்கண பிழைக ளைத் திருத்திய பின்னரே, அஞ்சலை அனுப்புதல் நல் லது.

சுருக்கு சொல், குறும்படங் கள் எதற்கு?
சொல் தொடர்களின் முன் எழுத்துக்கள் (Acronyms) அட ங்கிய சொற்கள் மற்றும் எனப்படும் குறும்படங்கள் பயன் படுத் துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்குத் தெரிந்திருக் கலாம்; பெறுபவருக்குத் தெரிந்திருக்கும் என்று என்ன உறு தி. அதே போல இந்த குறும் படம் எதற்கு என்று எண்ணு ம் அளவிற்குப் பல குறும் படங்கள் உள்ளன. எனவே, இவற்றை அமைத்து உங் களின் மற்றும் பெறுபவரின் நேர த்தை வீணடிக்க வேண் டாமே.

பெரிய எழுத்துக்கள் எதற்கு?
ஒரு சிலர், தங்களின் கடிதத்தில் உள்ள செய்தி மிக முக்கி யமானது என்ற எண்ணத்தில், அனைத்தும் பெரிய கேப்பிடல் எழுத்துக்களால் செய்தியை அமைப்பார் கள். இது, கோபத்தில் கத்திப் பேசுவதற்கு இணையாகும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.

நகல்கள்: உங்கள் கடிதத்தின் நகலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்ப வேண்டாமே! யாருக்கு அஞ்சலில் உள்ள தகவல்கள் சேர வே ண்டுமோ, அவர்களின் முக வரிக்கு மட்டும் அனுப்ப லாமே! தேவையற்ற பலரு க்கு அனுப்புவது நல்ல தில் லை. மேலும் அவர் களின் மின்னஞ்சல் முகவ ரிகள் ஏன் அனைவரு க்கும் தெரிய வேண்டும்?

பெயர் கூறி வாழ்த்து: உங் கள் அஞ்சலைப் பெறுபவரின் பெயருடன், அவரை அன்பாக அழைக்கும் சொல்லையும் சேர்த்து எழுதுவது, உங்களின் நல்ல குணத்தை எடுத்துக் காட்டும்.

முடிவு: கடித முடிவில் நீங்கள் சொல்ல வந்த செய்தியினை முடித்து விட்டீர்கள் என்று தெரியு ம்படி ஒரு வரி சேர்க்க வேண்டும். உங்கள் பெயர் அல்லது டிஜிட்டல் கையெழுத் தினை இணைக்கலாம்.

தொடரைக் காட்டுக: மின்னஞ்சல் செய்தி ஒன்றுக்கு நீங்கள் பதிலளிக் கையில் ரிப்ளை பட்டன் அழுத்தி அமைப்பது நல்லது. அப்போதுதா ன், எந்த விஷயத்திற்கு நீங்கள் பதில் எழுது கிறீர்கள் என்று மற் றவர்களும் தெளிவாக அறிய முடியும். ஏற்கனவே வந்த கடிதம் மிக நீளமாக இருந்தால், முக்கிய தகவல் அடங்கிய வரிகளை மட்டும் இணைக் கலாம்.

எப்போதும் மரியாதையுடனும், அன்புடனும் மற்றவருக் கான அஞ்சலை அமைக்கவும். இவர் தானே, அல்லது இவன் தானே என்ற முறையில் எப்படியும் அமைக்கக் கூடாது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: