தகவல் அறியும் உரிமை சட்ட ஓட்டைகள்: மாஜி ஆணையர் வேதனை
“மக்களின் வரப்பிரசாதமாக உள்ள தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் குறைபாடு கள் களையப்பட வேண்டும்,” என, முன்னாள் மாநில தலைமை தகவல் ஆணையர் ராமகிருஷ் ணன் பேசினார். இந்திய அதிகாரிகள் சங்கத் தின் சார்பில், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அதில் உள்ள இடர்பாடு’ என்ற தலைப்பில், சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில், சங்க பொதுச் செயலர் செல்லமுத்து வரவேற்றார். இதில், முன்னாள் மாநில முத ன்மை தகவல் ஆணையர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:
சமூக ஆர்வலர்களால் இயற்றப்பட்ட முதற்சட்டம், தகவல் உரிமை பெறும் சட்டம். தற்போது, லோக்பால் சட்டம் கொ ண்டு வர காட்டும் ஆர்வத்தை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளையும் களைய காட்டுவது நல்லது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், இன்று பல் இல் லாத சட்டமாக அமைந்திரு ப்பது, அரசு இயந்திரம் எவ் வாறு செயல்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகி றது. தவறு இழைத்தவர் களுக்கு அளிக்கும் தண்ட னைகளிலும், அதை பெற்று த் தரும் நடைமுறை சிக்கல் களை நீக்குவதற்கும், தற்போதைய சட்டத்தில் உரிய வழிவகை இல்லை. ஆகவே, அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் இச்சட்டம் குறித்து அதிருப்தியடைந்துள்ளனர். இருப்பினும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் முன்பை விட பல்வேறு துறைகள் குறித்தும், அவற்றின் நடைமுறை குறித்தும் அறிய முடி வதால், அது ஏழைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இவ் வாறு ராமகிருஷ்ணன் பேசினார்.
இதில், தமிழக அரசின் முன்னாள் இணைச் செயலர் கிருஷ் ணகுமார் பேசும்போது, “பொதுமக்கள், தங்களுக்கு வேண் டிய தகவல்களைப் பெறுவதற்கு என்னென்ன உரிமைகள் இந்த சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன என்பதை, முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், இத்தகவல்களை யாரி டமிருந்து பெற வேண்டும், யார் இந்த தகவல்களை அளிக்க வேண்டும், எப்படிப்பட்ட தகவல் அளிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பவற்றையும் தெரிந்து கொள்ள வே ண்டும்’ என்றார்.
நிகழ்ச்சியில், இந்திய அலுவலர் சங்கத்தின் தலைவர் பூர்ண லிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Please tell me whether a teacher or a government staff can give the copy of his certificates for RTI? Please send your reply through email given. Thank You.
i will send email very soon